முடியலை சாமி முடியலை.. பொண்ணு பாத்துக் கொடு.. நீ மட்டும் பாத்துக் கொடுத்தா? சிவனையே பதற வைத்த பக்தன்
சென்னை: இணையத்தில் ஒரு கடிதம் வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த கடிதத்தை எழுதியவர், கடிதம் எழுதிய முகவரி, கடிதத்தில் உள்ள சமாச்சாரம் அனைத்துமே இணையவாசிகளால் ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வருகிறது. யார் இந்த இளைஞர்?
பொதுவாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், தங்களது மனதிலுள்ள குறைகள், அல்லது தேவைகளை கடவுளிடம் சொல்லி வேண்டிக் கொள்வார்கள். கடவுளிடம் அளவுக்கு அதிகமாக நெருக்கமாகிவிடுபவர்கள், கடிதம் எழுதி, கோயில் உண்டியலில் போட்டுவிடுவார்கள்.
இப்படி எழுதும் கடிதங்கள் அவ்வப்போது மீடியாக்களில் வெளியாகி பரபரப்பை தந்துவிடும்.. 2 மாதங்களுக்கு முன்பு, பழனியில் இளைஞர் ஒருவர், எழுதிய கடிதம் வைரலானது.

முரட்டு பக்தர்: இந்த பக்தர், தனக்கிருக்கும் கடன்தொகையை எல்லாம் ஒரு பேப்பரில் விலாவரியாக எழுதியிருந்தார். அத்துடன், தான் யார் யாருக்கு, எவ்வளவு ரூபாய் கடன் தர வேண்டும்? தனக்கு கடன் தர வேண்டியவர்கள் யார் யார்? என்றெல்லாம் லிஸ்ட் போட்டு, காக்க காக்க கனகவேல் காக்க என்று கந்தசஷ்டி கவசம் பாட்டை முழுமையாக எழுதி, உண்டியலில் போட்டிருக்கிறார். உண்டியல் காணிக்கையை எண்ணும்போது, இந்த கடிதம் கோயில் நிர்வாகத்துக்கு கிடைத்திருக்கிறது.
அதேபோல, மதுரை அவனியாபுரம் கோயிலில் ஒரு ஆச்சரிய சம்பவம் நடந்தது.. அவனியாபுரத்தில் கிபி 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, வெங்கடேசன் என்ற பக்தர் கடிதம் எழுதி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் அட்ரஸ் இல்லாமலேயே இந்த கடிதம் கோயிலுக்கு வந்து கொண்டிருக்கிறதாம்.
நாடார் பெண்: "அம்மை அப்பா சரணம்.. மதுரை நாடார் பெண் அனுஷாவை என்னுடன் தினம் தினம் பலமுறை பேச வையுங்கள். இப்படிக்கு வெங்கடேசன்" என்று ஒருமுறை எழுதிய கடிதம் கோவில் நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்திவிட்டது. கடைசிவரை அந்த வெங்கடேசன் யார்? எங்கே இருக்கிறார்? என்றே தெரியவில்லையாம்.
இந்த பழக்கம் நம்ம ஊரை போலவே, வடமாநிலங்களிலும் இருக்கவே செய்கிறது. இங்கு முருகனுக்கு லெட்டர் எழுதுவதுபோல், அங்கே சிவபெருமானுக்கு லெட்டர் எழுதுபவர்கள் அதிகம். அதிலும் இப்போது ஆடி மாதம் என்பதால், அனைத்து கோயில்களிலுமே சிறப்பு பிரார்த்தனைகளும், நீண்ட தூரம் பாதயாத்திரை வழிபாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
சிவபெருமான்: இந்நிலையில் இளைஞர் ஒருவர் சிவபெருமானுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.. இந்த இளைஞருக்கு இன்னும் கல்யாணமாகவில்லை போலும். பல இடங்களில் தேடியும் இவருக்கு பெண் கிடைக்காததால் நொந்துபோன பக்தர்கள், சிவனுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
முதலில் இந்த கடிதத்தை பார்த்ததுமே, போஸ்ட்மேன் அதிர்ச்சி அடைந்துவிட்டாராம்.. காரணம் அந்த கடிதத்தில், சிவபெருமானின் "கைலாய மலை" என்று அட்ரஸ் எழுதியிருந்ததாம். இதனால் குழப்பமான போஸ்ட்மேன், அந்த கடிதத்தை பிரித்து படித்திருக்கிறார். அதை படித்ததுமே, அதற்கு மேல் ஷாக் ஆகிவிட்டாராம்.
கடைசி முயற்சி: "நான் பலமுறை கல்யாணம் செய்து கொள்ள முயற்சி செய்தும் இன்னும் ஏனோ நடக்கவில்லை. அதனால், கடைசி முயற்சியாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். எனக்கு இனி காதல் திருமணமாக இருந்தாலும்சரி, நிச்சயக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி... எது நடந்தாலும் எனக்கு ஓகேதான்.
அதனால், சிவபெருமானே... நீங்களே பெண்ணாக மாறி வந்து, என்னை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். இதற்காக ஒரு கிலோ கஞ்சாவை உங்களுக்கு காணிக்கையாக தருகிறேன்" என்று எழுதியுள்ளார். இந்த கடிதம்தான் இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. ஆனால், இந்த இளைஞர் எந்த ஊரை சேர்ந்தவர் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லையாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications