அசைந்தது "கோட்டை".. திமுக அரசின் "ஆக்ஷன்ஸ்".. 48 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்.. இன்னும் லிஸ்ட் வருதாமே
சென்னை: நேற்றைய தினம் ஒரே நாளில் ஐஏஎஸ் அதிகாரிகளும், கலெக்டர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.. தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலையை கிளப்பிவிட்டுள்ளது.. இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?
தமிழக அமைச்சரவை சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அதிகாரிகளின் மாற்றமும் நடந்து வருகிறது.. அந்தவகையில், 4 நாட்களுக்கு முன்பும் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டன..

முதல்வரின் செயலர், உள்துறை செயலர், நிதித் துறை செயலர், ஊரக வளர்ச்சித் துறை செயலர், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் இப்படி 14 ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர்..
குறிப்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
அமுதா: ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.. போக்குவரத்துத்துறை செயலாளர் கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம் ஆகி உள்ளார்.
சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராக மாற்றம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.. இப்படி ஒரு அறிவிப்பு வந்தபோதே, மேலும் சில மாற்றங்கள் நடக்கலாம் என்ற சலசலப்பு கிளம்பியது.. இந்த லிஸ்ட்டில் மாவட்ட கலெக்டர்களும் அடங்குவார்கள் என்றும் தகவல்கள் கசிந்தன..
மரக்காணம்: இதற்கு காரணம், சில அமைச்சர்கள், தங்கள் மாவட்ட கலெக்டர்களை மாற்றும்படி, முதல்வர் ஸ்டாலினிடமே நேரடியாக வலியுறுத்தி வந்தார்களாம்.. மேலும் சிலர், சிறப்பாக செயல்படவில்லை என்ற புகாரும் கோட்டைக்கு பறந்துள்ளது.. அதுமட்டுமல்ல, விரைவில் எம்பி தேர்தலும் வரஉள்ளதால், நம்பிக்கையான போலீஸ் அதிகாரிகளை உயர் பொறுப்புகளில் நியமிக்க வேண்டும் என்ற முடிவில் திமுக மேலிடம் இருந்து வந்தது.. அதனால் முதல்வர் ஸ்டாலினும் இதுகுறித்த முடிவுகளை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது.
ராஜினாமா: இப்படிப்பட்ட சூழலில்தான் யாருமே எதிர்பாரா வகையில் கள்ளச்சாராய விவகாரம், திடீர் தலைவலியையும், அதிர்ச்சியையும் தமிழகத்துக்கு ஏற்படுத்திவிட்டது.. இதுவரை 22 பேர் இறந்துள்ளனர்.. மொத்த தமிழகமும் கதிகலங்கி போயுள்ளது.. இது அரசுக்கு எதிரான விமர்சனங்களையும் கிளப்பி விட்டு வருகிறது.. முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று, எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டார்..
மாநிலம் முழுதும் அதிர்வலைகளை அரசுக்கு இந்த மரக்காணம் விவகாரம் ஏற்படுத்தி வருகிறது.. இதன் காரணமாக, கலெக்டர்கள் உட்பட, ஐஏஎஸ் அதிகாரிகளை உடனடியாக மாற்ற, அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.. அதன்படிதான், நேற்று இரவு, 16 கலெக்டர்கள் உட்பட 48 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
பீதியில் அதிகாரிகள்: இதில் கலெக்டர்கள் மட்டும், வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.. விரைவில் அடுத்த பட்டியல் வெளியாகும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த திடீர் மாற்றங்களால் ஒட்டுமொத்த அதிகாரிகளும் கதிகலங்கி போயுள்ளனர்.. அதேசமயம், முதல்வர் ஸ்டாலினின் இந்த அதிரடிகள், தமிழக மக்களிடம் கவனம் பெற்றும் வருகிறது.












Click it and Unblock the Notifications