"ரிவர்ஸ் கியர்" போட்ட வையாபுரி.. என்னென்னமோ வைகோ பிளான் போட்டாரே.. திமுகவோட சைலண்ட் கேம்.. பலே மதிமுக
சென்னை: திமுகவுடன் இணக்கமான போக்கை மதிமுக கொண்டிருக்கிறது என்றாலும், திடீரென தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று துரை வைகோ சொல்லிவிட்டார்.. இதற்கு என்ன காரணம் தெரியுமா?
மதிமுகவை பொறுத்தவரை, திமுகவுடன் இணக்கமான போக்கை கையாண்டு வருகிறது.. கடந்த முறை தேர்தலின்போது பாஜகவுக்கு எதிரான வைகோவின் கர்ஜனை, திமுக கூட்டணி வெற்றிக்கு அடித்தளமாக அமைந்ததை மறுக்க முடியாது..

கடந்த தேர்தலில் மதிமுகவுக்கு 1+1 என்ற ரீதியில், சீட்டுகளை ஒதுக்கி, தமிழகம் முழுவதும் வைகோவை பிரச்சாரத்துக்கும் அனுப்பியிருந்து அதன் வெற்றியையும் அறுவடை செய்திருந்தது..
வைகோ பேச்சு: இந்த முறை எம்பி தேர்தலில் துரை வைகோ களமிறங்க போவதாக, கடந்த ஒரு வருட காலமாகவே பேச்சு அடிபடுகிறது.. அதற்கேற்றவாறு, துரை வையாபுரியின் அரசியலும் வேகமெடுத்தது..
மதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். உதயநிதி அமைச்சரானதற்கு நேரிலேயே சென்று வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தார். அந்தவகையில், திமுகவுடன் மதிமுகவின் இணக்கமான கூட்டணி நட்பு தொடர்ந்து வருகிறது.. மற்றொருபுறம் பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை எடுத்து, தமிழக கட்சிகளை அலர்ட் செய்து வருவதும் தீவிரமாகி வருகிறது.
மதிமுக வைகோ: வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக மதவாத சக்தி பாஜகவை முழு பலத்துடன் எதிர்க்க அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிச்சயம் மேற்கொள்வார்" என்று துரைவைகோவும் கூறியிருந்தார். அந்தவகையில், கோவில்பட்டியில் துரைவைகோ போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பரபரத்தன.
அதாவது, காங்கிரசின் சிட்டிங் தொகுதியான விருதுநகரை துரை வைகோவுக்கு திமுக ஒதுக்கீடு செய்து தருவதாக வைகோவிடம் திமுக தலைவர் ஸ்டாலின் உறுதிக் கொடுத்திருப்பதாக தமிழக அரசியலில் சமீபகாலமாக பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. ஆனால், எல்லா யூகங்களுமே தவிடுபொடியாகிவிட்டன.
"இந்த முறை தேர்தலில் போட்டியிடமாட்டேன், அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யப்போகிறேன்" என்று சொல்லியிருக்கிறார் துரை வைகோ.. இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் என மதிமுகவில் பெரும் விவாதமே நடந்து கொண்டிருக்கிறது.
தனித்தன்மைகள்: இது குறித்து நாம் சிலரிடம் விசாரித்தபோது, "துரைவைகோவுக்கு திமுக சீட் ஒதுக்கினாலும் அவர் திமுக சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என திமுக தலைமை கறாராக சொல்லிவிட்டது. இது குறித்து கட்சியில் விவாதம் வந்தபோது, திமுக சின்னத்தில் துரைவைகோ போட்டியிடுவது கட்சியின் தனித்தன்மையை பாதிக்கும். கட்சி நிர்வாகிகள் திமுக சின்னத்தில் போட்டியிட்டால் அது இஷ்யூவாகாது.
அதுவே தலைவர் வைகோவின் மகன் போட்டியிட்டால் கட்சி பலகீனமாக தெரியும். அதனால், திமுக சின்னம் எனில் துரை போட்டியிடுவது சரியாக இருக்காது என வைகோவிடமும் துரையிடமும் நிர்வாகிகள் சொல்லியிருக்கிறார்கள். அதேபோல, திமுக கடந்த முறை போல 1 சீட் தான் ஒதுக்கும். அதில் துரை போட்டிட்டால், கிடைத்தது ஒரு சீட்டு, அதை கட்சிக்காக உழைத்தவர்களுக்கு கொடுக்காமல் மகனுக்கு கொடுத்து விட்டார் வைகோ என்று விமர்சிப்பார்கள்.
பெரிய பிளான்: இது நம் தொண்டர்களிடம் பேசுபொருளாகும். அதனால், துரை போட்டியிடுவதை தவிர்க்கலாம். அடுத்த 2 வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரப்போகிறது. அதில் அவர் போட்டியிடட்டும் என்றும் மாநில நிர்வாகிகள் சொல்லியுள்ளனர். இது சரியானது தான் என வைகோவும் ஏற்றுக்கொண்டுவிட்டாராம். அதனால்தான், நான் போட்டியிடமாட்டேன் என துரை வைகோ சொல்லி வருகிறார்" என்று நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள் மதிமுகவினர்.












Click it and Unblock the Notifications