கிடுக்கிப்படி போட்ட அமலாக்கத் துறை.. கோபமாக செந்தில் பாலாஜி கோர்த்துவிட்டது யாரை தெரியுமா?
சென்னை: செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை கேட்ட கேள்விகளுக்கு ஒரு கட்டத்தில் கோபமடைந்த அவர் இதெல்லாம் யாருக்கு தெரியும் எனபதையும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவரை நீதிமன்ற உத்தரவின்படி அமலாக்கத் துறை அதிகாரிகள் 5 நாட்கள் காவலில் எடுத்தனர். அந்த வகையில் அவரை கடந்த 7ஆம் தேதி இரவு முதல் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செந்தில் பாலாஜியிடம் என்னென்ன கேள்விகளை கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் 400 கேள்விகளை அமலாக்கத் துறையினர் தயார் செய்து வைத்திருந்தனராம். நாளொன்றுக்கு 50 கேள்விகளை கேட்க திட்டமிட்டிருந்தனர்.
அந்த வகையில் செந்தில் பாலாஜியிடம் தினந்தோறும் 9 மணி நேரம் முதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரிடம் தம்பி அசோக்குமார் கரூரில் கட்டி வரும் சொகுசு பங்களா குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பினராம். மேலும் அந்த பங்களாவில் உங்களுக்கு ஏதேனும் சம்பந்தமிருக்கிறதா என கேட்டனராம். அதறகு செந்தில் பாலாஜி இல்லை என பதிலளித்தாராம்.
செந்தில் பாலாஜி பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது, அப்படியா எனக்கு நினைவில்லை என்றே தெரிவித்து வருகிறாராம். அது போல்தான் தம்பியின் வீடு குறித்த கேள்விக்கு அவர் வீட்டை எப்படி கட்டி வருகிறார் என்பது குறித்து என்னிடம் தம்பி கூறியதாக நினைவே இல்லை என கூறிவிட்டாராம். செந்தில் பாலாஜியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சில கேள்விகளுக்கு இது உங்களுடையதா என கேட்டதற்கு இல்லை என கூறியுள்ளார். அதே சமயம் அதிகாரிகள் அப்போ இது உங்கள் தம்பியுடையதா என கேட்ட போது என்னுடையது இல்லை அவ்வளவுதான் என கூறினாராம். அமலாக்கத் துறையினர் எதிர்பார்த்த கேள்விகளுக்கு செந்தில் பாலாஜியிடம் இருந்து பதில்கள் வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அவருடைய கஸ்டடி நீட்டிக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. பண மோசடி குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த பணம் வேறு எந்த நிறுவனத்திலாவது முதலீடு செய்யப்பட்டதா என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. பெரும்பாலான கேள்விகளுக்கு எனது தம்பிக்குத்தான் தெரியும் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications