சொல்லாமலே விவாகரத்து செய்த ஜெயம் ரவி! ஆர்த்தி யார் தெரியுமா? அவரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
சென்னை: ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி ரவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ள நிலையில், ஆர்த்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விவாதம் எழுந்துள்ளது. கணவனை ஆர்த்தி பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ள நிலையில்.. ஆர்த்தியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு எவ்வளவு என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ரவி, விவாகரத்து பற்றி தன்னிடம் ரவி எதுவும் சொல்லவில்லை. என்னிடம் ஆலோசனை செய்யாமல் விவாகரத்து பற்றி அறிவித்துள்ளதாக ஆர்த்தி ரவி புகார் வைத்துள்ளார். அதில், சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக நான் உணர்கிறேன்.

என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல..., என்று கூறியுள்ளார்.
சொத்து மதிப்பு: கணவனை ஆர்த்தி பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ள நிலையில்.. ஆர்த்தியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு எவ்வளவு என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று இங்கே பார்க்கலாம். ஆர்த்தியின் புகுந்த வீடு பிரபலமான சினிமா குடும்பம் என்றால்.. அவரின் பிறந்த வீடும் பிரபலமான பணக்கார குடும்பம்தான். அவரின் அம்மா சுஜாதா விஜயகுமார் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தயாரிப்பாளராக இருக்கிறார். இதனால் ஆர்த்தி இதற்கு முன்பே மீடியா துறையில் இருந்துள்ளார். அதேபோல் அவர் தனது குடும்ப பிஸினஸ்களை கவனித்துவந்துள்ளார் .
தனியாக அவர் பிஸ்னஸ் செய்து வருகிறார். அதேபோல் சமூக வலைதள இன்ஃபளுயன்சராக இருக்கிறார். காஸ்மெடிக் உள்ளிட்ட துறைகளில் பிஸினஸ்களை நடத்தி வருகிறார். இதன் மூலம் அவர் வருடத்திற்கு 1 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது. அவரின் சொத்து மதிப்பு 10 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விவாகரத்து: முன்னதாக ஆர்த்தி அளித்துள்ள விளக்கத்தில், ஆழ்ந்த மன வேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன். ஆனால் என் மீது குற்றம் சாட்டியும் என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் என் குழந்தைகளின் நலனும், எதிர்காலமுமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது.
மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் இவற்றை மறுப்பதும் என் முதல் கடமையாகிறது. தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும், மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையாய கடமை. காலம் நடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன், என்று கூறியுள்ளார் .
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications