தோனி மகள் ஜிவா படிக்கும் ஸ்கூல் எது தெரியுமா? கட்டணம் எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
சென்னை: சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் தற்போதும் கலக்கி வரும் தோனியின் மகள் ஜிவா தோனி படிக்கும் பள்ளி மற்றும் பள்ளியின் கட்டணம் தொடர்பான தகவல்கள் பரவி வருகின்றன. அதுபற்றி இங்கு பார்க்கலாம்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தோனிக்கு ரசிகர்கள் ஆதரவு என்பது இன்னமும் குறையவில்லை. இந்தியாவில் மட்டும் இன்றி உலகம் முழுவதும் தோனிக்கு ரசிகர்கள் உள்ளனர். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு வீரராக தோனி விளையாடி வருகிறார். 43 வயதான தோனி, முன்பை போல பேட்டிங்கில் அதிரடி காட்ட தடுமாறினாலும் விக்கெட் கீப்பிங்கில் தன்னை மிஞ்ச யாரும் கிடையாது என்பதை தற்போதும் நிரூபணம் செய்து வருகிறார்.

ஸ்டம்பிங்கில் கலக்கும் தோனி
தோனி பேட்டிங்கை பார்ப்பதற்காக ஐபிஎல் போட்டியை பலரும் பார்க்கிறார்கள் என சொல்லும் அளவுக்கு அவருக்கான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. பிற வீரர்களை போல தோனி சமூக வலைத்தளங்களில் அவ்வளவாக ஆக்டிவாக இருக்க மாட்டார். எப்போதாவது ஒரு வீடியோ, புகைப்படத்தை தோனி பதிவிடுவதை பார்க்க முடியும். அதுவும் இணையத்தில் பெரும் பிரளையத்தையே கிளப்பும் அளவுக்கு வைரல் ஹிட் ஆகும்.
அதேநேரத்தில் தோனியை போல அல்லாமல் அவரது மனைவி சாக்ஷி தோனி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். அடிக்கடி சோஷியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தோனியின் மகளான ஜிவா பெயரிலும் தனியாக ஒரு இன்ஸ்டகிராம் பக்கம் உள்ளது. இதில் அடிக்கடி தனது வீட்டு செல்லப்பிராணிகளுடன் விளையாடும் புகைப்படங்கள் வெளியிடப்படும். ஜிவா தோனியை இன்ஸ்டாகிராமில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்பற்றுகிறார்கள். 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி பிறந்த ஜிவாவுக்கு தற்பொது 10 வயதாகிறது.
எந்த பள்ளியில் படிக்கிறார்
ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் தோனி குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், தோனியின் மகள் ஜிவா தோனி படிக்கும் பள்ளி மற்றும் பள்ளியின் கட்டணம் தொடர்பான தகவல்கள் பரவி வருகின்றன. ராஞ்சியில் உள்ள Taurian world school- என்ற பள்ளியில் ஜிவா தோனி முதலிடத்தில் உள்ளார். இந்தப் பள்ளி கடந்த 2008-ஆம் ஆண்டு ராஞ்சியில் தொடங்கப்பட்டது.
லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸின் முன்னாள் மாணவரான அமித் பஜ்லா என்பவர் இந்த பள்ளியை தொடங்கியுள்ளார். கல்வியின் திறன் மற்றும் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுக்காக இந்த பள்ளி இந்திய அளவில் புகழ்பெற்ற ஒன்றாக இருக்கிறது. ராஞ்சியில் 65 ஏக்கர் பரப்பளவில் இந்த பள்ளி அமைந்துள்ளது. பள்ளியில் இயற்கை விவசாயம், குதிரை பயிற்சி, உடற்கல்வி மற்றும் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையிலான சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
கட்டணம் எவ்வளவு?
ராஞ்சியில் உள்ள முன்னணி பள்ளிகளின் லிஸ்டில், இந்த பள்ளிதான் முதலிடத்தில் உள்ளது. கட்டணம் பற்றி பார்த்தால். எல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை பல்வேறு கட்டணங்கள் உள்ளன. வகுப்புகளுக்கு தகுந்தபடி கல்வி கட்டணம் மாறுபடும். எல்.கே.ஜியில் இருந்து எட்டாம் வகுப்பு வரை தோராயமாக ரூ.4.70 லட்சம் வரை ஆண்டுக்கு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதன்படி, ஜிவா தோனிக்கும் கல்வி கட்டணமாக ஆண்டுக்கு 4 லட்சம் வரையில் இருக்கும் எனத் தெரிகிறது.
ஜிவா தோனி படிக்கும் பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கட்டணமாக ரூ.5.10 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. யூனிபார்ம், புத்தகம், படிப்பதற்கு தேவையான பிற மெட்ரீயல்கள் என அனைத்திற்கும் சேர்த்து இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications