"வார்த்தைய" விட்ட எடப்பாடி.. ஓபிஎஸ் பற்றி கேட்டதுமே ரியாக்ஷனை பாருங்க.. அப்பறம் அந்த "ஆடியோ" மேட்டர்
சென்னை: டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையும், அதையொட்டிய அவரது செய்தியாளர் சந்திப்பும் தமிழக அரசியலில் மிகுந்த கவனத்தை ஏற்படுத்தி வருகிறது.
இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.. இந்த சந்திப்பின்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இருந்திருக்கிறார்..
அப்போது 2 தரப்பிலும் சில முக்கிய விவகாரங்கள் பேசப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.. முக்கியமாக, அதிமுக பிரச்சனைகள் தொடர்பாக பேசியிருக்கிறார்கள்.. 2 தரப்பும் தேர்தலில் பிரிந்து சென்று சந்தித்தால் தோல்விதான் கிடைக்கும் என்றும், அதனால், இனிவரும் நாட்களில் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்றும் அமித்ஷா வலியுறுத்தியதாக தெரிகிறது.

சீட் ஒதுக்கீடு: அதேபோல, எம்பி தேர்தல் குறித்த சீட் விவகாரமும் பேசப்பட்டுள்ளது.. இதுவரை அண்ணாமலையுடன் கூட்டணி தொடர்பாக அதிமுக பேச்சுவார்த்தை எதையும் நடத்தாத நிலையில், இன்று டெல்லியில் வைத்தே அமித்ஷா முன்னிலையிலேயே இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.. அப்போது, "தமிழகத்தில் பாஜகவிற்கு எத்தனை சீட் ஒதுக்கப்படும் என்பதை இப்போதே சொல்ல வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா கேட்டதாக கூறப்படுகிறது...
அதற்கு எடப்பாடி பழனிசாமி, "அதிமுக இந்த முறை, மிகப்பெரிய அளவில் கூட்டணி அமைக்க இருப்பதால், இப்போதே எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியாது" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாராம்.. எப்படி பார்த்தாலும், 5 முதல் 7 தொகுதிகளை பாஜகவிற்கு அதிமுக ஒதுக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. ஆனால், மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீனிவாசன், பிரபல டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தான் கேள்விப்பட்ட சில விவரங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பேச்சுவார்த்தை: குறிப்பாக, "இன்று நடந்த பேச்சுவார்த்தையில், சீட் எத்தனை என்பது உட்பட எந்தெந்த இடங்களில் போட்டி என்பது வரை பேசப்பட்டிருக்கிறது.. எடப்பாடி பழனிசாமியிடம், மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளை பாஜக தரப்பில் கேட்டிருக்கிறார்கள்.. அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டுவிட்டார்.. அந்தவகையில், பாஜக 13 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது. 39-ல் 13 சீட்டுக்களை ஒதுக்க எடப்பாடியும் சம்மதித்துவிட்டார்.. 15 சீட்டுக்களை அதிமுக ஒதுக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. ஆனால், 13 சீட்டுக்கள் நிச்சயம்" என்று அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு, செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டி தந்தார்.. அப்போது அண்ணாமலையுடன் எந்தவிமான மோதல் போக்கும் தனக்கு இல்லை என்றார்.. "எல்லோரும் அவரவர் கட்சியை வளர்க்கத்தான் பார்ப்பார்கள். அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் சுதந்திரமாக செயல்படும் கட்சிகள். திமுகவில் உள்ளது போன்ற அடிமை கட்சிகள் இல்லை. அந்தந்த கட்சிகளுக்கு கொள்கை இருக்கிறது. கொள்கையின் அடிப்படையில் அவர்கள் செயல்பாடுவார்கள். கூட்டணி என்று வரும்போது ஒற்றுமையாக செயல்பட்டு கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வோம்" என்றார்.
அதெப்படி முடியும்: இதற்கு பிறகு ஓபிஎஸ் குறித்தும், அவர் நடத்திய திருச்சி மாநாடு குறித்து எடப்பாடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.. மேலும் ஓபிஎஸ் மனம் மாறி வந்தால் அவரை கட்சியில் இணைத்து கொள்வீர்களா? என்றும் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, "ஏற்கனவே இதை நான் சொல்லிவிட்டேன்.. பொதுச்செயலாளராக நான் தேர்வு செய்யப்பட்டவுடனேயே, உங்களை போல நிருபர்கள் என்னை கேட்டார்கள்.. அவர்களிடம் தெளிவாக சொல்லிட்டேன்..
ஒருசிலரை தவிர்த்து, அதிமுக மீது நன்மதிப்பு வைத்து, மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விசுவாசமிக்கவர்கள் யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்கள் எல்லாரும் கட்சிக்கு வரலாம்.. இந்த கட்சிக்கு துரோகம் இழைப்பவர்கள் யாராக இருந்தாலும், இந்த கட்சியில் இடமில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டேன்.. அதுல யார் யார் இடம்பெற மாட்டார்கள் என்பதை நீங்களே யோசனை பண்ணிக்குங்க..

ஆடியோ மேட்டர்: ஆமா, எல்லா கேள்வியும் என்னையே கேட்கறீங்க இல்ல, நான் ஒரு கேள்வியை இப்போ உங்களிடம் கேட்குறேன்.. ஏன் அந்த ஆடியோ இப்படி வந்தது? என்று யாராவது ஒருத்தராவது கேட்டீங்களா? என்மீது மட்டும் கேட்கறீங்களே, ஆடியோவில் இப்படிப்பட்ட செய்தி வந்திருக்கிறதே.. அதுவும் நாட்டுக்கே மிக அதிர்ச்சிகரமான செய்தியாக உள்ளது.. அதை பற்றி யாராவது கேட்டீங்களா? இது முழுக்க முழுக்க முதலமைச்சர் ஸ்டாலினின் குடும்பத்தை சேர்ந்தவர்களின் பிரச்சனை.. இவ்வளவு பிரச்சனைக்கும் ஆட்பட்டவர்கள் அந்த குடும்பத்தில் இருப்பவர்கள்.. இதை நான் சொல்லல..
வாயே திறக்கலையே ஏன்?: ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவையில் இருக்கக்கூடிய நிதியமைச்சர் சொல்கிறார்.. ஏன் நிதியமைச்சர் பேசியதற்கு இதுவரை வாயை திறந்து முதலமைச்சர் ஸ்டாலின் பதில் சொல்லவில்லை.. எது எதுக்கோ பதில் சொல்றாரே, இதுக்கு ஏன் சொல்லல? தன்னுடைய மகன் மீதும், மருமகன் மீதும் குற்றச்சாட்டை சொல்லும்போது, இதுவரைக்கும் ஏன் பதில் சொல்லவில்லை. இங்கேதானே சந்தேகம் வருது" என்று காட்டமாக கூறினார் எடப்பாடி பழனிசாமி.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications