"டச் பண்ணிடாதீங்க".. ப்ளீஸ் "அதை" மட்டும் தொடாதீங்க.. போலீஸ் வார்னிங்.. உடனே "நம்பரை" நோட் பண்ணுங்க
சென்னை: ஃபேஸ்புக்கில், ஒரு லைக் போட்டால் 200 ரூபாய் கிடைக்கிறதாம்.. இப்படி ஒரு தகவல் பரபரத்து வரும் நிலையில், முக்கிய வார்னிங் ஒன்றை சைபர் கிரைம் போலீசார் விடுத்துள்ளனர். என்ன அது?
கடந்த சில நாட்களாகவே சைபர் கிரைம் போலீசார், பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்து வருகிறார்கள்.. வாட்ஸ்அப் மூலம் நிறைய மோசடிகள் நடப்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்லியுள்ளனர்.

"வியட்நாம், மொராக்கோ, இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பெண்களின் போட்டோக்கள், வீடியோக்களுடன் அடிக்கடி அழைப்புகள் வருகின்றன. இதனால் சென்னையில் வசிக்கும் இளைஞர்கள் முதல் வயதான நபர்கள் வரை பெரும்பாலானவர்கள் தவித்துப்போய் உள்ளனர். இது போன்ற அழைப்புகளை எடுத்து பேசினால் சில நேரங்களில் செல்போன்கள் செயல் இழந்து விடுகின்றன.
ஜாக்கிரதை: எதிர்முனையில் பேசுபவர்கள் சில நேரங்களில் மவுனமாக இருக்கிறார்கள்.. சிலர் பெண் குரலில் பேசுவதையும் கேட்க முடிகிறது. இந்த அழைப்புகள் எதற்காக வருகின்றன? என்பதை யூகிக்க முடியவில்லை என போன் அழைப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்கிறார்கள்.. வெளிநாடுகளில் இருந்து வரும் இது போன்ற அழைப்புகளை யாரும் எடுக்க வேண்டாம்.
குறிப்பாக வெளிநாட்டு அழைப்புகள் வரும்போது திடீரென ஆடையின்றி பெண்கள் தோன்றி விடுவார்கள்.. அதனை நீங்கள் ஒரு கணம் பார்த்து விட்டாலே உங்கள் போட்டோ அவர்களின் செல்போனில் பதிவாகிவிடும். இதை வைத்து எதிர்முனையில் போன் செய்தவர்கள் உங்களிடம் பணத்தை பறிக்க வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற ஃபோன் அழைப்புகளை புறக்கணிக்க வேண்டும்.. பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி போலீசில் புகார் அளிக்கவேண்டும்" என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆசை ஆசையாய்: அதேபோல, "உங்கள் செல்போன் நம்பருக்கு குறிப்பிட்ட அளவுக்கு பெரிய தொகை பரிசாக விழுந்துள்ளது, அதனை பெறுவதற்கு நீங்கள் பாதி அளவுக்கு பணம் செலுத்த வேண்டும்" என்றெல்லாம் ஆசை காட்டுவார்கள். இதை நம்பி பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு, மோசடிக்காரர்கள் கேட்கும் தொகையை கட்டி ஏமாந்தவர்கள் ஏராளம்..
அதேபோல, சில லிங்க்குகளை அனுப்பி, அதனை கிளிக் செய்தால் "உங்களுக்கு இத்தனை லட்சம் பணம் கிடைக்கும்" என்று ஆசைகாட்டி மோசடி செய்வதும் நடந்து கொண்டிருக்கிறது..
சின்ன மீன் பெரிய மீன்: "சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பதே இந்த மோசடிக்கும்பலின் டிரிக் ஆகும்.. புதிய மோசடி கும்பல் இந்த முறை யூடியூப் சேனல் மூலமாக வலை விரித்து காத்திருக்கிறது.. யூடியூப் சேனல் ஒன்றின் லிங்க்கை அனுப்பி இதனை நீங்கள் லைக் செய்தால் போதும். உங்களுக்கு முதலில் சிறிய தொகை கிடைக்கும் என்று ஆசை காட்டுவார்கள்.
பிறகு தனியாக டெலிகிராம் குரூப் ஒன்றை தொடங்கி இருப்பதாக சொல்லி, அதில் உங்களையும் டீம் லீடர் போல சேர்த்து, வங்கி கணக்கு ஒன்றை தொடங்க சொல்லி, அதில் சென்று நீங்கள் பணம் செலுத்தினால் அதில் அதிக வட்டி கிடைக்கும் என ஆசை காட்டுவார்கள். இதுக்கெல்லாம் ஒரே வழி, தேவையில்லாமல் ஆன்லைனில் சாட்டிங் செய்வதை தவிர்த்தாலே போதும். இது போன்ற சிக்கல்களில் இருந்து தப்ப முடியும்" என்று எச்சரித்து வருகிறார்கள்.
இப்போதும்கூட, சைபா் கிரைம் போலீசார் முக்கிய அறிவிப்பு ஒன்றினை செய்திருக்கிறார்கள்.. அந்த செய்திக் குறிப்பில் உள்ளதாவது:
சிக்கல்கள்: மக்களை சமூகவலைதளத்தின் மூலம் தொடா்பு கொண்டு ஏமாற்றும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளது. முதலில் சில யூடியூப் காணொலிகளுக்கு லைக் மற்றும் கமெண்ட் செய்வதால் நல்ல வருமானம் கிடைக்கும் என பொதுமக்களை நம்ப வைக்கின்றனர்.. அதற்கு சிறிது பணமும் கொடுக்கிறார்கள். பிறகு, அவர்கள் அனைவரும் ஒரு டெலிகிராம் குழுவில் சேர்க்கப்பட்டு, சில ஓட்டல் பக்கங்கள், நிறுவனங்களுக்கு லைக் செய்ய சொல்லி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதற்கிடையில் இணையம் மூலம் பணம் செலுத்தி அதிக லாபம் பெறலாம் என ஒரு இலக்கை அறிமுகப்படுத்துகிறார்கள். அவற்றில் பிட்காயின், கிரிப்டோகரன்சி போன்றவற்றில் மக்களை முதலீடு செய்ய வைக்கின்றனர். இதற்கு பயனாளர் உள்நுழைவு மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உருவாக்கம் செய்கின்றனர். பொதுமக்களை நம்ப வைக்க, மோசடி நபர்கள், தாங்கள் ஏற்கனவே இதில் முதலீடு செய்து நல்ல லாபம் பெற்றதைப்போல் போலியான ஆதாரங்களைக் காட்டுவர்.
முதலீடுகள்: இதை நம்பி பொதுமக்கள் முதலீடு செய்வார்கள்.. முதலில் லாபம் வருவதைப்போல் உருவகம் செய்யப்பட்டு மக்களின் முதலீட்டு தொகை அதிகரிக்கத் தொடங்கியவுடன் பல்வேறு பொய்களைக் கூறி பண மோசடியில் ஈடுபடுகின்றனர்.. எனவே, சமூகவலைதளம் மூலம் அடையாளம் தெரியாத நபர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிக்கவோ, லிங்க்கை தொடவோ, தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி மூலம் பெறப்படும் கடவுச்சொல்லை யாருடனும் பகிரவோ வேண்டாம்.
1930 என்ற உதவி எண்ணை 24 மணி நேரத்துக்குள் தொடர்பு கொண்டால் இழந்த பணத்தை விரைவில் மீட்டெடுக்க முடியும். நிதி இழப்பு அல்லாத பிற புகார்களுக்குwww.cybercrime.gov.in-ல் உள்நுழைந்து புகாரை பதிவு செய்யலாம்" என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications