தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு தெரியுமா?
சென்னை: தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை சென்னை, திருவள்ளூர், காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னையை சுற்றி நேற்று இரவு முதலே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளில் இன்று இரவு முழுவதும் இடைவிடமால் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று கனமழைக்கு நடுவில் சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் குடைகளை பிடித்துக்கொண்டு பள்ளிக்கு சென்றார்கள். இந்நிலையில் நாளை சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.. அதேநேரம் சென்னை மாவட்டத்தில் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறையா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.
அதேநேரம் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவ.15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவ.15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், காரைக்கால், புதுச்சேரி மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் நாளை (நவ.15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை ஒட்டி உள்ள செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இரவு 11 மணி வரை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. தாம்பரம், குரோம்பேட்டை பகுதியில் மிக கனமழை கொட்டி தீர்ப்பதால் நாளை விடுமுறை அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. நாளை காலை தான் இதுகுறித்து நிலவரம் தெரியவரும். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நாளை (நவ.15) விடுமுறையா என்பதும் நாளை காலை தான் தெரியவரும்..
மேலும் கனமழை பெய்து வரும் பல்வேறு மாவட்டங்களுக்கு நவம்பர் 15ம் தேதி விடுமுறையா என்பது நாளை தான் தெரியவரும். சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை. கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை காலை 8-30 மணி வரை மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலார்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், விடிய விடிய இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications