அதிமுக - பாஜக கூட்டணி கன்பார்ம்.. கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் தெரியுமா? வெளியான தகவல்
டெல்லி: அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாவதற்கான சூழ்நிலைகள் தெரிய தொடங்கி உள்ளன. இன்றைய நாள் அதற்கான தொடக்கமாக, அடித்தளமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால்.. யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை பற்றியும் டெல்லியில் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடத்தினார். சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிமுக அலுவலகத்தை பார்வையிட டெல்லி வந்ததாக கூறிய எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆலோசனை நடத்தினார். முதலில் அதிமுக நிர்வாகிகளை கூட்டாக சந்தித்த அமித்ஷா, பிறகு எடப்பாடி பழனிசாமி உடன் தனியாகவும் பேசியுள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி
பாஜக, அதிமுக இரண்டும் மாறி மாறி கூட்டணிக்கு தூதுவிட தொடங்கி உள்ளன. திமுகதான் எதிரி; வேற எந்த கட்சியுமே எதிரி இல்லை; திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறவே கூடாது என அதிரடியாக யோசிக்க முடியாத அளவிற்கு பல்டி அடித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இன்னொரு பக்கம் அண்ணா திமுக எங்களுக்கு எதிரியே இல்லை..திமுகதான் எங்கள் ஒரே எதிரி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கூறியிருக்கிறார். இதனால் 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் அண்ணா திமுக- பாஜக கூட்டணி அமையும் என்றே கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து விடப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல்வர் வேட்பாளர்
இந்த நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால்.. யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை பற்றியும் டெல்லியில் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி எடப்பாடி பழனிச்சாமிதான் என்டிஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி உறுதி. ஆனால் பின்னர் அறிவிக்கப்படும்.
முதல்வர் வேட்பாளர் வாய்ப்பை எடப்பாடி விட்டுக்கொடுக்கவில்லை. ஆனால் அவருக்கு வேறு விதமாக லாக் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது முதல்வர் வேட்பாளர் பதவி வேண்டும் என்றால்.. இந்த கூட்டணியில் சேரக்கூடிய மற்றவர்கள் பற்றி நீங்கள் கேள்வி எழுப்ப கூடாது. பாஜகவின் தலைவர் பதவி போன்ற விவகாரங்களில் தலையிட கூடாது என்று எடப்பாடியிடம் பேசியதாக கூறப்படுகிறது.
கூட்டணி
அதாவது எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர். ஆனால் அவர் அண்ணாமலை பதவியை மாற்ற வேண்டும் என்று அமித் ஷாவிடம் கோரிக்கை வைக்க முடியாது. அதோடு பாஜக டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை கூட்டணியில் சேர்த்தால் கூட அதை எடப்பாடி பழனிச்சாமி கேட்க கூடாது என்று செக் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்தே இன்று கூட்டணியை முடிவு செய்துள்ளனர். ஆனால் இதை சென்னையில்தான் அறிவிப்பார்கள். அதாவது சென்னையில் அண்ணாமலையை வைத்துக்கொண்டு அரிக்க வேண்டிய சூழல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்போதைக்கு கூட்டணி பற்றிய அறிவிப்பு இருக்காது.. விரைவில் இருக்கும் என்று தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications