பிரிட்ஜில் "இதை" மட்டும் வெக்காதீங்க.. ஃபிரிட்ஜை திறந்துமே டமார்.. கருகிய சென்னை குழந்தை.. அலர்ட்
சென்னை: பிரிட்ஜ் வெடித்து சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ப்ரிட்ஜ்கள் வெடித்து பலியாகுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதற்கு என்ன காரணம்?
சென்னை ஆவடி நந்தவன மேட்டூர் நேதாஜி தெருவை சேர்ந்தவர் கவுதம்- பிரியா தம்பதியினர்.. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.. அவர்களது மூத்த மகள் ரூபாவதிக்கு 5 வயதாகிறது. ஆவடியில்உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறாள்.

நேற்று சாயங்காலம், தன்னுடைய வீட்டில் இருந்த ஃபிரிட்ஜ்ஜை சிறுமி திறந்தபோது, எதிர்பாராத விதமாக திடீரென வெடித்து சிதறியது.. பிரிட்டிஜிலிருந்து மின்கசிவு ஏற்பட்டதால், ரூபாவதி மீதும் கரண்ட் பாய்ந்துவிட்டது.
அதிர்ச்சி: இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை தூக்கிக் கொண்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு சென்றார்கள்.. அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ரூபாவதி ஏற்கனவே இறந்துவிட்டதாக சொல்லிவிட்டார்கள்.. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரிட்ஜ் வெடித்து 5 வயது குழந்தை இறந்திருப்பது பெருத்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில்கூட, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பிரிட்ஜ் வெடித்து கருகிவிட்டார்கள்.. பிரிட்ஜை முறையாக பயன்படுத்தாமல் இருப்பதுதான் இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என்கிறார்கள். இந்த பிரிட்ஜின் பின்பக்கம் உள்ள கம்ப்ரசர் மிகவும் முக்கியமானது.
பிரிட்ஜ்: பம்ப், மோட்டார் இவை யாவுமே இதில் அடங்கியிருக்கிறது. அங்குள்ள பைப்புகள் வழியாக குளிர் பதன வாயுவை தள்ளும்போது, அந்த வாயுவானது குளிர்ந்து திரவமாக மாறுகிறது. அப்போது பிரிட்ஜிலுள்ள வெப்பத்தை உறிஞ்சி, உள்ளே வைத்திருக்கும் பொருட்களையும் ஜில்லென்று குளிர்விக்க செய்கிறது.
ஆனால் சில சமயம், குளிர்பதனமானது அழுத்தத்திற்கு உள்ளாகி நகரும்போது, பிரிட்ஜின் பின்பக்கம் சூடாகிவிடும்.. இது பைப் போன்றுள்ள மின்தேக்கி சுருள்களை சுருங்க செய்துவிடும்.. இப்படி சுருங்கிவிட்டால், வாயுவை வெளியேற்றுவதில் தடங்கல் ஏற்பட்டுவிடும். அழுத்தப்பட்ட சுருளுக்குள் அதிக வாயு குவிந்து கொண்டே போவதால், நாளடைவில் அழுத்தம் தாங்காமல் வெடித்துவிடுகிறது.
காற்றோட்டம்: எனவே, எப்போதுமே, பிரிட்ஜை வைக்கும்போது, அரை அடியாவது காலியிடம் விட்டு வைக்க வேண்டும். அப்போதுதான் காற்றோட்டம் செல்ல வசதியாக இருக்கும். இந்த காற்றோட்டம்தான், கம்ப்ரசரை சூடாக்காமல் தடுக்கும்.. எப்போதுமே ஃபிரிட்ஜில் பின்பக்கத்திலிருந்து சத்தம் வந்தால், ஸ்டெப்லைசரில் ஏதாவது கோளாறு இருக்கலாம்.. ஸ்டெப்லைசரில் உள்ள பிளேடுகளில் தூசி இருந்தாலும் இப்படி சத்தம் வரலாம்.
ஃப்ரிட்ஜ்ஜுக்குள்ளிருந்தே கிரீச் போன்ற சத்தம் கேட்டாலும், ஃப்ரீசரிலிருந்து கிளிக் போன்ற சத்தம் கேட்டாலும், அதிலிருக்கும் வால்வு தளர்வாகி இருக்கலாம்.. ஒயர் ஏதாவது துண்டிக்கப்பட்டிருக்கலாம். இதற்கு உடனடியாக எலக்ட்ரீஷியனை அழைத்து வந்து சரிசெய்ய வேண்டும். ஆனால், நன்றாக பயிற்சி பெற்றவர்களிடம் மட்டுமே இதுபோன்ற மின்சாதனங்களை சர்வீஸ் செய்ய தர வேண்டும்.
ஐஸ் கட்டிகள்: அதேபோல, ப்ரிட்ஜிலிருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் அடைப்பு எதுவும் இல்லாதவாறு கவனிக்க வேண்டும்.. அடிக்கடி ஃபிரீசரில், ஐஸ் கட்டிகள் சேர விடக்கூடாது.. பிரிட்ஜ்ஜை நிறுத்திவிட்டு, அதற்கு பிறகு, இந்த ஐஸ் கட்டியை வெளியேற்ற வேண்டும். ஃப்ரீஸரில் உள்ள தேவையில்லாத ஐஸ் கட்டிகளை உடனடியாக நீக்கியாக வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் சில சமயம் மின் கசிவு ஏற்பட்டு வெடித்துவிடும் அபாயம் உள்ளது.
அதேபோல வெளியூர் எங்காவது சென்றால், ப்ரிட்ஜிலுள்ள பொருட்களை வெளியே எடுத்துவிட்டுதான் அணைத்துவிட்டு செல்ல வேண்டும். தண்ணீர் வெளியேற்றும்போது, கம்ப்ரசரில் விழக்கூடாது.. பிரிட்ஜில் எப்போதுமே ஸ்டெப்லைசர்களை பயன்படுத்த வேண்டும். அதேபோல பிரிட்ஜை வேறு எங்காவது நகர்த்தி வைத்தால், குறைந்தது 8 மணி நேரம் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
மாடல்கள்: பழைய மாடல்களில் உள்ள ஃப்ரிட்ஜ்களில், வாயுவின் அழுத்த அளவு 130 என்ற அளவில் இருந்த நிலையில், இப்போதுள்ள புதிய மாடல்களில் 230-லிருந்து 240 வரையிலான உயர் அழுத்தத்தில் வாயு அடைக்கப்பட்டிருக்கிறதாம்.. இப்படியிருக்கும்போது, கம்ப்ரஸரில் உள்ள கேஸ் குழாய்களில், அடைப்பு ஏற்பட்டால், ஃபிரிட்ஜ்கள் வெடிக்க காரணமாகின்றன.
எப்போதுமே, வாயு அழுத்தத்திற்கேற்ப கேஸ் குழாய் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். ஆனால், பழைய மாடல்களில் உள்ள குழாய்களின் அளவையே, புதிய மாடல் ஃப்ரிட்ஜ்களிலும் பயன்படுத்துவதால்தான், கம்ப்ரஸர் சூடாகி விடுவதுடன், இப்படியான விபத்துகள் ஏற்படுதாக கூறுகிறார்கள்.
வாயு அளவு: எனவே, கம்ப்ரஸரில் எந்த அளவுக்கு வாயு அடைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட ஃப்ரிட்ஜ் நிறுவனம் சொல்கிறதோ, அந்த அளவு வாயுதான் அடைக்க வேண்டுமாம்.. அதைவிட முக்கியமாக, மின்கசிவு ஏற்பட்டாலோ, மின்விநியோகம் எப்போதுமே சீராக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள் மின்ஊழியர்கள்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications