அரிசி அட்டைதாரர்களுக்கு மீண்டும் குட்நியூஸ்.. இந்த தேதியில் ரேஷன்தாரர்கள் ரெடியா இருங்க: தமிழக அரசு
சென்னை: தமிழக மக்களின் நன்மைக்காக பல்வேறு அறிவிப்புகளையும், நிறைய சலுகைகளையும் தமிழக அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், தற்போதும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நம்முடைய மாநிலத்தை பொறுத்தவரை, ரேஷன்தாரர்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.. குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை மாதமாதம் வழங்கப்பட்டு வருகின்றன..

இந்த சலுகை காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் பலன்களை பெற்று வருகின்றனர். தமிழக அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டும் வருகின்றன..
தமிழக அரசு: இதனிடையே, பண்டிகை காலங்களில் தீபாவளி, பொங்கல் பரிசு உள்ளிட்ட நிதியுதவிகள் உட்பட அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும், இந்த ரேஷன் கார்டு மூலமாகவே வழங்கப்படுகின்றன.. தற்போதும் பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்புகள் விநியோகிக்கப்பட்டன.. இதைத்தவிர, இயற்கை சீற்றங்களினால் பாதிப்படைந்தோருக்கும் நிதி நிவாரண உதவிகளும், இதே ரேஷன் கடைகள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகின்றன.
அதேபோல, ரேஷன் கடைகளில் திடீர் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, மக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு ஏதாவது புகார் இருந்தால், அதை தெரிவிக்க இலவச எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.. மேலும், ரேஷன்தாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவே, குறைதீர்ப்பு முகாம்களையும் தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் தமிழகமெங்கும் நடத்தி வருகிறது.
குறைகள்: இந்த முகாம்களில், ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் போன்றவைகள் குறித்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல், ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் ரேஷன் கார்டுகளை அப்டேட் செய்திருக்க வேண்டியதும் அவசியமாகும். சமீப நாட்களாகவே, ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்டவைகளை அப்டேட் செய்யாமல் வைத்திருந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது தடுக்கப்பட்டது.. இந்நிலையில்தான், மீண்டும் முகாம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மீண்டும் முகாம்: அந்த அறிவிப்பில், "ரேஷன் கார்டுதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு தமிழக அரசின் சார்பில் வரும் ஜனவரி 20ம் தேதி குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமின் மூலமாக ரேஷன் கார்டுதாரர்கள் மொபைல் எண் அப்டேட், பயோமெட்ரிக் அப்டேட் போன்ற திருத்தங்களை செய்து கொள்ளலாம்.
இது மட்டுமல்லாமல், இந்த முகாமின் மூலமாக பொதுமக்கள் ரேஷன் பொருட்கள், ரேஷன் கடை மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் மீதும் புகார் அளிக்கலாம். எனவே, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் சென்னை மண்டல உதவி ஆணையர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறும் இந்த குறை தீர்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறவேண்டும்"என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications