முதல்வரின் 70 ஆவது பிறந்தநாள்.. திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலினின் ரிடர்ன் கிப்ட் என்ன தெரியுமா?
முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளில் சந்திக்க வருவோருக்கு கொடுக்கும் ரிடர்ன் கிப்ட் என்ன தெரியுமா?
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தனது 70 ஆவது பிறந்தநாளுக்கு வருகை தந்து வாழ்த்தும் நிர்வாகிகளுக்கு கொடுக்க போகும் ரிடர்ன் கிப்ட் என்ன தெரியுமா?
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தனது பிறந்தநாளை யாரும் ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று முன் தினம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அன்பு உடன்பிறப்புகளே! ஆடம்பரம் தவிர்த்து,
எளியோர்க்கு நல உதவிகள் வழங்கி எனது 70வது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு
தமிழ்நாட்டை முதன்மையான மாநிலமாக்க நீங்கள் தரும் ஒத்துழைப்புதான் நான் பெறும் சிறந்த வாழ்த்து! என தெரிவித்திருந்தார். முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி நேற்றைய தினமே தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

பிறந்தநாள்
இன்று முதல்வர் தனது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சமாதிகளில் மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினார். அது போல் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்குக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றார்.

முதல்வருக்கு வாழ்த்து
முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தொண்டர்களிடமும் வாழ்த்துகளை பெற்று வருகிறார். அது போல் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்ல திமுக ஐடி விங் இரு வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி முதல்வர் ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து சொல்ல சிறப்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 07127191333 என்ற எண்ணிற்கு அழைப்பு விடுக்கலாம். அதில் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்தை பதிவு செய்யலாம்.

கோடான கோடி மக்கள்
இந்த எண் நேற்று முதல் நாளை (மார்ச் 2) வரை செயல்படும். இதன் மூலம் கோடான கோடி மக்கள், தொண்டர்கள், நலம்விரும்பிகள் முதல்வருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவிக்க முடியும். அது போல் செல்பி வித் சிஎம் எனும் புதிய திட்டத்தையும் அவர்கள் தொடங்கியுள்ளார்கள். www.selfiewithCM.com என்ற இணையதளத்திற்கு உள்ளே சென்று கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும்.

செல்பி வித் சிஎம்
அப்போது மெய்நிகர் எனப்படும் விர்சுவல் (virtual) தொழில்நுட்பம் மூலமாக முதல்வருடன் செல்பி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆங்காங்கே 70 கிலோ எடை கொண்ட கேக் வெட்டியும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் களை கட்டுகின்றன. அது போல் இன்று மாலை 5 மணிக்கு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும் பிறந்த நாள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

ரிடர்ன் கிப்ட்
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பரூக் அப்துல்லா, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் முதல்வர் ஸ்டாலின் தன்னை சந்திக்க வரும் அனைவருக்கும் மஞ்சள் பையில் மரக்கன்றை வழங்குகிறார். பசுமையான தமிழ்நாட்டை உருவாக்குவோம், மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை வலியுறுத்தியும் முதல்வர் இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications