வருவாய்த்துறை வேற லெவல்.. ஜமாபந்தியில் இந்த மேட்டர் தெரியுமா.. ஆன்லைனிலேயே பிரச்சனை தீரும் பாருங்க
சென்னை: பொதுவாக வீடுகள், மனைகள், நிலங்கள் வாங்குபவர்கள் அதற்கான ஆவணங்களை தந்துதான் அவைகளை பெற வேண்டும். ஆனால், அத்தகைய ஆவணங்களில் சில சொற்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். வருவாய்த்துறையில், புழங்கப்படும் ஒரு சொல்தான் ஜமாபந்தி.. இதன் முழு அர்த்தம், இதன் செயல்பாடுகள் என்ன என்பதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
"ஜமாபந்தி" என்றால், ஏதோ தாலுகா அலுவலகத்தில நடக்கும் விருந்து என்று பலர் நினைக்கிறார்கள்.. நம்முடைய நாட்டின் நிர்வாகத்துறையாக விளங்கி கொண்டிருக்கும் வருவாய்த்துறையில், தவிர்க்க முடியாத சொல் இந்த ஜமாபந்தி. பல நூறு ஆண்டு காலமாகவே, எந்த ஆட்சி மாறினாலும், இந்த ஜமாபந்தி நடந்து கொண்டேயிருக்கும்.
"ஜமாபந்தி" என்பது இந்தி சொல் என்பதால், திமுக ஆட்சிக்காலத்தில் இதற்கு "வருவாய் தீர்வாயம்" என்று பெயர் மாற்றப்பட்டது.. ஆனாலும், ஜமாபந்தி என்றே பலரால் இன்றும் நடைமுறையில் அழைக்கப்பட்டு வருகிறது.

பிரச்சனைகள்: பொதுமக்களின் நில உடைமைகளை உறுதி செய்வதற்காக நடைபெறும் கூட்டமாகும்.. மக்களின் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், அன்றைய மன்னர்கள், அதற்கு பிறகு வந்த ஆங்கிலேயர்கள் காலம் முதலே வழக்கத்தில் இருந்து வருகிறது..
அந்தந்த கிராமங்களின் வருவாய் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, பட்டா மாறுதல்கள் செய்யப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள், பதிவேடுகளில் இருக்கிறதா? இல்லையா? என்பது ஆய்வு செய்யப்படும் கூட்டம்தான் ஜமாபந்தி. இதில், பயிர் கணக்குகளும் ஆய்வு செய்யப்படும்.
வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட கோரிக்கை மனு ஏதாவது இருந்தாலும், அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட மக்கள் முன்கூட்டியே தந்துவிடுவார்கள். இதற்கு பிறகு ஒரு தேதி குறிக்கப்பட்டு, ஜமாபந்தி நடத்தப்படும். இந்த மனுக்கள் மீது, ஜமாபந்தி நாளில் தீர்வு கிடைத்துவிடும்.
எப்படி நடத்தப்படும்: ஜமாபந்தி கூட்டம் நடத்தப்பட உள்ளதென்று, முன்கூட்டியே, பொதுமக்களுக்கு சொல்லிவிடுவார்கள். இந்த அறிவிப்பை ஊர் தலையாரி, வீடுகள்தோறும் தெரிவித்து வருவார்.. கையெழுத்து வாங்குவார்.. தாலுகா அலுவலகங்களில் 10 நாட்கள் இந்த கூட்டம் நடைபெறும்.. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவற்ற முதியோர்கள் உட்பட இப்படி எத்தனையோ வெகுஜன மக்கள் அரசின் சலுகைகளை பெற இந்த ஜமாபந்தி உதவுகிறது.
பசலி ஆண்டு எனப்படும், விளைச்சலை கணக்கிடும், ஜூன் - ஜூலை வரையிலான விளைச்சல் கணக்கிடப்படுகிறது. இவைகளை சரிபார்த்து தணிக்கை செய்து ஒப்புதல் அளிக்கவே, ஜமாபந்தி நடத்தப்படுகிறது. கிராம நிர்வாக அலுவலரின் அனைத்து பதிவேடுகளை சரிபார்த்து, ஜமாபந்தி அலுவலர் ஒப்புதல் தருவார்..
தீர்வு: அரசு அலுவலர்களால் பலகாலமாக இழுத்தடிக்கப்படும் கோரிக்கைகளுக்கும், புகார்களுக்கும், பொதுமக்கள் இந்த ஜமாபந்தியில்தான் உடனடி தீர்வை பெறுவார்கள். அதனால்தான், அனைத்துத்துறை அதிகாரிகளும் இந்த ஜமாபந்தியில் நிச்சயம் பங்கேற்பார்கள்.

எப்படி நடத்தப்படும்: ஜமாபந்தி கூட்டம் நடத்தப்பட உள்ளதென்று, முன்கூட்டியே, பொதுமக்களுக்கு சொல்லிவிடுவார்கள். இந்த அறிவிப்பை ஊர் தலையாரி, வீடுகள்தோறும் தெரிவித்து வருவார்.. கையெழுத்து வாங்குவார்.. தாலுகா அலுவலகங்களில் 10 நாட்கள் இந்த கூட்டம் நடைபெறும்.. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவற்ற முதியோர்கள் உட்பட இப்படி எத்தனையோ வெகுஜன மக்கள் அரசின் சலுகைகளை பெற இந்த ஜமாபந்தி உதவுகிறது.
ஜமாபந்தி மனுவை ஆன்லைனிலும் அளிக்கலாம்.. யார் யார் இந்த மனுவை அளிக்கலாம் தெரியுமா?
ஜமாபந்தி மூலம் பட்டா, சிட்டா பற்றின விவரங்களை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த மனு கொடுக்கலாம். அல்லது குடிநீர் வசதி, சாலை வசதி, மயான வசதி, கழிவுநீர் சாக்கடைவதி போன்றவை குறித்து முறையிடலாம். இலவச வீட்டு பட்டா, குடும்ப அட்டை, ஆதரவற்ற மற்றும் முதியோர் - ஓய்வூதியம் கேட்டு மனு கொடுக்கலாம். வீட்டு மனை உள்ளவர்கள் அரசு கடன் மற்றும் மானியம் கோரியும் விண்ணப்பிக்கலாம்.
httpts://tn.gov.in/jamabandhi/ என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் போன் நம்பரை பதிவிட வேண்டும். பிறகு கேப்சா கோடு இருக்கும். அதை உள்ளிட்டு உள் நுழைவு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications