ஒரு காலத்தில் எப்படி இருந்த கோயம்பேடு, இப்ப இப்படி ஆகிடுச்சே.. கிளாம்பாக்கம் வரலாம்.. ஆனால்
சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்துநிலையம் ஒரு காலத்தில் எப்படி இருந்தது தெரியுமா? 2002ம் ஆண்டில் சென்னையின் புறநகர் பகுதியாக கோயம்பேடு இருந்தது. அப்படியே மதுரவாயல் பைப்பாஸ் வழியாக சென்னைக்குள் வாகனங்கள் வந்து சென்று வந்தன. காலம் எவ்வளவு வேகமாக சுற்றும் என்பதற்கு கோயம்பேடு உதாரணமாகி, வெறிச்சோடி நிற்கிறது. காரணம்.. கற்பனைக்கும் எட்டாத வளர்ச்சியை கோயம்பேட்டை சுற்றி நடந்தது. ஆனால் கிளம்பாக்கத்தாலும், வரப்போகும் குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தாலும் எல்லாமே மாறப்போகிறது.
சென்னை பாரிமுனை தான் சென்னையின் புறநகர் பேருந்துகள் வந்து செல்லும் இடமாக 2000களில் இருந்தது. ஆனால் அப்போது இப்போது உள்ளது போல் ஐடி நிறுவனங்கள் இல்லை.. வானுயுர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் இல்லை.. மக்கள் நெருக்கமும் இந்த அளவிற்கு இல்லை.. ஆனாலும் நெரிசல் மிக அதிகமாகவே இருந்தது. அப்போது நகரத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் கோயம்பேட்டில் புதிய பஸ் நிலையம் கட்டமைக்க திட்டமிடப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1999-ம் ஆண்டு ஜூன் 6-ந் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. அடுத்த 3 ஆண்டுகளில் பேருந்துநிலையம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கோயம்பேடு பேருந்து நிலையம் 2002-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது.

எளிதாக பயணம்
கோயம்பேடு பேருந்துநிலையம் தொலைநோக்கு பார்வையுடன் கட்டப்பட்டதாக சொல்ல காரணம், மதுரவாயல் பைப்பாஸ் சாலை.. தாம்பரத்தில் எடுத்தால் நேராக போரூரை கடந்து அப்படியே மதுரவாயலில் வரும் வகையில் பைப்பாஸ் அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல் நகரத்தின் வடபழனி, அரும்பாக்கம், அண்ணா நகர், கேகே நகர், விருகம்பாக்கம் என கோயம்பேட்டை சுற்றிலும் வேகமாக வளர்ந்து வந்த பகுதிகள் இருந்தன. அந்த பகுதி மக்கள் எளிதாக பேருந்துகளில் ஏறி வெளியூர்களுக்கு சென்று வந்தன.
அசுர வளர்ச்சி
இதனால் அந்த பகுதிகளில் வளர்ச்சி மின்னல் வேகத்தில் அதிகரித்தது. கோயம்பேடு பேருந்து நிலையத்தின் தாக்கம் ஆவடி வரை இருந்தது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தினசரி ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டதுடன், லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் இடமாக இருந்தது. அதேநேரம் சென்னையின் மையப்பகுதி மக்கள் தாம்பரம் அல்லது கிண்டியில் இறங்கி ரயிலில் ஏறி செல்ல முடியும் என்கிற நிலை இருந்தது. எளிதாக போக்குவரத்து இணைப்பு வசதி கோயம்பேடு உடன் இருந்தது. ஆனால் அதிகப்படியான நெரிசலால் திணறியதால் கோயம்பேடுக்கு மாற்று தேவைப்பட்டது.
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்
ஏனெனில் சென்னை மாநகரமே கோயம்பேடு வந்து செல்லும் பேருந்துகளால் இரவுகளில் ஸ்தம்பித்தது. போதாத குறையாக மெட்ரோ பணிகளும் நடந்த காரணத்தால் பேருந்து நிலையத்தை வெளியே கொண்டு செல்ல அரசு விரும்பியது. இதன்படி கோயம்பேடு பஸ் நிலையத்தை வண்டலூர் அருகே மாற்ற முடிவு செய்யப்பட்டது . அதன்படி, 2012-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதி அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு, 2019-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந் தேதி அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ஸ்டாலின் திறப்பு
கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்திற்கு தற்போது கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிடப்பட்டிருக்கிறது. தற்போது தென்மாவட்டம் செல்லும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்கத் தொடங்கி உள்ளன. இதேபோல் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மேற்கு பேருந்துகளுமே கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படுகின்றன. இதனால், மக்கள் கோயம்பேடு செல்வது குறைந்தது.
கோயம்பேட்டில் பேருந்துகள்
தற்போதைய நிலையில் கோயம்பேட்டில் இருந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் பெங்களூர், ஓசூர், வேளாங்கண்ணி, கும்பக்கோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் 90 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. வார இறுதியில் சற்று அதிகமாக இயக்கப்படுகிறது. அதேபோல் கர்நாடகா மாநிலம் பெங்களூர், வேலூர் வழித்தடத்தில் செல்லும் கிருஷ்ணகிரி, ஓசூர், வேலூர் வழி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆந்திர பேருந்துகள் மாதவரத்துடன் நின்றுவிட்டன. இதனால் கோயம்பேட்டில் இப்போது பூந்தமல்லி வழியாக செல்லும் பேருந்துகள், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
குத்தம்பாக்கம்
தற்போது பூந்தமல்லி அருகே சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் குத்தம்பாக்கம் பகுதியில் புறநகர் பஸ் நிலையம் ரெடியாகி வருகிறது. ஆகஸ்டு மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரப்போகிறது. அதன்பிறகு கோயம்பேட்டில் தற்போது இயங்கி வரும் சொற்ப பஸ்களும் அங்கு மாற்றம் செய்யப்பட்டு ஆரணி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, குடியாத்தம், தர்மபுரி, சேலம், ஓசூர், பெங்களூர், மைசூர், சித்தூர் மற்றும் திருப்பதி போன்ற நகரங்களுக்கு பஸ்கள் குந்தம்பாக்கத்தில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெறிச்சோடிய கோயம்பேடு
அடுத்ததாக வேளாங்கண்ணி, கும்பக்கோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகை மற்றும் புதுச்சேரி பேருந்துகள் தான் இயங்கும். அதனையும் அரசு தாம்பரத்திற்கோ அல்லது கிளாம்பாக்கத்திற்கோ ஒட்டுமொத்தமாக மாற்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.. ஏனெனில் எதார்த்தம் அதுதான். அதேபோல் ஆம்னி பேருந்துகளையும் அரசு நிறுத்த வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் கோயம்பேடு மொத்தமாக முடிவுக்கு வரப்போகிறது. தற்போது காலையில் சென்று கோயம்பேட்டை பார்த்தால் வெறிச்சோடி கிடப்பதை காண முடியும். எப்படி இருந்த இடம்.. இப்ப இப்படி ஆகிடுச்சே என்று சொல்லும் அளவிற்கு தான் கோயம்பேடு பேருந்து நிலையம் இருக்கிறது.
கிளாம்பாக்கம் மாறிவிடக்கூடாது
காலம் எவ்வளவு வேகமாக சூழல்கிறது என்பதற்கு கோயம்பேடு பேருந்து நிலையம் உதாரணமாக தாங்கி நிற்கிறது. ஆனால் கோயம்பேடு போல் கிளாம்பாக்கமும் மாறாமல் இருந்தால் நல்லது. ஏனெனில் இதற்கு மேல் பேருந்து நிலையத்தை நகரத்தை விட்டு வெளியேற்ற முடியாது. இப்போதே சென்னைக்கு பேருந்தில் ஏறினால் செங்கல்பட்டில் இறங்க வேண்டிய நிலை இருக்கிறது. இனியும் பேருந்து நிலையங்களை நகருக்கு வெளியே தள்ளும் கலாச்சாரத்தை அரசு முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications