நடிக்க வராமல் இருந்திருந்தால் விஜயகாந்த் என்ன செய்திருப்பார் தெரியுமா? அவரே சொன்ன பதில்! ஃப்ளாஷ்பேக்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது ரசிகர்களும், கட்சி நிர்வாகிகளும் விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடத்த ஆரம்பித்துள்ளனர்.
சினிமா, அரசியல் என இரண்டு துறைகளிலும் தனக்கென தனி வரலாறை உருவாக்கிய விஜயகாந்த், ஒரு வேளை நடிக்க வராமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்ற கேள்விக்கு அவரே பல பேட்டிகளில் பதிலையும் சொல்லியிருக்கிறார். தனக்கு மட்டும் சினிமாவில் சான்ஸ் கிடைக்காமல் போயிருந்தால் மீண்டும் மதுரைக்கே திரும்பி தங்கள் ரைஸ் மில்லை தொடர்ந்து கவனித்திருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் சினிமாவோடு போதும் அரசியல் எதற்கு என்ற எண்ணத்தில் தான் 1999ஆம் ஆண்டு வரை இருந்திருக்கிறார் விஜயகாந்த். அதன் பிறகு தான் அரசியலில் காலடி வைக்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்டிவாக இருந்தவரை மதுரையில் அழகர் கோவிலுக்கும், சென்னையில் வடபழனி முருகன் கோயிலுக்கும், திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலுக்கும் மன நிம்மதிக்காக அடிக்க செல்லும் வழக்கம் கொண்டவர் விஜயகாந்த். உடல்நலம் தளர்ந்த பிறகு தான் அவர் இந்த கோயில்களுக்கு செல்வதில்லை. ஆனால் அங்கிருந்தெல்லாம் விஜயகாந்துக்கு பிரசாதம் வந்துவிடும்.
விஜயகாந்தை பொறுத்தவரை படிப்பதற்கு நேரம் இருக்கிறதோ இல்லையோ புத்தகங்களை நிறைய வாங்கி வைத்துகொள்ளும் வழக்கம் உடையவர். ஆரம்பக்காலங்களில் ஷூட்டிற்கு நடுவே கிடைக்கும் ஓய்வின் போது நண்பர்களுடன் அரட்டை அடித்து பொழுதை கழிப்பாரே தவிர எப்போதுமே தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளமாட்டார். அதேபோல் விஜயகாந்தை பற்றி சொல்ல வேண்டிய மிக முக்கிய தகவல் என்னவென்றால் செண்டிமென்ட் பார்க்கமாட்டார்.
ஆன்மிகத்தில் ஈடுபாடு இருந்தாலும் நல்ல நேரம், கெட்ட நேரம், நாள், நட்சத்திரம் என செண்டிமெண்ட் பார்க்கும் பழக்கம் இல்லாதவர் விஜயகாந்த். தமிழ்நாட்டில் உள்ள பல அரசியல் தலைவர்கள் கட்சி தொடங்கி 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் கட்சி ஆரம்பித்த 8 ஆண்டுகளில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக வந்து அமர்ந்தார் விஜயகாந்த். இன்றைய ஆளுங்கட்சியான திமுகவை விட 2011ல் கூடுதல் சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருந்தவர் விஜயகாந்த்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications