போயஸ் கார்டனில்.. சசிகலா நுழைஞ்சதுமே "ஓவர் முக்கியத்துவம்".. அந்த விஷயம் கவனிச்சீங்களா? பரபர சென்னை
சென்னை: திடீரென சசிகலாவின் நடவடிக்கைகளில் புது மாற்றம் தென்பட்டுள்ளது.. அவரது செயல்பாடுகளிலும் புது வேகம் தென்பட்டுள்ளது. புதுவீட்டு கிரகப்பிரவேசமும் நடந்து முடிந்துள்ளது.. இதற்கெல்லாம் என்ன காரணம்?
கடந்த தேர்தலின்போது, அரசியலிலிருந்து விலகியிருப்பதாக அறிவித்திருந்தார் சசிகலா.. இப்போது அடுத்த தேர்தல் வரஉள்ள நிலையில், சசிகலாவின் அரசியல் வேகம் எடுத்து வருகிறது.

சிறையிலிருந்து விடுதலையாகி 2 வருட காலமாகியும், சென்னையில்தான் இருக்கிறார் சசிகலா.. அடிக்கடி ஆன்மீக சுற்றுப்பயணம், நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளுக்கு சென்றுவந்தாலும், வேறு எந்த ஊர்களுக்கும் பெரிதாக செல்வதில்லை.
என்ன காரணம்: ஆனால், இத்தனை நாட்களும் இல்லாமல், திடீரென கடந்த வாரம் கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு சென்றிருந்தார் சசிகலா.. ஜெயலலிதாவின் உருவ சிலையுடன் கூடிய நினைவிடத்துக்கு அங்கே அடிக்கல் நாட்டப்பட்டது.. அப்போது முகம்நிரப்பிய சோகத்துடனும், கண்ணீருடனும் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார் சசிகலா.
7 வருடம் கழித்து கொடநாடுவுக்கு எதற்காக சசிகலா சென்றார்? என்ற ஆர்வமே இன்னும் அடங்காத நிலையில், இன்று போயஸ் கார்டனில் அதுவும் ஜெயலலிதா வீட்டுக்கு எதிர்வீட்டிலேயே புது வீட்டுக்கு கிரகப்பிரவேசம் நடத்தியிருக்கிறார் சசிகலா..
அமைதி: இதுநாள்வரை சசிகலாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், எப்படி கிரகப்பிரவேசம் நடந்தது? சசிகலாவின் நடவடிக்கையில் ஏன் வேகம்? என்ற குழப்பம் வலம்வரும்நிலையில், இதுகுறித்துதான் சில முக்கிய தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
சசிகலாவின் சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை மொத்தம் 10 கோடியாகும்.. அதேசமயம், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, சசிகலா தொடர்பான 1,520 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி வைத்த அமலாக்கத்துறை விதித்த அபராத தொகையானது 480 கோடியாகும். இதைத்தான் சமீபத்தில் அடைத்திருக்கிறார் சசிகலா.
இதுதான் விஷயம்: அதனடிப்படையிலேயே, முடக்கப்பட்ட சொத்துக்களும் விடுவிக்கப்பட்டுள்ளன. இதைதொடர்ந்து, போயஸ்கார்டனில் ஜெயலலிதா இல்லத்துக்கு அருகே புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட பங்களாவும் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறதாம். ஆக, அபராத தொகை 480 கோடியை அவர் கட்டிவிட்டதால் சொத்துகள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன என்றே அவருக்கு நெருக்கமான தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.
இத்தனை காலமும் அமைதி அரசியலை நடத்தி வந்த சசிகலா, இனி அதிரடியில் இறங்குவார் என்று தெரிகிறது விரைவில் தேர்தல் வரஉள்ள நிலையில், அதில் சசிகலாவின் பங்களிப்பும் தவிர்க்க முடியாததாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
சிறைவாசம்: இன்று கிரகப்பிரவேசம் செய்துள்ள போயஸ் பங்களாவை சிறப்பாக கட்ட வேண்டும் என்று அன்றே திட்டமிட்டிருந்தாராம் சசிகலா.. 24,000 சதுர அடியில் வேதா நிலையம் உருவான நிலையில் அதைவிட பெரிதாகவே, இந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தாராம் சசிகலா.
வேதா நிலையத்தைப் போலவே கட்டிடம், ஒரு தரைதளம், 2 மேல் தளங்களுக்கு அனுமதி அப்போது வாங்கப்பட்டிருந்தது. அதாவது, கடந்த 2019 -ல் எம்பி தேர்தல் நடந்தபோதே இந்த திட்டத்திற்கு சிஎம்டிஏ அனுமதி தந்துவிட்டதாக சொன்னார்கள்.
ஆனால், அதற்குள் சிறைசெல்ல நேரிட்டது.. எனினும், சிறையிலிருந்து ரிலீஸ் ஆகி வெளியே வந்தால் சசிகலா எங்கே தங்குவார்? என்ற கேள்வி மீடியாவில் வட்டமடித்தது. எனினும், கொரோனா தொற்று தீவிரமாக இருந்ததால், பங்களாவின் பணிகள் தடைபட்டன. இறுதியில், அமலாக்கத்துறையினர், இந்த வீட்டின் முன்பு ஜப்தி செய்து நோட்டீஸ் ஒட்டிவிட்டு போனதையடுத்து, போயஸ் இல்லத்தில் மறுபடியும் குடியேறும் நிகழ்வு தடைபட்டுவிட்டது.
உஷார்: அதனால்தான், சிறையிலிருந்து விடுதலையானதுமே தன்னுடைய அண்ணன் மகள் கிருஷ்ணபிரியாவின் வீட்டிற்குதான் சசிகலா செல்ல நேர்ந்தது.. இன்று ஒருவழியாக தன்னுடைய கனவு இல்லத்தில் நுழைந்திருக்கிறார் சசிகலா.. இதற்கெல்லாம் காரணம், போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் கைவிட்டுப் போனாலும் போயஸ் கார்டனைவிட்டு போகக்கூடாது என்பதில் சசிகலா ஆரம்பத்திலிருந்தே உஷாராக இருந்து வந்ததுதான்..!!
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications