Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயகாந்திற்கு பெண் பார்க்கும் படலம்! பிரேமலதாவை பார்க்க கேப்டன் போகலையாம்.. யாரெல்லாம் போனாங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்திற்கு பிரேமலதாவை பெண் பார்க்க சென்ற போது யார் யார் வந்தார்கள் தெரியுமா? சுவாரஸ்யமான சம்பவத்தை பார்ப்போம்!

சாய் வித் சித்ரா எனும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுப்பையா தனது பேட்டியில் கூறியிருப்பதாவது, முதலில் ராவுத்தர், அடுத்து விஜயகாந்த், அடுத்து நான் இப்படி வரிசையில் திருமணம் நடக்க வேண்டும் என ஆசைப்பட்டோம். எப்போதும் விஜயகாந்த், "எனக்கெங்கே கல்யாணம் ஆக போகுது" என்றே பேசி வருவார். என் வீட்டிலோ, "திருமணம் செய்து கொள்" என தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் நானோ விஜயகாந்துக்கு திருமணம் ஆனவுடன்தான் எனக்கு என கூறிவிட்டேன்.

Do you know who had gone to see Premalatha for Vijayakanth marriage

பெண் பார்க்கும் படலம்: இதனால் விஜயகாந்துக்கு தீவிரமாக பெண் பார்க்க தொடங்கினோம். ஏடிஜிபி ராதாகிருஷ்ணன் நீலகிரி மாவட்ட எஸ்பியாக இருந்த போது ஷூட்டிங்கிற்கு தேவையான அனுமதியை அவரிடம் வாங்கும் போது எனக்கு நல்ல பழக்கம். அதனால் விஜயகாந்துக்கு பெண் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் என்றேன்.

அதற்கு அவரும் ஒரு பெண் இருக்கிறார் என்றும், அவர் திருவண்ணாமலையில் இருக்கிறார் என்றும் கூறி பிரேமலதாவின் அப்பா கண்ணையா நாயுடுவின் போன் நம்பரை கொடுத்தார். உடனே நான் விஜயகாந்தின் அக்கா வீட்டுக்காரை தொடர்புக் கொண்டு விஷயத்தை சொன்னேன். அவரும் ஓ பார்க்கலாமே என கூறினார்.

மதுரை டூ திருவண்ணாமலை: உடனே நான் நேராக மதுரை சென்று அங்கு அவரையும் அவரது அக்கா கணவரையும் அழைத்துக் கொண்டு கண்ணையா நாயுடுவின் வீட்டுக்கு சென்றோம். அப்போது அவர், "மாப்பிள்ளை யார்" என கேட்டார். அதற்கு நாங்கள் விஜயகாந்த் என்றோம். அவரும், "யாரு நடிகர் விஜயகாந்தா" என கேட்டார். ஆமாம் என்றோம்.

பிறகு கண்ணையா நாயுடு, "பெண் தற்போது சென்னையில் அவருடைய அக்கா வீட்டில் இருக்கிறார். நான் வேண்டுமானால் அந்த அட்ரஸ்ஸை கொடுக்கிறேன் , நீங்கள் போய் பாருங்கள்" என்றார். பிறகு விஜயகாந்துக்கு சொல்லாமல் பிரேமலதாவை நானும் விஜயகாந்தின் அக்கா, அவருடைய கணவர் ஆகிய 3 பேரும் சென்றோம். அந்த வீட்டில் சுதீஷும் இருந்தார்.

விஜயகாந்த்: எங்களுக்கு பெண்ணை பிடித்துவிட்டது. ஜாதக பொருத்தமும் பக்காவாக பொருந்தியிருந்தது. இதனால் விஜயகாந்திடம் சொன்னோம். அதற்குள்ளாக விஜயகாந்த் குறித்து கண்ணையா நாயுடு யாரிடமோ விசாரித்து "அவர் நல்ல பையன்" என சொன்னதால் இந்த சம்பந்தத்தை விட அவருக்கு மனமில்லை. அதனால் எங்களுக்கு தொடர்ந்து போன் செய்து வரன் என்னாச்சுப்பா என கேட்டபடி இருந்தார்.

பிறகுதான் விஜயகாந்தை அழைத்துக் கொண்டு பிரேமலதாவை மீண்டும் பெண் பார்த்தோம். பிறகு அவர்களுக்கு திருமணம் ஆனது. விஜயகாந்துக்கும் பிரேமலதாவுக்கு சென்னை பாண்டி பஜாரில்தான் திருமணம் நடந்தது. அப்போது சக்கரைதேவன் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. ஷூட்டிங்கை இரு நாட்கள் அப்படியே நிறுத்தி வைத்துவிட்டு அனைவரையும் திருமணத்திற்கு வர சொன்னார் விஜயகாந்த். என் வாழ்வில் மறக்க முடியாத நாள் என்றால் அது அவருடைய திருமண நாள்தான்.

மறைந்த முதல்வர் கருணாநிதி: திருமணத்திற்கு மறைந்த முதல்வர் கருணாநிதி வந்ததால் அங்கு பாதுகாப்பு அதிகமாக இருந்தது. இதனால் திருமணத்திற்கு வருவோரை போலீஸார் தடுத்துவிடக் கூடாது என்பதற்காக நான் வெளியே இருந்து எல்லாரையும் உள்ளே அனுப்பி வைத்தேன். கடைசியில் நான் உள்ளே சென்ற போது கதவை பூட்டிவிட்டார்கள். டிஎஸ்பி சிவனான்டியிடம் எவ்வளவோ சொல்லியும் அவர் உள்ளே விடவில்லை.

விஜயகாந்த் கேட்ட கேள்வி: சார் விஜயகாந்துக்கு பெண் பார்த்ததே நான்தான். அவரது உதவியாளர் என்றேன். அதற்கு டிஎஸ்பி, "பரவாயில்லை! நில்லுங்கள்" என்றார். வெளியே திரையில் விஜயகாந்த் தாலி கட்டுவதை பார்த்தேன். அப்போது பெண்ணும் மாப்பிள்ளையும் காரில் ஏறும்போது விஜயகாந்த் அங்கிருந்தவர்களிடம், "சுப்பையா எங்கே" என கேட்டு என்னை அழைத்து வர சொன்னார். அப்போது ஏதோ நாம் சாதித்தது போல் இருந்தது. இவ்வாறு சுப்பையா தெரிவித்துள்ளார். விஜயகாந்திற்கு இரு மகன்கள் விஜய பிரபாகரன், தந்தையை போல் அரசியலுக்கு வந்துள்ளார். இளைய மகன் சண்முக பாண்டியனும் தந்தையை போல் நடிகர். இவர் சகாப்தம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+