Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன வாதம் இது! செந்தில் பாலாஜி கிட்ட நேரா பணத்தை கொண்டு வந்தா கொடுப்பாங்க? கபிலுக்கு ED கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடம்பு சரியில்லை என ஒரு காரணத்தை சொல்லி ஜாமீன் கேட்பதா என அமலாக்கத் துறை கடந்த 15 ஆம் தேதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வாதம் செய்தது.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், திமுக எம்பியும் வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ ஆகியோர் தங்கள் வாதங்களை கடந்த 15 ஆம் தேதி முன் வைத்தனர்.

Do you know what is the important point raised by ED in Senthil Balaji case

அமலாக்கத் துறை புதிய ஆவணங்களை தற்போது (செப் 15) தாக்கல் செய்துள்ளதால் எங்களது தரப்பு வாதத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கலாமா? என கேட்டது.

அதற்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அமலாக்கத்துறை தரப்பு வாதத்தை முன் வைத்தது. அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதம்: சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதால் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

செந்தில் பாலாஜி மீதான வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துள்ளது. இந்த முறைகேடு இடைத்தாரர்கள் மூலம் நடந்துள்ளது. பணம் கொடுத்த சிலருக்கு வேலை கிடைத்துள்ளது. சிலருக்கு வேலை கிடைக்கவில்லை. வருமான வரி கணக்கை வருமான வரித்துறை ஏற்றுக்கொண்டதாலேயே அது சட்டப்பூர்வமான பணம் ஆகாது என்ற தீர்ப்புகள் உள்ளன

வருமான வரி கணக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டதால் தவறு செய்யவில்லை என்றில்லை. விசாரணையில் தான் அது தெரியவரும். குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் தான், தன் மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி தாம் தவறு செய்யவில்லை நிரூபிக்க வேண்டும். வேலை வேண்டும் எனக்கோரி பணம் கொடுப்பவர்கள் வங்கி மூலம் பணம் கொடுக்கமாட்டார்கள்.

அமலாக்கத்துறை விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வேண்டும் என கோர முடியாது. IPC வழக்குகளுக்கு வேண்டுமானால் அது பொருந்தும். அமலாக்கத்துறை சட்டம் வேறு. அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக இருக்கிறார். சமூகத்தில் சக்தி வாய்ந்த நபராக உள்ளார். எனவே சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. ஜாமீன் வழங்க கூடாது.

ஜாமீன் கோருவதற்கு உடல் நிலை ஒரு காரணம் அல்ல. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இரண்டரை ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களும் உள்ளனர். செந்தில் பாலாஜியின் எலக்ட்ரானிக் பொருட்களை சட்ட விரோதமாக வைத்திருந்ததாக கூறுவது தவறு. ஆவணங்களை சேகரிக்கும் நோக்கிலேயே எலக்ட்ரானிக் பொருட்களை அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதம் செய்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+