பால் கனகராஜ்.. படக்குனு சொல்லிட்டாரே.. பாஜக புள்ளி மீது பாய்ந்த இந்து முன்னணி காடேஸ்வரா சுப்ரமணியம்
சென்னை: தமிழக பாஜக துணை தலைவர் பால் கனகராஜ்ஜூக்கு, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.. என்ன காரணம்?
நாடு முழுவதும் 24 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கிளை வைத்திருந்தது.. ஆனால், நாட்டில் நடந்த பல்வேறு கலவரங்கள் மற்றும் படுகொலைகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக திடீர் புகார் எழுந்ததையடுத்து, அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன..
கைது நடவடிக்கைகளும் நடந்தன.. இதற்கு பிறகு, நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5 வருடங்கள் தடையை விதித்துள்ளது..

கைது நடவடிக்கைகள்: இந்த நிலையில், தமிழக பாஜக துணை தலைவர் பால் கனகராஜ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது.. இதற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காடேஸ்வரா சுப்பிரமணியம் ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்..
அறிக்கையில் கூறியிருப்பதாவது, "2047ல் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம் என்றும், அதற்கு தடையாக இருக்கும் இந்து தலைவர்களை Eliminate செய்யும் சதித் திட்டத்துடன் செயல்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில பொறுப்பாளர்களாக இருந்த 2 வழக்கறிஞர்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மதுரையில் கைது செய்தனர்.

பொறுப்பாளர்கள்: ஆனால் முகமது யூசுப் மற்றும் முகமது அப்பாஸ் என்ற அந்த 2 வக்கீல்களும் இஸ்லாமிய குற்றவாளிகளுக்கு அவர்களது வழக்கில் ஆஜரானார்கள் என்பதற்காக கைது செய்யப்பட்டது போல் ஒரு தவறான பொய் பிரச்சாரத்தை முன்வைத்து சென்னையில் ஒரு சில வழக்கறிஞர்களின் ஏற்பாட்டில் நீதிமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அந்த முகமது யூசுப் மற்றும் முகமது அப்பாஸ் ஆகிய இருவரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொறுப்பாளர்களாக இருந்து செயல்பட்டவர்கள்.
அந்த அமைப்பின் சதி திட்டங்களில் அவர்களுக்கும் பங்கு இருப்பதாக கூறி தான் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவர்களை கைது செய்துள்ளனர்.
பால் கனகராஜ்: இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் பால் கனகராஜ் அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்த பேட்டியில், ஏதோ அந்த 2 வக்கீல்களும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக கைது செய்யப்பட்டதாகவும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜரானதால் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் ஒரு பொய்யான தகவலுடன் பேட்டியளித்து இருக்கிறார்.

2047ம் ஆண்டு இந்தியாவை இஸ்லாமிய நாடாக அறிவிப்போம் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் சதித் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த 2 வக்கீல்களும் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டில்தான் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பால் கனகராஜின் பேட்டி இந்தியாவின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தும் விதமாக இருக்கிறது.
கண்டனம்: இந்திய தேசியத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் விதமாக சதி செயல்களில் ஈடுபட்டு வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் அமைப்பின் மாநில பொறுப்பாளர்களுக்கு ஆதரவாக பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி கொடுத்த பால் கனகராஜின் செயலினை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு












Click it and Unblock the Notifications