பசுமை கட்டிடம்.. நீங்க சொந்த வீடு கட்ட போறீங்களா? புதிய தரச்சான்றிதழ்? மத்திய அரசின் அதிரடிய பாருங்க
சென்னை: மிக குறைந்த அளவில் எரிசக்தியை பயனபடுத்தும் வகையிலும், கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கும் வகையில் கட்டப்படும் கட்டிடங்களுக்கும் "நெட் ஸீரோ" என்ற புதிய தரச்சான்று நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகி உள்ளது.
மரங்களை நடுவது, அதிக புகையை வெளியிடும் வாகனங்களுக்கு தடை விதிப்பது என சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்கான முயற்சிகள் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் பசுமைக்கட்டிடம்.

பசுமைக்கட்டிடம்: பசுமைக்கட்டிடம் என்றால் என்ன? இயற்கையான பொருட்களை பயன்படுத்தியும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை பயன்படுத்தியும் கட்டிடம் கட்டப்படுவதுதான், பசுமைக்கட்டிடம் எனப்படும். மின்சார பயன்பாட்டைக் குறைப்பதுதான் இதன் முக்கிய நோக்கமாகும்.
வீட்டை சுற்றிலும்,மரம் செடிகளை அமைக்கும்போது, ஆக்ஸிஜன் உற்பத்தியும் அதிக அளவில் நடைபெறும்,, இதனால், அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு சுத்தமான காற்று கிடைக்கும்...
ஆரோக்கியம் தழைக்கும்: அதுமட்டுமல்ல, பசுமைக் கட்டிட முயற்சிகள் மூலம் மின்சார பயன்பாட்டையும், தண்ணீரையும் இதன்மூலம் மிச்சப்படுத்த முடியும். அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கவும், இயற்கை சூழலில், பாதிப்புகளை ஏற்படுத்தாத கட்டிடம் கட்டுவதுதான் இதன் தலையாய நோக்கமாக உள்ளது..
இந்நிலையில், இந்திய தொழிலக கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட, இந்திய பசுமை கட்டடங்கள் கவுன்சில் சார்பில், பசுமை கட்டடங்கள் குறித்த மாநாடு மற்றும் கண்காட்சி சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டை துவக்கி வைத்து, பசுமை கட்டடங்களுக்கான புதிய தரச்சான்று நடைமுறையை வெளியிட்டு, இந்திய பசுமை கட்டிடங்கள் கவுன்சில் தலைவர் குர்மித் சிங் அரோரா பேசியதாவது:
தரச்சான்றுகள்: "பசுமை கட்டிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, பசுமை கட்டிடங்களுக்கான பல்வேறு தரச்சான்றுகளை, ஐஜிபிசி வழங்கியும் வருகிறது.. இப்போதைக்கு, 1,042 கோடி சதுர அடி அளவுக்கு பசுமை கட்டிட பரப்பளவு நாடு முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், இதற்கு, 31 வகையான தரச்சான்றுகளும் வழங்கப்படுகின்றன.
அதேபோல, மிக குறைந்த அளவில் எரிசக்தியை பயனபடுத்தும் வகையிலும், கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கும் வகையில் கட்டப்படும் கட்டிடங்களுக்கும் "நெட் ஸீரோ" என்ற புதிய தரச்சான்று நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதை பெறும் கட்டிடங்களால், சுற்றுச்சூழல் பாதிப்புகள் வெகுவாக குறையும்" என்றார்.












Click it and Unblock the Notifications