Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிர்மலாவை விடுங்க.. வாயிலேயே ஒருத்தர் வடை சுடுவாரே.. காரணமே அதிமுகதான்.. அதிர வைத்த உதயநிதி.. ஓஹோ

தயாநிதி மாறன் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு ஷேர் ஆகி கொண்டிருக்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: "வாயிலேயே வடை சுடுவாரே, அவரை போலத்தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், இந்த பாஜகவே இப்படித்தான்.. இதுக்கெல்லாம் காரணம் அதிமுகதான்" என்று, உதயநிதி பேசிய பேச்சு இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது... அத்துடன் தொடர்ந்து தங்கள் கட்சியை மட்டந்தட்டி வருவது, அதிமுகவிலும் கடுப்பை கிளப்பி விட்டுள்ளதாம்.

சென்னையில் நேற்றைய தினம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியை உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.. எம்பி தயாநிதி மாறன், மேயர் பிரியா, கவிப்பேரரசு வைரமுத்து, நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தயாநிதி மாறன் பேசும்போது, இந்த தேர்தலில் வெற்றி பெற, வியூகம் அமைத்து செயல்பட்டவர் யார் என்றால் சகோதரர் உதயநிதிதான்.. செங்கல்லை காட்டி காட்டியே மதுரை எய்ம்ஸின் அவலத்தை சொன்னார்.. இன்றுவரை அந்த ஒரு செங்கல்தான் எய்ம்ஸ் மருத்துவமனையாகிவிட்டது.. இது பாஜக அரசின் கேவலத்தை எடுத்து காட்டுகிறது என்றார்.

 மழை மழை

மழை மழை

இதற்கு பிறகு, உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, "துறைமுகம், கிழக்கு மாவட்டம் பகுதிக்கு மாதத்துக்கு ஒருமுறையாவது வந்துவிடுகிறேன்.. நான் எந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்று எனக்கே சில சமயம் சந்தேகம் வந்துடும், சேப்பாக்கமா? துறைமுகமா? என்று குழப்பம் வந்துவிடும்.. அண்ணன் சேகர்பாபுவிடம், இந்த நிகழ்ச்சியை உள் அரங்கில் நடத்துங்கள், மழை வந்துட போகுது என்று தயாநிதி மாறன் அண்ணன், சொன்னாரு.. ஆனால், சேகர்பாபு நினைத்தால் மழையை கூட நிப்பாட்டிடுவாரு.. ஏன் என்றால், அவர்இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆயிற்றே.. இதில் எனக்கு நம்பிக்கை இல்லை, இருந்தாலும் சொல்றேன்..

 அசரடிக்கும் நிர்மலா

அசரடிக்கும் நிர்மலா

2 இடத்துல இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பதாக சொன்னார், மழை பெய்தால் ஒரு இடமாம்.. மழை பெய்யாவிட்டால் இன்னொரு இடமாம்.. இதுதான் சேகர் பாபு அண்ணன்.. அதனால்தான், தலைவர் சொல்வது போல், எப்பவுமே அவர் செயல்பாபு அண்ணன்.. நம்ம ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இருக்காங்களே, அவங்ககிட்ட ஒரு கேள்வியை கேட்டால், அதுக்கு ஒரு பதிலை சொல்லி எல்லாரையுமே அசரடித்துவிடுவார்.. சமீபத்தில் அவரிடம் ஒரு கேள்வி கேட்டார்கள்.. இந்திய ரூபாயின் மதிப்பும் அமெரிக்க டாலரும் வீழ்ச்சியடைந்து விட்டதே என்று நிர்மலா சீதாராமனிடம் கேட்டார்கள்..

 வாயிலேயே வடை

வாயிலேயே வடை

அதற்கு அவர், நீங்க ஏன் அப்படி நெகட்டிவ்வா பார்க்கிறீங்க? அமெரிக்க டாலரின் மதிப்பு உயருதுல்ல, இந்த மாதிரி பாசிட்டிவ்வாக பார்க்க வேண்டும் என்று பதில் சொல்கிறார்.. மோடி எப்படி வாயிலேயே வடை சுடுவாரோ, அதுமாதிரி பாஜகவை சேர்ந்த அத்தனை பேரும் வாயிலே வடையை சுடுவாங்க.. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செங்கல்லை தூக்கிட்டு போய் அந்த பிரச்சாரத்தை நான் மேற்கொண்டேன் என்று தயாநிதி மாறன் அண்ணன் சொன்னார்.. ஆனால், சமீபத்தில் பாஜக தலைவர் 95 சதவீதம் எய்ம்ஸ் வேலை முடிந்துவிட்டது என்று சொல்விட்டு போகிறார்.. இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.

 குடுமி + ADMK

குடுமி + ADMK

நாம இந்தி திணிப்பு நடத்தினால், அதற்கு நேர்மாறாக இன்னொரு போராட்டத்தை இவங்களே நடத்திக் கொள்கிறார்கள்.. இங்கே இருக்கிற பாஜக தலைவர், பத்திரிகையாளர்களை பார்த்து குரங்குன்னு சொல்லிட்டாரு.. குரங்கு மாதிரி ஏன் என் பின்னாடி சுத்தறீங்கன்னு கேட்கிறார்.. இதுக்கெல்லாம் முக்கிய காரணம் அதிமுகதான்.. அப்படி ஒரு கட்சி இன்னைக்கு இருக்கா இல்லையேன்னா தெரியாத அளவுக்கு போய்விட்டது.. ஏன் என்றால் அவங்ககிட்டதான், இவங்க குடுமியே இருக்கு..

 தயாநிதி மாறன்

தயாநிதி மாறன்

இன்றைக்கு ஒன்றிய அரசை தட்டிக்கேட்பவரும், மாநில உரிமைகள் பறிக்கப்படும்போதெல்லாம் அதற்காக குரல் கொடுப்பவரும், ஒரே தலைவர் நம் முதல்வர் மட்டும்தான்.. நீங்கள் அத்தனை பேரும், இந்த நிகழ்ச்சி முடியும்வரை, அண்ணன் தயாநிதி மாறன் உட்பட இங்கேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.. காரணம், "நீ பேசி முடித்ததும், உன் பின்னாடியே நானும் வந்துடறேன்" என்று தயாநிதி மாறன் என்னிடம் வழியெல்லாம் சொல்லிக் கொண்டே வந்தார்.. சேகர்பாபு அண்ணன் அவ்வளவு லேசில் விடமாட்டார்..ண்ணே.. இங்குள்ள அத்தனை பேரின் பேச்சையும் கேட்க நானும் ஆவலாக இருக்கிறேன்" என்றார்.

 எடப்பாடி + இலை

எடப்பாடி + இலை

உதயநிதி பேசிய பேச்சு, பாஜகவைவிட அதிமுகவினருக்குதான் எரிச்சலை கூட்டி வருகிறதாம்.. தாங்கள் தான் தமிழகத்தின் எதிர்க்கட்சி என்று விடாமல் பாஜக சொல்லி கொண்டிருக்கிறது என்றால், அதற்கேற்றபடி, அதிமுகவையும் மட்டமாக திமுக பேசிவருகிறதே என்ற ஆதங்கம் எழுந்துள்ளதாம்.. என்னதான், ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கினாலும், ஓபிஎஸ்ஸை திட்டும்போதெல்லாம் மறக்காமல் முதல்வர் ஸ்டாலினையும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தே வருகிறார்.. நடுநடுவே போராட்டங்களை முன்னெடுத்தாலும், தமிழக பாஜக அளவுக்கு வீர்யமிக்க போராட்டமாக அவைகள் சோபிக்கவில்லை என்கிறார்கள்.. பாஜகவை கண்டுகொள்ளாமல் கடந்து போகாமல், முக்கியத்துவம் கொடுத்து விமர்சிக்க வேண்டுமா? என்ற ஆதங்கமும் கட்சிக்குள் எழுந்துள்ளதாம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+