தனிநபர் கடன் வாங்குவோர் கவனிக்க வேண்டிய சிக்கலான விஷயமே இதுதான்!
சென்னை: தனிநபர் கடன் வாங்குவோர் கவனிக்க வேண்டிய சிக்கலான விஷயங்களை பற்றி இப்போது பார்ப்போம். மாதம் மாதம் இஎம்ஐ தொடங்கி, வட்டி விகிதம், தவணை காலம் வரை சில விஷயங்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
இன்றைக்கு தனிநபர் கடன் அதாவது பர்சனல் லோன் குறித்த மெசேஜ் பெரு நிறுவனங்களில் கணிசமான சம்பளம் வாங்கும் அனைவருக்கும் வருகிறது. இந்த தனிநபர் கடன் வாங்கிய ஒருவர் தனது தனது அனுபவர்களை பகிர்ந்துள்ளார் . அவரின் அனுபவம் நமக்கு நிச்சயம் நல்ல பாடமாக இருக்கும்.

கடன் வாங்கவே கூடாது என்று நினைத்தவர் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். நகைகளை வைத்து தான் கடன் வாங்கினார். ஆனால் நகைகளை திருப்ப முடியவில்லை. மாதம் மாதம் வாங்கும் சம்பளம் எப்படி கரைகிறது என்றே அவரால் கணிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் திருமண செய்முறைக்காக நகைகளை திருப்பியே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அந்தநேரம் அவருக்கு பர்சனல் லோன் ஆஃபரை ஒரு தனியார் வங்கி தருகிறது. உடனே மகிழ்ச்சியோடு வாங்குகிறார். ஆனால் அடுத்த மாதமே இஎம்ஐ ஸ்டார்ட் ஆகிவிட்டது. அவர் நகையை திருப்ப 3 லட்சத்திற்கும் அதிகமான கடன் வாங்கிய நிலையில், 4 வருடத்திற்கு வட்டியாக கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரை கட்ட வேண்டியதிருந்தது. கட்டியும் முடித்தார்.
அதன்பிறகு மீண்டும் இஎம்ஐ இல் கடன் வாங்க வேண்டிய நிலை வந்தது. இந்த முறை வீட்டிற்கு லீஸ் பணம் கொடுக்க, அதற்கும் அதேபோன்று கடன் வாங்கினார். இந்த முறை 70 ஆயிரம் தான் வட்டி வந்தது. வட்டி குறைவு மற்றும் இஎம்ஐ காலத்தை 4 வருடத்திற்கு பதில் 3 வருடமாக குறைத்து போட்டதால் வட்டி குறைந்தது. அடுத்த முறை கடன் வாங்கவே கூடாது என்று நினைத்தவருக்கு மீண்டும் சிக்கல்.
அடுத்த லோன் வாங்க வேண்டிய நிலை.. ஆனால் அடுத்த முறை உஷாராக வங்கியில் மறுபடியும் நகைகளை அடகுவைத்தே வாங்கினார். நகைகளை திருப்ப இரண்டு வருடம் போராடினார். ஆனால் அவரால் வட்டி மட்டுமே கட்ட முடிந்தது. அசலை கட்டி திருப்ப முடியவில்லை. வேறு வழியில்லை. மீண்டும் பர்சனல் லோன் போடுவோம் என்று பர்சனல் லோன் போட்டு நகைகளை திருப்பினார். மீண்டும் இஎம்ஐ இல் ஓடிக்கொண்டிருக்கிறார். ஆனால் இந்த முறை இஎம்ஐ காலத்தை ஓராண்டாக குறைத்து, வட்டியை குறைக்க வைத்து வாங்கி உள்ளார். வட்டியும் குறைவு. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால். சமானியார்களால் பணத்தை மொத்தமாக சேர்க்க முடியாத நிலை உள்ளது. நுகர்வு கலாச்சாரமே இதற்கு காரணம். இந்த சூழலில் இஎம்ஐ இல் தான் பலரது வாழ்க்கை ஓடுகிறது.
தனிநபர் கடன் வாங்குவோர் கண்டிப்பாக இஎம்ஐ காலம் குறைவாக இருப்பதே நல்லது என்கிறார்கள் அனுபவஸ்தர்கள். தனிநபர் கடனை தேவை இல்லாமல் வாங்க கூடாது என்றும், வீடு லீஸ்க்கு வாங்கலாம், அல்லது இடம் வாங்க வாங்கலாம். அல்லது நகை அல்லது சொத்துக்கள் வாங்க அதாவது வாங்கும் கடனை முதலீட்டு நோக்கில் வாங்கி சேமிப்பது நல்லது என்கிறார்கள் அனுபவஸ்தர்கள். அதேபோல் கடன் தொகையை கண்டிப்பாக செலுத்த முடியும், மாத இஎம்ஐ உங்களால் கட்ட முடியும் என்றால் மட்டும் வாங்குவது சரியானதாக இருக்கும் என்கிறார்கள். அதேபோல் அதிகமாக கிடைக்கிறதே என்று வாங்கி அவஸ்தை படக்கூடாது. ஏனெனில் தனிநபர் கடன் வட்டி மிக அதிகம். அதேபோல் ஒரு மாதம் கட்டாவிட்டாலும் அபராத தொகை ஆயிரம் ரூபாய் வரை கூட வங்கிகள் விதிக்கக்கூடும். மேலும் இஎம்ஐ காலத்தில் சரியான முறையில் கடனை கட்டாவிட்டால் சிபில் பாதிக்கப்படும் என்கிறார்கள்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications