Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா.. ஸ்ட்ரைட்டா மேலிடம்.. பின்னாடியே போகும் "தலைவர்!" திக் திக் பழனிசாமி! பலே

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக தரப்பில் சில வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.. அதேசமயம், சசிகலாவின் ரோல் என்னவாக இருக்க போகிறது? என்ற கேள்வியும் நிலவுகிறது.

ஓபிஎஸ் + டிடிவி தினகரனை எந்த காலத்திலும் கட்சிக்குள் இணைய வாய்ப்பே கிடையாது என்று எடப்பாடி உறுதியாக சொல்லி வருகிறார்.. இந்த விஷயத்தில் அவரது பிடிவாதமும் தளரவில்லை..

Do you know what is VK Sasikalas next political move and Will Edappadi Palaniswami accept OPS

அதேசமயம், அதிமுகவின் வாக்குகளை நம்பியே, கூட்டணிக்குள் களமிறங்கும் பாஜக, இனி "ஒருங்கிணைந்த அதிமுக" விஷயத்தில், என்ன செய்ய போகிறது? என்ற கேள்வியும் எழுந்தபடியே உள்ளது.

முக்கிய முடிவுகள்: இப்படிப்பட்ட சூழலில்தான், சசிகலாவும் சில முக்கிய முடிவுகளை எடுத்து வருவதாக தெரிகிறது.. சிறையில் இருந்து வெளிவந்த இந்த 2 ஆண்டுகளில், கட்சியை ஒன்றிணைக்க சசிகலா முன்னெடுத்த வியூகங்கள் எதுவுமே அவருக்கு கை கொடுக்கவில்லை.. ஆடியோ ரிலீஸ் முதல் ஆன்மீக பயணம் வரை, போதுமான பலனை அவருக்கு பெற்றுத்தரவில்லை.. எனினும், உயிரே போனாலும், இரட்டை இலையை மீட்பேன் என்று சொல்லிவந்தார்.. அதிலும் அவருக்கு தோல்வி கிடைத்துவிட்டது. கடைசிவரை அதிமுகவை ஒன்றிணைக்க பாடுபடுவேன் என்று சொல்லி வருகிறார்.. அதிலும், நல்ல ரிசல்ட் கிடைக்கவில்லை.

போதாக்குறைக்கு நீதிமன்ற உத்தரவுகளும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே வந்துவிட்டதால், இதையும் சசிகலா எதிர்பார்க்கவேயில்லையாம்.. எனினும் தேர்தல் நெருங்கும் சூழலில் சில முக்கிய திட்டங்களை கையில் வைத்துள்ளாராம்.. அதன்படி, எடப்பாடி பழனிசாமியை இப்போதுபோலவே எப்போதுமே விமர்சிக்க போவதில்லை என்று முடிவெடுத்துள்ளாராம்.

தாறுமாறு விமர்சனம்: காரணம், எடப்பாடி பழனிசாமியை விமர்சிப்பதானால், சிறையில் இருந்துவந்தபோதே சசிகலா விமர்சித்திருக்க கூடும்.. ஆனால், அதை செய்யவில்லை.. வழக்கமாக அதிரடி அரசியலை செய்யக்கூடிய சசிகலா, சிறைவிடுதலைக்கு பிறகு மென்மையான போக்கை கையில் எடுத்தார்.. எடப்பாடி பழனிசாமியே ஒருகட்டத்தில் பொறுமையிழந்து சசிகலாவை பொதுவெளியில் விமர்சித்தபோதும்கூட, சசிகலா எடப்பாடி பற்றி எதுவுமே சொல்லவில்லை.. அதிமுகவை ஒன்றிணைப்பதில் மட்டுமே அவரது முழு கவனமும் இருந்தது.

அதேசமயம், தன்னுடைய தரப்பினரை அனுப்பி, சில தூது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, அது தோல்வியடைந்ததாகவும் தெரிகிறது.. இப்படி இதுநாள்வரை எடப்பாடியை விமர்சிக்காமல், தேர்தல் சமயத்தில் திடீரென எடப்பாடியை விமர்சித்தால் அது சரியாக இருக்காது என்று சசிகலா நினைக்கிறாராம்..

அப்படி விமர்சித்துவிட்டால், இதுவரை ஒருங்கிணைந்த அதிமுகவை வலியுறுத்தியும் பிரயோஜனம் இல்லாமல் போய்விடும் என்று நினைக்கிறாராம்.. அப்படியே விமர்சித்தாலும், அது தனக்கே எதிராக திரும்பிவிடும் என்பதையும் சசிகலா உணராமல் இல்லையாம்.

ஓபன் அட்டாக்: அதுமட்டுமல்ல, சசிகலாவை சந்திக்க பல மாதங்களாகவே ஓபிஎஸ் முயன்று கொண்டிருக்கிறார்.. திருச்சி மாநாட்டுக்கே வெளிப்படையாகவே ஓபிஎஸ் அழைப்பு விடுத்தும்கூட, சசிகலா செல்லவில்லை.. மிகவும் கவனமாக நடந்து கொண்டார்.. காரணம், ஓபிஎஸ் + தினகரன் + சசிகலா என்றாலே, சாதி முத்திரை குத்தப்பட்டுவிடும், அதற்கு பிறகு, ஒருங்கிணைந்த அதிமுக என்ற விஷயத்தை பற்றியே நினைத்துகூட பார்க்க முடியாது என்பதே சசிகலாவின் கணக்கு.. அதனால்தான், திருச்சி மாநாட்டுக்கு செல்லவில்லை.

அப்படியானால், சசிகலாவின் மூவ் எதைநோக்கி செல்கிறது? என்ற சந்தேகம் எழுகிறது.. சசிகலாவை பொறுத்தவரை, பாஜக - அதிமுக கூட்டணி வெற்றி மட்டுமே முக்கியம் என்று நினைக்கிறாராம்.. அதாவது எடப்பாடியை விமர்சிக்காமல், ஓபிஎஸ் மற்றும் பாஜக தரப்புக்கு ஆதரவை தருவதே அவரது திட்டமாக உள்ளதாம்.. அதுமட்டுமல்ல, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அடுத்த மாதம் சசிகலா தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் தனித்தனியாக சந்திக்க முயற்சி எடுத்து வருகிறார்களாம்.

சில நாட்களுக்கு முன்பு, கர்நாடக தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்திருந்த அமித்ஷாவை, சசிகலா தனியாக சந்தித்து பேசியதாக சொன்னார்கள்.. அப்போது நிறைய விஷயங்களை ஆலோசித்ததாக சொல்கிறார்கள்.. அப்போதுதான், டிடிவி தினகரன் - ஓபிஎஸ் சந்திப்பு நடத்துவது குறித்து பேசப்பட்டதாம்.. இதற்கு பிறகு 2வது முறையாக பாஜக மேலிட தலைவர்களை சந்திக்க சசிகலா தரப்பு நினைக்கிறதாம்..

அமித்ஷா சந்திப்பு?: அதேபோல, ஓபிஎஸ்ஸூம் அமித்ஷாவை சந்திக்க முயற்சித்து வருகிறாராம். மற்றொருபக்கம், நடப்பதையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறதாம் எடப்பாடி டீம்.. ஒருவேளை, சசிகலா, ஓபிஎஸ் இவர்களில் யாராவது ஒருத்தர் டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டாலே, அது எடப்பாடிக்கான அதிர்ச்சியாகவே இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்.!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+