இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி.. விவசாயிகளுக்கும் குஷி.. "இந்த பொருள்" விலை திடீர்னு விலை குறைந்தது.. ஆஹா
சென்னை: தமிழ்நாட்டில் அரிசி மற்றும் காய்கறிகளின் விலை தொடர்ந்து விலை அதிகரித்து வரும்நிலையில், பருப்புகளின் விலை விற்பனை குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
விவசாயிகளின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், மத்திய அரசு பல்வேறு சலுகைகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. மேலும், விவசாயிகளின் விளைபொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்து நுகர்வோருக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

அமித்ஷா - மோடி: அந்தவகையில், பாரத் பிராண்டின் கீழ் ஆட்டா (கோதுமை மாவு) விற்பனை செய்வதற்கான 100 நடமாடும் வேன்கள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.. அதாவது, கோதுமை மாவு ஒரு கிலோ இனி 27.50 ரூபாய்க்கு கிடைக்கும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.
அதேபோல, துவரம் பருப்பை விவசாயிகள் கொள்முதல் செய்வதற்காகவே, இணையதளம் ஒன்று, மத்திய அரசால் 2 நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை பயன்படுத்தி, இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு, இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோரை கூட்டமைப்பிடம் துவரம் பருப்பை விவசாயிகள் விற்பனை செய்ய முடியும்.. இதன்மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலை அல்லது சந்தை விலை விவசாயிகளுக்கு கிடைக்கும். இந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது:
அமித்ஷா பேச்சு: 'துவரம் பருப்பு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. அடுத்தக்கட்டமாக உளுத்தம்பருப்பு, மசூர் பருப்பு கொள்முதலுக்கும் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்படும்.
இந்த இணையதளம் மூலவம் துவரம் பருப்பு விற்பனை செய்ய 25 விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.68 லட்சம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 10 வருடங்களில் பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை இரண்டுக்கும் மேற்பட்ட முறை உயர்த்தப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார்.
துவரம் பருப்பு: இந்நிலையில், தமிழ்நாட்டில் துவரம் பருப்பு விலை கணிசமாக குறைய துவங்கிவிட்டது.. தமிழகத்தை பொறுத்தவரை, வியாபார நகரமான விருதுநகர் மாவட்டத்திலிருந்தே, எண்ணெய் மற்றும் பருப்பு வகைகள் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன்படி, கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்தில் பருப்புகளின் உற்பத்தி போதுமான அளவில் இல்லாமல் இருந்தது.
பருப்பு விலை: இதன்காரணமாக, அனைத்து பருப்புகளின் விலையும் திடீரென அதிகரிக்கப்பட்டுவிட்டது.. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இதனிடையே, இப்போது பருப்புகளின் கொள்முதல் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், விருதுநகர் சந்தையில் பருப்புகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, துவரம்பருப்பு 100 கிலோவிற்கு ரூ.1400 குறைந்து ரூ. 12,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, பாசிப்பருப்பு 100 கிலோவிற்கு ரூ. 100 குறைந்து ரூ. 10,200க்கும், உளுந்தம் பருப்பு 100 கிலோவிற்கு ரூ. 200 குறைந்து ரூ.10,000க்கும், பட்டாணி 100 கிலோவிற்கு ரூ. 300 குறைந்து ரூ. 6400க்கும், மைதா 90 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ. 4280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மல்லி விலை: மல்லி 40 கிலோ ரூ.3450 முதல் ரூ.3600, மல்லி நாடு 40 கிலோ ரூ.2600 முதல் ரூ.3000 வரை விற்கப்படுகிறது. தொலி பருப்பு 100 கிலோ ரூ.10,400, உருட்டு உளுந்தம்பருப்பு நாடு 100 கிலோ ரூ.12,000, பாசிப்பயிறு நாடு 100 கிலோ ரூ.9600, பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோ ரூ.10700 வரை விற்பனை செய்யப்படுகிறது. பருப்பு வகைகள் மட்டுமல்லாமல் அனைத்து எண்ணெய் வகைகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது.
குறிப்பாக, கடலை எண்ணெய் 15 கிலோ 30 ரூபாய் குறைந்து 2800 ரூபாய்க்கும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.7095 ரூபாய்க்கும், பாமாயில் 15 கிலோவிற்கு ரூ.15 குறைந்து ரூ.1325 ரூபாய்க்கும், சர்க்கரை 50 கிலோ ரூ.2070 ரூபாய்க்கும், பொரிகடலை 55 கிலோ ரூ.5000 ரூபாய்க்கும், கொண்டைக்கடலை 100 கிலோ, ரூபாய் 6200 -க்கும் விற்கப்படுகிறது. இந்த திடீர் விலை குறைப்பானது, இல்லத்தரசிகளுக்கு பெருத்த மகிழ்ச்சியை தந்துவருகிறது.












Click it and Unblock the Notifications