அதிர்ஷ்டம் இப்படியும் வரும்.. இந்த நிற காகம் உங்க வீட்டுக்கு வருதா பாருங்க.. அப்ப நல்ல அறிகுறி.. செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: காகத்திற்கு யார் யாரெல்லாம் உணவு வைக்கலாம் தெரியுமா? காகங்கள் நம்முடைய வீட்டிற்கு வந்து செல்வது நல்லதா? காகத்திற்கு சாதம் வைப்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? இதுகுறித்து இங்கே சுருக்கமாக பார்க்கலாம்

3 வகையான காகங்கள் உள்ளன.. உடம்பெல்லாம் கருமை நிறம் கொண்ட அண்டங்காக்கை.. பின்கழுத்தில் சாம்பல் நிறம் கொண்ட மணி காக்கை... அடுத்ததாக வெள்ளை காக்கை.

spirituality good omen

சனி பகவான்: சனி பகவானின் வாகனமாக கருதப்படும் காகங்கள், நம்முடைய ஜாதகத்தோடு தொடர்புடையதாக கருதப்படுகிறது. அண்டங்காக்கை தனிப்பட்ட முறையில், நம்முடைய வீடுகளில் உட்கார்ந்து சத்தமிடுகிறதென்றால், அது கெட்ட சகுனம் என்று அர்த்தமாம்.

அதேபோல, ஒருவரின் தலைக்கு மேல், காக்கை தொட்டுவிட்டால், குடும்பத்தில் ஏதோ ஆபத்து நடப்பதற்கான அறிகுறியாம்.. வெள்ளை காகத்தை பார்ப்பதும் தீய சகுனம் என்கிறார்கள்.. ஆனால், கழுத்தில் சாம்பல் நிறம் கொண்ட மணி காக்கைகள், நம்முடைய வீட்டில் உட்கார்ந்து கரைவது நல்ல சகுனமாகும்..

மணி காகம்: இந்த மணி காகம், தினமும் வீட்டிற்கு வந்து சென்றாலே, குடும்பத்தில் வளர்ச்சியும், செழிப்பும் கிடைக்கும் என்றும், வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் பெருகுகிறது என்றும் அர்த்தம்.

காலையிலேயே காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். காகம் நம்முடைய வீட்டுக்கு அருகில், வாசலுக்கு அருகில் சத்தமிட்டால், நாம் நினைத்த காரியங்கள் நடந்தேறும்.. குடும்பத்தில் தம்பதி ஒற்றுமை தழைக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடையின்றி நடக்கும். குழந்தை பாக்கியம் மேம்படும். சந்ததியினர் வாழ்வும் சிறக்கும்.

கடன் பிரச்சனை: கடன் பிரச்சினையால் தவிப்பவர்கள், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளவர்கள், வீட்டில் யாருக்காவது உடல்நலம் குறைபாடு உள்ளவர்கள், தினமும் காகத்துக்கு உணவிட்டு வரவேண்டும்.

சனிபகவானுக்கு வாகனமாக உள்ள காகம் உள்ளதால்தான், இறந்து போன ஆத்மாக்கள், காகத்தின் ரூபத்தில் நம்முடைய வீடு தேடி வருவதாக நம்பப்படுகிறது. அதனாலேயே அமாவாசை தினங்களில் காகத்திற்கு உணவு வைக்கப்படுகிறது. அதேபோல, சனிக்கிழமைகளிலும், விரத தினங்களிலும் படையலிட்டு, காகத்திற்கு உணவு வைக்கும் முறை உள்ளது. சிலர் பரிகாரங்களுக்காகவும் சாப்பாடு வைப்பார்கள்.

முக்கிய விஷயங்கள்: இதுபோல காகத்திற்கு சாதம் வைக்கும்போது, உணவுகளை வைக்கக் கூடாது. தீட்டுடன் இருக்கும்போது சாதம் வைக்க கூடாது. மீதமான உணவுகளை அல்லது எச்சில் உணவை வைக்கக்கூடாது.. குளிக்காமலும் காகத்திற்கு சாதம் வைக்கக்கூடாது. பெண்கள் மாதவிடாய் சமயத்தில் காகத்திற்கு சாதம் வைக்க கூடாதாம்.

காகம் கிழக்கு, தெற்கு பகுதியில் கரைந்தால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.. தென்மேற்கு பகுதியில் இருந்து காகம் கரைந்தால், பண வரவு கிடைக்கும்.. தென் கிழக்கு பகுதியில் காகம் கரைந்தால், குடும்ப கஷ்டங்கள் தீரும். மேற்கு பகுதியில் கரைந்தால் மழை வருவதற்கான அறிகுறியாகும். வட மேற்கு மற்றும் வடக்கில் காகம் கரைந்தால் எதிர்பாராத நஷ்டம் வந்துவிடுமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+