சென்னை அயனாவரம் அக்கிரமம்.. அந்த நேரத்திலும் உமரின் "கல்நெஞ்சு".. இதயத்தை கலங்கடித்த பரிதாப பாத்திமா
சென்னை: அயனாவரம் பாத்திமா கொலையின் அதிர்ச்சியிலிருந்து, சென்னை மக்கள் மீளவில்லை.. உண்மையிலேயே என்னதான் நடந்தது பாத்திமாவுக்கு?
அயனாவரம் வசந்தா கார்டன் பகுதியில் வசித்து வந்துள்ளார் 36 வயது சையத் அலி பாத்திமா.. இவரது கணவர் உமருக்கு 37 வயதாகிறது.. கீழ் கட்டளை பகுதியில் உள்ள பிரியாணி கடையில் பிரியாணி மாஸ்டராக வேலை பார்த்து வந்திருக்கிறார் உமர்..

தம்பதி தகராறு: ஆனால், சமீபகாலமாகவே, தம்பதிக்குள் நிறைய கருத்து வேறுபாடு வந்துள்ளது. உமர் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வரவும், இது தகராறாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக பாத்திமாவுக்கும், அவரது மாமியாருக்கும் தகராறு வெடித்துள்ளது.
இதனால், கடந்த 9-ம் தேதி பாத்திமாவின் அம்மா, பல்கீஸ் அயனாவரம் வசந்தா கார்டன் பகுதியில் ஒரு வாடகை வீடு பார்த்து, மகளையும், மருமகளையும் குடியமர்த்தி உள்ளார்.. இந்த புது வீட்டிற்கு, பாத்திமா குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் வரக்கூடாது என்று உமர் தகராறு செய்ததாகவும், இதற்கு பாத்திமா எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த உமர் பாத்திமாவை பிரியாணி கரண்டியால் தாக்கிவிட்டதாகவும் முதலில் செய்திகள் வெளியாகியிருந்தன.
என்ன நடந்தது?: ஆனால், சிறிது நேரத்திலேயே வேறுமாதிரியான செய்திகள் வெளியாகின.. உண்மையிலேயே என்னதான் நடந்தது பாத்திமாவுக்கு? அவர் எப்படி இறந்தார்?
புதிய வீட்டில் குடியேறியதுமே, பால் காய்ச்சியுள்ளார் பாத்திமா.. பிறகு, காய்ச்சிய பாலை, தன்னுடைய வீட்டருகே இருக்கும் அக்கம் பக்கத்தினருக்கு கொடுக்க சென்றுள்ளார்.. அப்போது பாத்திமா பர்தா அணியாமல் சென்றதாக தெரிகிறது. இதைப்பார்த்த உமர் தகராறு செய்யவும், இதுவே வாக்குவாதமாக முற்றியிருக்கிறது. பிரியாணி கரண்டியால் பாத்திமா தலையில் ஓங்கி அடித்திருக்கிறார். இதில் பாத்திமாவுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.. பலத்த காயமடைந்து மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
பர்தா : பிறகு, உமர் வீட்டிலிருந்த 2500 ரூபாய் பணத்தையும் எடுத்து கொண்டு தப்பிச்சென்றுள்ளார். இதனிடையே பாத்திமாவின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, அவரை மீட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.. ஆனால், சிகிச்சை பலனின்றி பாத்திமா நேற்று உயிரிழந்தார்..
இதனால் கொலை வழக்காக மாற்றம் செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் அயனாவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து உமரை கைது செய்து, சிறையிலும் அடைத்துள்ளனர்.
வாடகை வீடு: பாத்திமாவுக்கு கல்யாணம் ஆகி 4 மாதம்தான் ஆகிறது.. உமருக்கு சரியான சம்பளம் இல்லாததால், வீட்டு வாடகைகூட தர முடியாமல் இருந்திருக்கிறது.. பாத்திமாவின் அம்மா பல்கீஸ் என்பவர்தான், இவர்களை கவனித்து வந்துள்ளார்.. சம்பவத்தன்றுகூட, தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.. சம்பவ இடத்திற்கு வந்து மருமகன், மகளை சமாதானப்படுத்தி விட்டு, வீட்டிற்கு கிளம்பி சென்றுள்ளார் பல்கீஸ்.
ஆனால், அன்றைய தினமே இரவு 11 மணிக்கு மறுபடியும் கணவன் – மனைவிக்குள் தகராறு வந்துள்ளது.. அப்போதுதான், உமர், வீட்டிலிருந்த பிரியாணி கரண்டியை எடுத்து, பாத்திமா தலையில் பலமாக 2 முறை ஓங்கி அடித்துள்ளார். அப்போதே ரத்த வெள்ளத்தில் பாத்திமா மயங்கி விழுந்திருக்கிறார்.. பிறகு, 12 மணி அளவில் உமர், பாத்திமாவின் தம்பி பீர் முகமது-க்கு போன் செய்து, நடந்ததையெல்லாம் சொல்லிவிட்டு கிளம்பி உள்ளார்.
மச்சான்: அப்போதுகூட, பாத்திமாவின் பர்சில் இருந்த ரூ.2500 பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பாத்திமாவின் தம்பி பீர்முகமது, அம்மா பல்கீஸை அழைத்துக் கொண்டு விரைந்து வந்துள்ளார்.. ரத்த வெள்ளத்தில் கிடந்த பாத்திமாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்..
தீவிர சிகிச்சை பிரிவில்தான் பாத்திமாவை அனுமதித்திருக்கிறார்கள்.. ஆனால் உமர் பிரியாணி கரண்டியால், பாத்திமாவை ஓங்கி அடித்ததில், மூளைக்கு செல்லும் நரம்பில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறது.. இதனால், கடந்த 2 நாட்களாகவே பாத்திமாவுக்கு சுயநினைவு இல்லை.. தொடர்ந்து சிகிச்சை அளித்தும்கூட, பாத்திமா நேற்று இறந்துவிட்டார்.
கொலை முயற்சி: இனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக புகார் தரவும், உமரை போலீசார் தேட ஆரம்பித்தபோது, கோயம்பேடு பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தாராம்.. அங்கேயே அவரை கைது செய்து, கொலை முயற்சி வழக்கில் சிறையில் அடைத்தனர். ஆனால், பாத்திமா இறந்ததுமே, உமர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பாத்திமாவுக்கு கல்யாணத்தில் இஷ்டமே இல்லையாம்.. தனக்கு திருமணமே வேண்டாம் என்று பல காலமாகவே சொல்லி வந்தாராம்.. 36 வயதுவரை திருமணத்தை தவிர்த்து வந்திருக்கிறார்..
பரிதாப பாத்திமா: இறுதியில், குடும்பத்தாருக்காக மனம் மாறி, கல்யாணத்துக்கு சம்மதித்திருக்கிறார்.. அதற்கு பிறகுதான், இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய ரவிக்குமார் (எ) உமரை திருமணம் செய்து கொண்டாராம். எப்படியோ, கடைசிவரை சுயநினைவே இல்லாமல், பாத்திமாவின் உயிர் பரிதாபமாக பிரிந்து சென்றுவிட்டது...!!!
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications