முக்கிய ஆவணமாக உருவெடுத்த "பிறப்பு சான்றிதழ்".. பெற்றோர்களுக்கே அதிகாரம் கிடையாது.. வந்த உத்தரவு
சென்னை: சமீபத்தில் பிறப்பு சான்றிதழ் அடையாள ஆவணமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த பிறப்பு சான்றிதழ்களில் தேவையின்றி மாற்றங்களை செய்ய பெற்றோர்களுக்கே அனுமதி கிடையாது என்று மும்பை ஹைகோர்ட் அறிவித்து உள்ளது.
வழக்கு ஒன்றில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பெண் ஒருவர்.. தனது குழந்தையின் பிறப்பு சான்றிதழில் பெற்றோர் என்ற இடத்தில் அப்பாவின் பெயரை நீக்கினார். கணவருடன் ஏற்பட்ட விவாகரத்து காரணமாக இவர்கள் பிரிந்தனர். இதையடுத்து கணவர் குடிகாரர் என்பதால் அப்பா என்ற இடத்தில் இருந்து அவரின் பெயரை குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவர் நீக்கி உள்ளார்.

இதையடுத்து அப்பா தொடர்ந்த வழக்கில் மும்பை ஹைகோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பிறப்பு சான்றிதழ்களில் தேவையின்றி மாற்றங்களை செய்ய பெற்றோர்களுக்கே அனுமதி கிடையாது. அம்மா - அப்பாவாகவே இருந்தாலும் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் நினைத்த நேரத்தில் மாற்றங்களை செய்ய முடியாது, செய்ய கூடாது என்று மும்பை ஹைகோர்ட் அறிவித்து உள்ளது.
முக்கிய அடையாள ஆவணம்
இந்த நிலையில்தான் நாட்டின் முக்கிய சேவைகள் அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிறது பிறப்பு சான்றிதழ். அதன்படி, ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் வழங்குதல் , அரசுப் பணிகளுக்கான நியமனம் ஆகிய சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பயன்படுத்தப்படும்.
எதற்கெல்லாம் பயன்படும்: மேலும், திருமணப் பதிவு உள்ளிட்ட பல சேவைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் ஆவணமாகச் செயல்படும். இந்த சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ்கள் ஆவணமாகச் செயல்படும்.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 மூலம் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. சமீபத்தில் இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தில் மேற்கூறிய பணிகளுக்கு பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த ,மசோதா நிறைவேறி வெற்றிபெற்ற நிலையில், தற்போது சட்டம் அமலுக்கு வருகிறது.
இந்த சட்டம் மூலம் இனி பிறப்பு சான்றிதழை முக்கியமான ஆவணமாக பயன்படுத்த முடியும். இதன் மூலம் ஆன்லைன் வழியாக மத்திய அரசின் தளங்களில் இந்த சான்றிதழ்களை டவுன் லோடு செய்ய முடியும். ஆதார் அட்டையை எப்படி ஆவணமாக பயன்படுத்துகிறமோ அதேபோல் இதையும் பயன்படுத்த முடியும்.
இதுவரை பிறப்பு சான்றிதழை பலரும் டிஜிட்டல் முறையில் பெறவில்லை. இப்போது பெறுவதன் மூலம் டிஜிட்டல் பதிவு மூலம் பொது சேவைகள் மற்றும் சமூக நல திட்டங்களை வேகமாகவும், பாதுகாப்பாகவும் பெற்றிட முடியும். இந்த சட்டம் அமலுக்கு வருவதால் இனி பல சேவைகளில் இதை அடையாள அட்டையாக, ஒரு முக்கிய ஆவணமாக வழங்க முடியும்.
ரேஷன் அட்டையை போல இதையும் இருப்பிற்கான அடையாளமாக பயன்படுத்த முடியும். ஆனாலும் பல இடங்களில் ஆதார் கேட்கப்படுவதால் இந்த அட்டை எந்த அளவிற்கு உதவும் என்று தெரியவில்லை. அதே சமயம் கல்லூரி சேருவது உள்ளிட்ட பணிகளுக்கு இந்த அட்டை உதவியாக இருக்கும்.
எப்படி பெறுவது
கிராம பஞ்சாயத்துகளில் பதிவுசெய்த பிறப்பு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வது எப்படி? என்று இங்கே பார்க்கலாம்.
அடையாள அட்டைக்காக கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பிறப்பு சான்றிதழ்களை மக்கள் எளிதாக டவுன் லோடு செய்ய முடியும். இதற்காக தமிழ்நாடு அரசு https://gccapp.chennaicorporation.gov.in/birth_death_tn/PubBirthCertReport.jsp என்ற இணைய பக்கத்தை வெளியிட்டு உள்ளது.
இதில் உள்ளே சென்றதும் பர்த் சர்டிபிகேட் என்ற பக்கம் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும். பொதுவாக குழந்தை பிறந்த மருத்துவமனையில் RCHID என்ற பதிவெண்ணை கொடுப்பார்கள். மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்ததற்கான அடையாளமாக RCHID என்ற சீரியல் நம்பர் கொடுப்பார்கள். இந்த நம்பரை அந்த பக்கத்தில் பதிவிட வேண்டும். இதை தொடர்ந்து அதே பக்கத்தில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட நம்பரை கொடுக்க வேண்டும்.
இது போக.. பாலினம், வயது , ஊர், பிறந்த தேதி ஆகிய விவரங்களை கொடுக்க வேண்டும் . இதை பதிவு செய்ததும் கீழே உள்ள பிறப்பு சான்றிதழ் காட்டப்படும். இந்த பிறப்பு சான்றிதழை கிளிக் செய்து உடனே டவுன் லோடு செய்ய முடியும்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications