இந்தியாவிலேயே குறைந்த ரேட்டில் தங்கம் கிடைக்கும் மாநிலம் எது தெரியுமா? காரணம் இதுதானாம்
சென்னை: இந்தியாவில் தங்கத்தின் விலையானது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. டெல்லி, சென்னை என நகரங்களுக்கு தகுந்தபடி லேசான மாற்றம் இருக்கும். இதில், இந்தியாவிலேயே மிக குறைந்த விலையில் தங்கம் கேரளாவில் தான் கிடைக்கிறது. மற்ற மாநிலங்களை விட கேரளாவில் தங்கம் விலை ஏன் குறைவாக விற்கப்படுகிறது என்ற காரணத்தையும் இங்கு பார்க்கலாம்.
தங்கம் விலை தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. அதிலும் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. தங்கம் விலையை பொறுத்தவரை சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரம், உள்ளூர் சந்தையில் விதிக்கப்படும் வரி ஆகியவற்றின் அடிப்படையில் விலையானது மாறுபடும்.

தங்கம் விலை குறைவான மாநிலம்
இந்தியாவில் கூட தங்கத்தின் டெல்லி, சென்னை என நகரங்களுக்கு தகுந்தபடி லேசான மாற்றம் இருக்கும். அதே நேரத்தில் இந்தியாவிலேயே மிக குறைந்த விலையில் தங்கம் கிடைக்கும் மாநிலமாக இருப்பது எதுவென்று சொன்னால் கேரளாதான் என்கிறார்கள். நாட்டின் பிற மாநிலங்களில் விற்பதை விட கேரளாவில் விலை கொஞ்சம் குறைவாக உள்ளது. அது ஏன் கேரளாவில் மட்டும் குறைவாக இருக்கிறது.. எவ்வளவு குறைவாக இருக்கிறது என்ற விவரங்களை பார்க்கலாம்.
தங்கம் விலை மாறுபாடுக்கு பல காரணங்கள் உள்ளன. வரி விதிப்பு, இறக்குமதி வரி, போக்குவரத்து செலவு, உள்ளூர் தேவை உள்ளிட்டவற்றை அடிப்படையில் தங்கம் மீதான விலையில் சற்று மாறுபாடு ஏற்படுகிறது.
கேரளாவில் விலை கம்மியாக துறைமுகம் ஒரு காரணியாக சொல்லப்படுகிறது. அதாவது அருகில் உள்ள தூறைமுகங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால், போக்குவரத்து செலவு என்பது பிற மாநிலங்களை விட சற்று குறைவாக உள்ளது.
ஏன் குறைவாக விற்கப்படுகிறது
அது மட்டும் இன்றி கேரளாவில் வரி ஏய்ப்பு என்பதும் மிக பொதுவான ஒன்றாக இருப்பதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன. இதனால், வியாபாரிகள் போட்டிக்கொண்டு விலையை கொஞ்சம் குறைவாக கொடுக்கிறார்கள். இதுபோன்ற காரணங்களால் நாட்டின் பிற மாநிலங்களைவிட கேரளாவில் விலை கொஞ்சம் குறைவாக உள்ளது. அதுமட்டும் இன்றி கேரளாவில் நகை தொழில் அதிக அளவில் சிறு குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களால் நடத்தப்படுகிறது.
இந்த நிறுவனங்களுக்கு பெரிய அளவில் செலவும் பிடிக்காது என்பதால் கொஞ்சம் குறைவான விலையில் விற்கின்றன. அதற்காக தங்கம் விலை குறைவு என்பதற்காக ஆயிரக்கணக்கில் எல்லாம் குறைவு இல்லை. நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், கேரளாவில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ. 5 முதல் ரூ. 20 வரை தோராயமாக குறைவாக இருக்கும்.
தங்கம் அதிகம் வாங்கும் மாநிலம்
அதேபோல இந்தியாவிலேயே தங்கம் அதிகம் வாங்கும் இடமாகவும் கேராளதான் உள்ளது. உலக தங்க கவுன்சில் அறிக்கையின்படி கேரளாவில் ஆண்டுக்கு 200 - 225 டன் அளவுக்கு தங்கம் வாங்கப்படுகிறதாம். கேரள மக்கள் இடையே தங்கத்தின் மீதான ஈர்ப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதை காட்டும் விதமாக இது உள்ளது. கேரளாவிற்கு அடுத்தபடியாக கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் அதிக அளவு தங்க விற்பனை நடைபெறுகிறது.
அதேபோல உலக அளவில் தங்கம் அதிகம் வாங்கும் நாடுகள் என்று பார்த்தால் முதலிடத்தில் சீனா உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. பட்டியலில் மூன்றாவது இருக்கும் நாடு அமெரிக்கா ஆகும். உலக அளவில் தங்கம் விலை குறைந்ததாக இருக்கும் நாடுகள் என்று பார்த்தால் மலாவி, கொலம்பியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் உள்ளன. அதேபோல துபாயிலும் தங்கம் விலை இந்தியாவை விட குறைவாக உள்ளது.












Click it and Unblock the Notifications