அடிச்சு நொறுக்குது இந்தியா.. இதுபோன்ற போர் சூழலில் நாம் என்ன செய்யணும்? என்ன செய்ய கூடாது தெரியுமா?
சென்னை: பஹல்காம் தாக்குலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனால் நிலைகுலைந்து காணப்படும் பாகிஸ்தான், காஷ்மீரில் தற்கொலைப்படை ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதுபோன்ற பதற்றமான போர் சூழல்களில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து வைத்து கொள்வது அவசியமாகும்.
பாகிஸ்தான் தொடர் அத்துமீறலையடுத்து பாகிஸ்தான் மீதான தாக்குதலை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஜம்மு, பதான்கோட், உதம்பூரில் சர்வதேச எல்லைகளை குறிவைத்து, பாகிஸ்தான் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி தரும் வகையில், பாக். தலைநகர் இஸ்லாமாபாத்தை குறி வைத்து, இந்தியா பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

F16 , JF-17 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
பாகிஸ்தான் விமான படைக்கு சொந்தமான F16 விமானம் மற்றும் 2 ஜேஎப் போர் விமானங்களை இந்தியா ராணுவம் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது.. பாகிஸ்தானின் சீன ரக JF-17 போர் விமானங்களையும் சுட்டு வீழ்த்தியிருக்கிறது..
பஞ்சாப் - பாகிஸ்தான் எல்லையில் உள்ள பதான்கோட் நகரில் பாகிஸ்தான் பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. சண்டிகரில் அபாய எச்சரிக்கை ஒலிக்கப்பட்டு, மக்கள் வீடுகளுக்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இருளில் மூழ்கிய பகுதிகள்
பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. .. குறிப்பாக, குஜராத்தின் பூஜ், பஞ்சாபின் அமிர்தசரஸ், ஜலந்தர் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்முவில் கிஷ்த்வார் என்ற பகுதியில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு சைரன் ஒலிக்கப்பட்டும் வருகிறது. இதனால், பல்வேறு இடங்கள் இருளில் மூழ்கி கிடக்கிறது..
ஆனால்,, சமூக ஊடகங்களில் சிலர் எங்கு, எந்த இடங்களில் மின்வெட்டு செய்யப்படுகிறது என்பது குறித்த தகவல்களைத் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் நகரங்களை பற்றிய தகவல்களை ஷேர் செய்வதால், இது பாதுகாப்பு தயாரிப்புகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துமாம். இதுபோன்ற சூழ்நிலையில், சமூக ஊடகங்களில் என்ன தகவல்களை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
என்னென்ன தவிர்க்க வேண்டும்
- முதலாவதாக, நீங்கள் எந்த பகுதியில் வாழ்ந்தாலும், அந்த நகரத்திலோ அல்லது இடத்திலோ மின் தடை ஏற்பட்டதற்கான தகவல்களையோ அல்லது வீடியோவையோ சமூக ஊடகங்களில் யாருக்கும் ஷேர் செய்யக்கூடாது.
- அதேபோல, உங்கள் பகுதியில் இருந்து ஏதேனும் ராணுவ வாகனம் செல்வதுபோல இருந்தால், அதை வீடியோ எடுக்கக்கூடாது. வேண்டாம்.
- போரை பற்றிய பல பழைய படங்களும், இப்போது சோஷியல் மீடியாவில் ஷேர் ஆகி வருவதால், இதுபோன்ற வதந்திகளை தவிர்த்து விடலாம்..
- அதேபோல, தேவையில்லாமல் நெரிசலான பகுதிகளுக்கு செல்லக்கூடாது.. முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்.
- யாராவது ஏதாவது தப்பான தகவல்களை சொன்னாலும், அதற்கு பதிலளிக்காமல் இருந்தாலே போதும்.. பயத்திலோ அல்லது கோபத்திலோ சட்டவிரோத செயல்களை செய்துவிடக்கூடாது.
- பாதுகாப்பு படையினரின் பணிகளுக்கு தொந்தரவு செய்யாமலும், அவர்களது அறிவுறுத்தல்களை மதித்தும் நடக்க வேண்டும.
என்னென்ன செய்ய வேண்டும்
- அரசின் வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றவேண்டும்.. அரசு, ராணுவம் அல்லது உள்ளூர் நிர்வாகம் தரும் தகவல்களை மட்டும் நம்ப வேண்டும்.
- எப்போதுமே, எந்த நொடியிலும், அவசர நிலைகளுக்கு தயாராக இருக்க வேண்டும்.. குறிப்பாக, அத்தியாவசிய மருந்துகள், ஆவணங்கள், தண்ணீர், உணவு பொருட்களை சேமித்து வைத்து கொள்ள வேண்டும்.
- எங்கெல்லாம் பாதுகாப்பான இடங்கள் உள்ளனவோ, அதாவது வீடு, அல்லது பதுங்கு குழிகள், வலுவான கட்டுமானங்கள் எதுவாகவும் இருக்கலாம்.. மேற்கண்ட பாதுகாப்பான இடங்களை அடையாளம் கண்டு வைத்து கொள்ள வேண்டும்.
- எந்தவிதமான வதந்திகளுக்கும் இடம் தராமல், அமைதியை காத்து, சமூக நல்லிணக்கத்தை பேண வேண்டும்.
- முதியவர்கள், குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து, முடிந்தவரை அவர்களுக்கும் உதவ வேண்டும்












Click it and Unblock the Notifications