சட்டசபையில் அதிக கேள்விகள் எழுப்பியது யார் தெரியுமா... தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க... இதை படிங்க!
சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடித்து கொள்ளப்பட்டது. சட்டசபையில் அதிக கேள்விகள் எழுப்பியவர் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு என்று சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.
முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆகியோருக்கு சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 23-ம் தேதி கூடியது. அன்றைய தினம் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன்பிறகு பட்ஜெட் கோரிக்கை மானியம் மீதான விவாதம் நடந்தது. இந்த நிலையில் இன்றுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் முடித்து கொள்ளப்பட்டது.
தமிழக சட்டசபையின் கடைசி நாளான இன்று பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசுக்கு துணையாக இருந்த துணை முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். முன்னாள் முதல் அமைச்சர்களான மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் விதமாக மீண்டும் ஆட்சி அமைப்போம் என்றும் அவர் கூறினார்.
சட்டசபையில் உரையாற்றிய சபாநாயகர் தனபால் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். அவை நடைபெற்ற அனைத்து நாட்களும் வந்த ஒரே முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என கூறினார். மேலும் சட்டசபையில் அதிக கேள்விகள் எழுப்பியவர் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு என்றும் தனபால் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றம் இன்று கூடியவுடன், ''கேள்வி பதில் நிகழ்வில் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கும்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் நேற்று மாலை முதலே தொடங்கிவிட்டதால் பதில் கூறும்போது விதிகளுக்கு உட்பட்டு பதில் கூற வேண்டும் என கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
