Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வடபழனியில் நடந்த அக்கப்போரு.. யாரிந்த ஜெகஜால கில்லாடி.. ஓவர் நெருக்கத்தால் வந்த வினை.. பரிதாப பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்நேரம் ஜரூராக திருமணம் நடந்து முடிந்து, மகிழ்ச்சியுடன் இல்லறத்தை துவங்கியிருக்க வேண்டிய தீபா, போலீஸ் ஸ்டேஷனில் கண்ணீர் மல்க போராடி கொண்டிருக்கிறார்.. தீபாவுக்கு என்ன நடந்தது?

முன்பெல்லாம், பெண் பார்க்கும் படலம் நிகழ்ச்சியில், மாப்பிள்ளையுடன் வந்து, பெண்ணை பார்த்துவிட்டு போய்விட்டால், மாப்பிள்ளை வீட்டிற்கு பெண்ணின் போன் நம்பர் கூட தருவதை தவிர்ப்பார்கள்..

Do you know Why did Chennai Nungambakkam woman go to Police Station, Who is this Bridegroom

காரணம், ஆணை பற்றியோ, பெண்ணை பற்றியோ கல்யாணத்துக்கு முன்பே விசாரிக்க போய், ஏடாகூட விஷயங்கள் கேள்விப்பட்டு, பல கல்யாணங்கள் இதனால் தடைபட்டு போன துயரமும் நடந்துவிடக்கூடும் என்பதால்தான்..

நெருக்கம்: ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. "புரிதல்" என்ற விஷயம் இருதரப்புக்குமே கட்டாயம் தேவைப்படுகிறது.. அதே நேரத்தில், திருமணத்துக்கு முன்பேயே "ஓவர் நெருக்கம்" சிலசமயம் ஆபத்தாகவும் முடிந்துவிடுகிறது.. இதோ மாப்பிள்ளை ஒருவருடன், இளம்பெண்ணுக்கு நிச்சயமும் நடந்துள்ளது.. நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதால், மணமக்கள் இருவருமே போன் நம்பரை பரிமாறிக்கொண்டு பேசிவந்திருக்கிறார்கள். இங்குதான் விவகாரம் வெடித்துள்ளது.

நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தீபா. வயது 23 ஆகிறது.. இவர், ஆயிரம் விளக்கு மகளிர் ஸ்டேஷனில் ஒரு புகார் தந்திருந்தார்.. அந்த புகாரில் உள்ளதாவது:

செல்போன்: "எனக்கும், நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கும், 2 வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஏப்ரல் 26ம் தேதி உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு பாலாஜி, என்னுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். வருங்கால கணவர் தானே என்று அவருடன் பேசி வந்தேன். எங்கள் திருமணம் கடந்த 3ம் தேதி நடக்க இருந்தது.

முன்னதாக, கடந்த மே 2ம் தேதி, திருமணம் மண்டபம் பதிவு செய்வதற்காக, பாலாஜி என்னை அழைத்தார். அதன்படி நான் பாலாஜியுடன் சென்றேன். 2 பேரும் வடபழனியில் நல்ல மண்டபம் உள்ளதா என்று தேடி பார்த்தோம். அப்போது, பாலாஜி என்னை வெளியில் அழைத்து சென்றார்.

திருமணம்: அங்கு, நாம் தான் விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறோமே, "நான் உன்னுடைய கணவன் ஆகப் போறவன் தானே? " என்று கூறி, பாலியல் ரீதியாக ஆசைகளை தூண்டினார். இதனால் நாங்கள் 2 பேருமே உல்லாசமாக இருந்தோம். அதன்பிறகு நான், திருமணத்திற்கு முன்பு அவசரப்பட்டு இப்படி தவறு செய்து விட்டோமே, என்று பாலாஜியிடம் சொல்லி அழுதேன். ஆனால் என்னை அவர் சமாதானம் செய்தார்.

அதன்பிறகு திருமணத்திற்கு தேவையான பொருட்கள் மற்றும் பத்திரிகைகள் அடித்து உறவினர்களுக்கு கொடுத்த பிறகு, பாலாஜி என்னிடம் சரிவர பேச மறுத்து, வெறுப்பாக நடந்து கொண்டார். இதுபற்றி நான் அவரிடம் கேட்டபோது, தகராறில் ஈடுபட்டார். மேலும், என்னை திருமணம் செய்ய முடியாது என்றும் மறுத்துவிட்டார். பிறகு என்னிடம் முறையாக எந்த பதிலும் கூறாமல், கடந்த 3ம் தேதி நடக்க இருந்த திருமணத்தை நிறுத்திவிட்டார்.

தாய், சித்தி: இதனால், உறவினர்களுக்கு பதில் சொல்ல முடியாமல், எனக்கும், எனது பெற்றோருக்கும் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது. எனவே, என்னை திருமணம் செய்வதாக கூறி, உல்லாசமாக இருந்துவிட்டு, திருமணம் செய்ய மறுத்த பாலாஜி மற்றும் அவரது தாய், சித்தி ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த புகாரின்பேரில், ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார், இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்து ஏமாற்றிய பாலாஜியை கைது செய்து, அவரிடமும், அவரது குடும்பத்தாரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை சொல்லி, இளம்பெண் ஏமாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+