அய்யோ நெஞ்சம் பதறுதே! பூமி சுற்றுவது நின்றால் என்ன நடக்கும் தெரியுமா? யோசிச்சி இருக்கீங்களா? ஷாக்
சென்னை: நாம் தினமும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதற்கு அர்த்தம் நம்முடைய பூமி சுழன்றுக்கொண்டிருக்கிறது என்பதுதான். ஒரு வேளை இந்த பூமி திடீரென தன்னுடைய சுழற்சியை நிறுத்திக்கொண்டால் என்ன ஆகும்? நம்மால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய பேரழிவு உண்டாகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த பூமி மிகவும் அற்புதமான ஒரு கோள். ஆம் சூரியனை சுற்றி வரும் உருண்டை வடிவிலான குறிப்பிட்ட சைஸை விட பெரியதாக இருக்கும் அனைத்தும் கோள்கள் என்றுதான் அழைக்கப்படுகின்றன. சரி அது என்ன அற்புதமான கோள் என்று கேட்கிறீர்களா? மனிதர்கள் இதுவரை ஏராளமான ஆய்வுகளை விண்வெளியில் செய்திருக்கிறார்கள். ஆனால் தற்போது வரை எங்கும் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதியான இன்று இரவு 8 மணி வரையிலும் கூட நாம் எந்த உயிரினங்களையும் பூமிக்கு அப்பால் கண்டுபிடிக்கவில்லை.
அப்படியெனில் பூமி நிச்சயம் அற்புதமான ஒன்றுதானே! இந்த அற்புதம் தொடர்ந்து நீடிப்பதற்கு சில விஷயங்கள் நடக்க வேண்டும். அதில் முக்கியமானதுதான் பூமியின் சுழற்சி. பூமியில் சுழற்சி இல்லாவிட்டால், ஒரு பக்கம் இருட்டாகவும், மறு பக்கம் சூரிய வெளிச்சம் எப்பவும் நிரந்தரமாக இருந்துவிடும். இதன் காரணமாக சூரியனின் புற ஊதா கதிர்கள் வெளிச்சம் இருக்கும் ஒரு பக்கத்தை மொட்டை அடித்துவிடும்.

அதாவது புற ஊதா கதிர்கள் வீசும் இடங்களில் எந்த உயிரினங்களும் வாழாது. செடி கொடிகள் கூட! அப்படியே மறு பக்கம் போனால் சூரிய வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருக்கும். இங்கும் செடி கொடிகள் முளைக்காது. எனவே பூமியில் எந்த உயிரினங்களும் வாழ முடியாது. பூமி சுழலவில்லை என்றால் இந்த பாதிப்புகள் ஏற்படும். ஆனால் நல்வாய்ப்பாக பூமி தற்போது வரை சுழன்றுக்கொண்டுதான் இருக்கிறது.
சும்மா ஏதோ போனா போகட்டும் என்று சுழலவில்லை. மணிக்கு சுமார் 1,770 கி.மீ என்கிற அசுர வேகத்தில் சுழன்றுக்கொண்டிருக்கிறது. இந்த வேகத்தில் போய்க்கொண்டிருக்கும் பூமி திடீரென சடன் பிரேக் போட்டால் என்ன ஆகும் தெரியுமா?
பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுழல்வதால் முதலில் நமக்கு மேற்கே இருக்கும் அரபிக் கடல் அப்படியே மொத்தமாக மேலே எழும்பி வங்கக்கடலோடு சேர்ந்து விடும். மட்டுமல்லாது அரபு நாடுகளின் நிலப்பரப்பு எல்லாம் வானத்தை நோக்கி வீசப்படும். ஆனால் இதில் துர்திஷ்டம் என்னவெனில் இதை எல்லாம் பார்க்க நீங்களோ நானோ உயிரோ இருக்கப்போவதில்லை. ஏனெனில் கடல் நீருக்கு முன்னதாக மனிதர்களாகிய நாம்தான் முதலில் வானத்தில் வீசியெறியப்படுவோம்.
இல்ல இல்ல.. நான் வீட்டுல பத்திரமா இருப்பேன் என்று சொல்பவர்களுக்கு ஓர் சோக செய்தி இருக்கிறது. அதாவது இந்த 'சடன் பிரேக்' சம்பவத்தால் கொடூரமான நிலநடுக்கம் ஏற்படும். மனித குலம் இதுவரை பார்த்த நில நடுக்கங்களில் மோசமானது 1960ம் ஆண்டு தெற்கு சிலி பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கம்தான். இதன் ரிக்டர் அளவு 9.5, இதுவே 1,600க்கும் அதிகமானோரை பலி வாங்கிவிட்டது. இப்படி இருக்கையில் பூமி சடன் பிரேக் போட்டால் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் ரிக்டர் அளவில் 12 வரை நில நடுக்கம் ஏற்படும்.
ரிக்டர் அளவு 12ஐ தாண்டும்போது உலகம் இரண்டாக உடைந்துவிடும். எனவே நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் நிச்சயம். மனிதர்கள் மட்டுமல்லாது மற்ற பெரிய உயிரினங்கள் அனைத்தும் அழிந்துவிடும். சிறிய வகை மீன்கள் போன்ற உயிரினங்கள் கொஞ்ச நாட்கள் வரை உயிரோடு இருக்கும். பின்னர் இந்த பாதிப்பால் ஏற்பட்ட விளைவுகள் காரணமாக அதுவும் முழுமையாக அழிந்துவிடும்.
இதில் ஒரு குட் நியூஸ் இருக்கிறது. தற்போதைக்கு பூமி இப்படியெல்லாம் சடன் பிரேக் போடாது என்பதுதான் இந்த குட் நியூஸ்.












Click it and Unblock the Notifications