ஆனந்த் அம்பானி- ராதிகா நிச்சயதார்த்த மோதிரத்தை எடுத்து வந்தது யார் ? அம்பானி வீட்டு அதிர்ஷ்டசாலியாமே
சென்னை: ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சன்ட்டின் நிச்சயதார்த்த மோதிரத்தை எடுத்து வந்து கொடுத்தது யார் தெரியுமா?
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் என்கோர் நிறுவன தொழிலதிபரின் மகள் ராதிகா மெர்சன்ட்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது அவர்களது நிச்சயதார்த்த மோதிரத்தை யார் கொண்டு வந்தது தெரியுமா?

அந்த நபர் அம்பானி குடும்பத்தில் அதிர்ஷ்டசாலியாக கருதப்படுகிறார். ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் அந்த மோதிரத்தை எடுத்து வரும் நபரை ஆனந்தின் சகோதரி ஈஷா அம்பானி அறிமுகப்படுத்துகிறார்.
இதையடுத்து அவருடைய செல்ல வளர்ப்பு நாய் அந்த மோதிரத்தை கொண்டு வருகிறது. அந்த நாயின் கழுத்தில் சிவப்பு நிறத்தில் துணி கட்டப்பட்டுள்ளது. அந்த நாய் மேடைக்கு வந்ததுமே அந்த துணியில் இருந்த மோதிரத்தை ஆனந்த் அம்பானி எடுத்து ராதிகாவின் விரலில் போட்டு விடுகிறார்.
அது போல் ராதிகாவும் ஆனந்த் கை விரலில் போட்டு விடுகிறார். இதைத் தொடர்ந்து முகேஷ் அம்பானி, நீடா அம்பானி உள்ளிட்டோர் நடனமாடுகிறார்கள். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஆனந்துக்கும் ராதிகாவுக்கும் இடையே வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இதற்காக மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை அவர்களது ப்ரீ வெட்டிங் நடக்கிறது.
இந்த நிலையில்தான் ஆனந்த் அம்பானி ஒரு விலங்குகள் நல ஆர்வலர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் சிஎன்என் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஆனந்த் கூறியிருப்பதாவது: சிறு வயது முதலே எங்களை என் அம்மா, அப்பா காடுகளுக்குத்தான் சுற்றுலா அழைத்து செல்வார்கள்.
அழியும் தருவாயில் இருந்த 50 முதல் 60 வகையான உயிரினங்கள் எங்கள் மறுவாழ்வு மையம் மூலம் மீட்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் விலங்குகளுக்கான பிரத்யேக பல்கலைக்கழகம் ஒன்றையும் உருவாக்க உள்ளதாகவும் மாணவர்கள் பயிற்று பெற்றுக் கொள்ளலாம். வன விலங்குகளுக்கான மையங்களும் மறுவாழ்வு மையங்களும் குறைவாகவே உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ரிலையன்ஸ் குழுமத்தின் சார்பில் சுமார் 2500 ஏக்கர் நிலத்தில் யானை உள்ளிட்ட வன விலங்குகளை பராமரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் முன்னெடுப்பில் உருவாகி வருகிறது. இங்கு 200 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications