Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ரிப்பீட்டு".. எல்லாம் "முடிஞ்சுதாமே".. எடப்பாடியை தாங்கும் ஸ்டாலின்.. விடாது பாஜக.. கொதிக்கும் லீடர்

எடப்பாடி பழனிசாமியின் பேட்டி குறித்து மருது அழகுராஜ் விமர்சித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாலரை ஆண்டு காலம் ஆட்சி நடத்த உதவி செய்த பாஜகவுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்கிறார் என்றால் என்ன காரணம் தெரியுமா? யார் காரணம் தெரியுமா? என்று மருது அழகுராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

எடப்பாடி செய்தியாளர்களிடம் பேசியபோது, "சென்னைக்கு வரும்போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை தாங்கள் சந்திக்க வேண்டிய அவசியமில்லை.. பாஜக ஒரு தேசியக் கட்சி, அதிமுக என்பது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி.

மோடி, அமித்ஷா கட்சி வேறு, எங்கள் கட்சி பாஜக தேசியக் கட்சி. அதிமுக, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி. 31 ஆண்டுகாலம் தமிழகத்தை சிறப்பாக ஆண்ட கட்சி அதிமுக. இரண்டு கட்சிகளும் வேறு வேறு" என்று கூறியிருந்தார்.

 மருது அழகுராஜ்

மருது அழகுராஜ்

இது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.. இந்த பேட்டியை வைத்து, பாஜகவை ஏற்காத எடப்பாடி ஆதரவாளர்கள் பெரும் குஷியில் உள்ளனர்.. அமித்ஷாவையே எதிர்த்து பேசிவிட்டாரே, அப்படியானால் பாஜகவை பகைத்து கொள்ள எடப்பாடி தயாராகிவிட்டாரா? அல்லது எடப்பாடியை எதிர்க்க பாஜகவும் துணிந்துவிட்டதா? என்ற கேள்விகள் வட்டமடித்து வருகின்றன. இந்நிலையில், ஒரு தனியார் டிவிக்கு, ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் எடப்பாடியின் பேச்சை விமர்சித்துள்ளார்.. அத்துடன் ஏராளமான குற்றச்சாட்டுகளையும் எடப்பாடி மற்றும் திமுக மீது வீசியுள்ளார்.. அதன் சுருக்கம்தான் இது:

 அட்டவணை

அட்டவணை

"எடப்பாடி பழனிசாமிக்கு துரோகம்தான் காலஅட்டவணையாகவே இருக்கிறது.. அரசியல் வாய்ப்புகளை, கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாத வாய்ப்புகளை தந்த சசிகலாவுக்கு துரோகம் செய்தார். அடுத்து ஓபிஎஸ்ஸுக்கு துரோகம்.. அந்த துரோகத்தின் வரிசையில் இப்போது புதிதாக பாஜகவுக்கு துரோகம்.. பாஜகவுக்குதான் துரோகம் என்பதில் நான் அப்பவே உறுதியாக இருந்தேன்.. அது இப்போது ஏறத்தாழ உண்மையாகி விட்டது..

மைக்டசன்

மைக்டசன்

எப்போதுமே எடப்பாடியின் அரசியலை எடுத்து பார்த்தால், ஒரு துரோகத்தை துவங்குவதற்கு முன்பு, அதற்கு துவக்க புள்ளியாக., தென்மாவட்டங்களில், ஆர்பி உதயகுமாரை பயன்படுத்துவார்.. வடமாவட்டம் என்றால் சிவி சண்முகம், கேபி முனுசாமியை பயன்படுத்துவார்.. இல்லாவிட்டால் மைக்டைசன் அண்ணன் ஜெயக்குமாரை பயன்படுத்துவார்.. அப்படித்தான் இப்போது பாஜக மீதான துரோகம் துவங்கி உள்ளது. அதற்காக, தன் சார்பாக தேர்வு செய்து வைத்திருக்கும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மூலம், பாஜகவுக்கு எதிரான பதிவு போடுகிறார்கள்.

 4 + டீம்

4 + டீம்

மோடி, அமித்ஷா, யாரும் தன்னை எதுவுமே செய்ய முடியாது, அதற்கெல்லாம் அடங்காதவன் எடப்பாடி என்ற ரீதியில் கருத்துக்களை பதிவிடுவது என செய்து வருகிறார்.. இப்படித்தான், அன்று ஆளுநரை திரும்ப பெறும் விவகாரத்தில், கேபி முனுசாமியை வைத்து பேசவைத்தார்.. "ஆளுநரை வைத்து மாநில அரசுகளை அச்சுறுத்துவது நியாயமற்ற செயல்.. இதை காங்கிரஸ் கட்சிகூட செய்தது இல்லை." என்று சொல்ல வைத்தார்.. அதாவது ஆளுநரை திரும்ப பெறும் விவகாரத்தில் திமுக என்ன சொல்கிறதோ, அதே குற்றச்சாட்டை இவரும் சொன்னார்..

 துவக்க புள்ளி

துவக்க புள்ளி

இவரது துரோகத்தின் துவக்க புள்ளி இப்படித்தான் ஆரம்பிக்கும்.. ஜெயக்குமார், உதயகுமார், சிவிசண்முகம், முனுசாமி இப்படி பலரையும் விட்டு ஆழம் பார்ப்பார்.. தன்னுடைய ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பணத்தை குவித்தார்.. அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடியது.. இந்த செயல்களை எல்லாம் ஓபிஎஸ், எடப்பாடியை நேரடியாகவே கண்டித்தார்.. இந்த விஷயம் எனக்கு தெரியும்.. எடப்பாடிக்கு, நாலரை வருடம் ஆட்சி நடத்த உதவியது பாஜகதானே.. அந்த பாஜகவுக்கு பயன்பட வேண்டிய நேரத்தில் கட்சியை உடைத்தது சரியா? 4 அணியாக அதிமுக இப்போது பிரிந்திருப்பது திமுகவுக்குதானே பலம்?

 கட்டியணைத்து

கட்டியணைத்து

பாஜகவுக்கு எதிரான எண்ணங்களை தொண்டர்களிடம் விதைக்கக்கூடிய வேலையை எடப்பாடி துவக்கிவிட்டார்.. எடப்பாடியின் ஐடி விங்கில் போய் பாருங்கள், மோடிக்கு எதிராக, அமித்ஷாவுக்கு எதிரான கருத்துக்கள் குவிந்து கிடக்கும்.. காங்கிரசுக்கும் திமுகவுக்கும் கருத்து வேறுபாடுகளே கிடையாதா? ராஜீவ் காந்தியை கொலை செய்த வழக்கில் 7 பேரை விடுவித்ததில் காங்கிரசுக்கு பெரிய வருத்தம்.. அதில் ஒருவரை ஸ்டாலின் கட்டியணைத்தபோது, காங்கிரஸ்காரர்கள் கண்ணீர் வடித்தார்கள்.. 10 சதவீத இடஒதுக்கீடு முதல் எத்தனையோ விவகாரங்களில் திமுகவுடன் காங்கிரசுக்கு முரண்பாடு இருக்கத்தான் செய்கிறது, கம்யூனிஸ்ட்களுக்கும், திமுகவுக்கும் முரண்பாடுகள் இருக்கிறது.. விடுதலை சிறுத்தைகளுக்கும், திமுகவுக்கும் முரண்பாடு உள்ளது..

ஏமாளிக்காரர்

ஏமாளிக்காரர்

அத்தனை முரண்பாடுகளையும் சரிப்படுத்தி, தேர்தல் கூட்டணிகளுக்கு பிளவுக்கு வந்துவிடாமல், ஆட்சியையும் நடத்திக் கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்.. திமுகவின் ஒரே நம்பிக்கை யார், ஸ்டாலின்தானே? 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று ஸ்டாலின் சொல்கிறாரே, எந்த நம்பிக்கையில் பேசுகிறார்? நல்லாட்சி காரணமா? கிடையவே கிடையாது.. மக்களுடக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, அமைச்சர்களின் சர்ச்சைகள், கொடநாடு விவகாரத்தில் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.. அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.. இப்படி எத்தனையோ புகார்கள் திமுக அரசு மீது உள்ளது.

பழனிசாமி

பழனிசாமி

ஆனாலும், 2024 தேர்தலிலும் மட்டுமல்லாமல், 2026-லிலும் எங்களது ஆட்சிதான் என்று திமுக சொல்கிறது என்றால், அந்த நம்பிக்கை எங்கிருந்து வந்தது? எடப்பாடி பழனிசாமி தரும் நம்பிக்கை.. காங்கிரசுக்கு திமுகவும், திமுகவுக்கு காங்கிரசும் ஒன்றுக்கொன்று பிணைத்து கொண்டுள்ளன.. தேசம் முழுவதும் காங்கிரஸை பல கட்சிகள் கைவிட்டுவிட்டன.. ஆனால், திமுக இப்போதுவரை கைவிடவில்லை.. கடந்த தேர்தலில்கூட காங்கிரசுடன் ஒட்டி உறவாடிய கட்சிகள் எல்லாருமே, ராகுலை பிரதமராக அறிவிக்க தயங்கினார்கள்.. ஆனால், முதல் பிரகடனம் ஸ்டாலின்தானே.. அதுதான் கூட்டணி தர்மமும்கூட.

 எம்ஜிஆர்

எம்ஜிஆர்

ஆனால், அப்படிப்பட்ட கூட்டணி தர்மத்தை எடப்பாடி செய்தாரா? பாஜகவுக்கு என்ன நன்றிக்கடன் செய்தார்? விதிகளை திருத்திய புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கும் நன்றியாக இல்லை, நிரந்தர பொதுச்செயலாளர் இருக்கை என்று சொல்லி அம்மாவுக்கும் நன்றியாக இல்லை.. நாலரை வருடம் ஆட்சி நடத்த ஒத்தாசையாக இருந்த ஓபிஎஸ்ஸுக்கும் நன்றியாக இல்லை. இப்போது பாஜகவுக்கு துரோகத்தை செய்ய துவங்கிவிட்டார்.. துரோகம் மேல் துரோகம்.. துரோகங்களை கட்டிக் கொண்டு என்ன செய்ய போகிறார்?

சம்பந்தி

சம்பந்தி

25 மாநிலங்களை ஆளக்கூடிய பாஜகவிடம் முட்டி மோதி வெற்றி பெற்று விடலாம் என்று எடப்பாடி நினைப்பது, மிகப்பெரிய விபரீதம் உண்டாக்கும். கர்நாடகத்தில் ஒரே ஒரு எஃப்ஐஆர் தன் சம்பந்தி மீது விழுந்ததும், ஒரு அபாயம் என்றதும், அபயம் தேடி அமித்ஷாவிடம் ஓடினாரே.. இப்போ அவங்க கட்சி வேற, எங்க கட்சி வேற என்று எப்படி சொல்ல முடிந்தது? போன மாசம்தானே டெல்லிக்கு போய்ட்டு வந்தார்? அன்றைக்கு அவசியப்பட்டது.. இனி அவசியமில்லை.. காரணம், தன்னை தற்காத்து வரும் வேலையை திமுக செய்து வருவதால், பாஜக தேவையில்லை என்று நினைக்கிறார்..

 ஏமாளி அரசியல்வாதி

ஏமாளி அரசியல்வாதி

பாஜக, திமுக இந்த இரண்டு கட்சிளையும் ஒரே நேரத்தில் பகைத்து கொள்ளும் அளவுக்கு ஏமாளி அரசியல்வாதி கிடையாது.. அதேபோல, இங்கே உள்ள ஆளும் கட்சியையும், அங்கே உள்ள ஆளும் கட்சியையும் எதிர்க்கக்கூடிய அளவுக்கு எடப்பாடி ஒன்றும் பெரிய ஆளும் கிடையாது.. திமுக இருக்கு என்ற தைரியம்தான் அவருக்கு.. இந்த ஒன்றேமுக்கால் வருடத்தில் எடப்பாடிக்கு திமுக செய்த ஒரேஒரு கெடுதல் இருக்கா? ஒன்றே ஒன்று சொல்லுங்களேன் பார்க்கலாம்.." என்று கேட்டார் மருது அழகுராஜ்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+