ரயிலில் பயணம் செய்வோர் எந்த பெட்டியில் புக்கிங் செய்தால் கூடுதல் பாதுகாப்பானது தெரியுமா?
சென்னை : மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தை அடுத்து ரயிலில் செல்லும் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். என்ஜின் தொடங்கி கடைசியில் காட்ஸ் பெட்டி வரை ரயிலில் பயணம் செய்வோர் எந்த பெட்டியில் புக்கிங் செய்தால் விபத்து ஏற்பட்டாலும் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் தெரியுமா? என்பது பற்றி மக்கள் யோசிக்க தொடங்கியுள்ளனர். இதுபற்றி இப்போது பார்ப்போம்.
மேற்குவங்காள மாநில தலைநகர் கொல்கத்தா மற்றும் அசாம் வழியாக திரிபுரா மாநில தலைநகர் அகர்தலா இடையே கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு இந்த ரயில் அகர்தலாவில் இருந்து புறப்பட்டு கொல்கத்தா நோக்கி வந்து கொண்டிருந்தது.

நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரங்கபாணி ரயில் நிலையம் அருகே நேற்று காலை வந்தபோது, சிக்னலுக்காக கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது அதே தடத்தில் வந்த சரக்கு ரெயில் ஒன்று, நின்று கொண்டு இருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்பகுதியில் பயங்கர வேகத்தில் மோதியது.
இதனால் எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்பகுதியில் இருந்த 3 பெட்டிகள் தடம் புரண்டு, தூக்கி வீசப்பட்டன. இதில் அந்த 3 பெட்டிகளும் பலத்த சேதம் அடைந்தன. இதில் சரக்கு ரயிலை ஓட்டி வந்த லோகோ பைலட் 9 பேர் பலியாகினர். 60 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பலர் கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகக் கூடும் என கூறப்படுகிறது.
இந்த விபத்து போல் ஏற்கனவே ஒடிசா மாநிலத்தில் ஒரு விபத்து நடந்துள்ளது. இதேபோன்று பல்வேறு ரயில் விபத்துக்கள் நடந்துள்ளன. பொதுவாக பேருந்து மற்றும் தரைவழிப்பயணத்தைவிட ரயில் பயணம் மிகவும் பாதுகாப்பானது. எப்போதாவது அரிதிலும் அரிதாகவே விபத்துக்கள் நடக்கின்றன. அதேநேரம் ரயில் விபத்து நடந்தால் மோசமான உயிரிழப்புகள், படுகாயங்கள் ஏற்படுகின்றன.
இதனால் ரயில்களில் பாதுகாப்பான பயணம் கேள்விக்குறியாகி உள்ளது.. ரயில்கள் பொதுவாக விபத்தில் சிக்கும் போது, முன்பகுதி மற்றும் பின்பகுதியில் உள்ள பெட்டிகள் பலத்த சேதம் அடைகின்றன.. உதாரணமாக என்ஜினை தொடர்ந்து அன்ரிசர்வ்டு பெட்டியும் அதனை தொடர்ந்து B1, B2, B3 மற்றும் B4 ஆகிய பெட்டிகள் இருக்கும். அவை ஏசி பெட்டிகள் ஆகும். அதன்பிறகு S1, S2, S3 பெட்டிகள் வரும். இவை ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் அடுத்தடுத்து இருக்கும். இறுதியாக மீண்டும் அன்ரிசர்வ்டு பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.
என்ஜின் தொடங்கி கடைசியில் காட்ஸ் பெட்டி வரை ரயிலில் பயணம் செய்வோர் எந்த பெட்டியில் புக்கிங் செய்தால் பாதுகாப்பானது என்ற கேள்வி இருக்கும். வரிசைப்படி பார்த்தால், S1 தான் மிகவும் பாதுகாப்பான பெட்டி என்றும், சிலர் நடுப்பகுதியில் இருக்கும் B4 பெட்டிதான் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இதில் எது உண்மை என்று ரொம்ப யோசிக்க தேவையில்லை, எதுவாக இருந்தாலும் நடுப்பெட்டிகள் தான் பாதுகாப்பானவை, b4 அல்லது எஸ்1 எது நடுபெட்டியாக இருக்கிறதோ அதுவே கூடுதலாக பாதுகாப்பு தரும் பெட்டி என்கிறார்கள்.
இதேபோல் ஒரு ரயில் பெட்டியில் 72 இருக்கைகள் இருந்தால், 32 முதல் 35 வரையிலான இருக்கைகளே பாதுகாப்பானதாக கருதப்படும் என்கிறார்கள். ஆகவே ரயில் முன்பதிவு செய்தால் முடிந்தவரை முன் இருக்கைகள் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என்பதே கருத்தாக உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications