கோடையில் ஏன் வெயில் கொளுத்துகிறது தெரியுமா? இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே.. காரணமே வேறயாம்
சென்னை: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே வெயில் 100 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவாகியிருந்தது. இந்நிலையில் அக்னி தொடங்கியதையடுத்து டெல்லி சதமடித்து வருகிறது. இதற்கு காரணம் என்ன தெரியுமா? நம்மில் பலர் இதற்கான காரணத்தை தவறாக புரிந்துக்கொண்டிருக்கிறோம்.
சரி விஷயத்திற்கு வருவோம். இந்த உலகத்தில் நாள் கிழமைகள் என்று எதுவும் கிடையாது. எல்லா நாளும் ஒரே நாள்தான் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதெப்படிங்க? அதுதான் சனி.. ஞாயிறு.. திங்கள்-னு இருக்கே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் ஒவ்வொரு நாளுக்கு இடையேயும் என்ன வேறுபாடு என்பதை உங்களால் சொல்ல முடியுமா? ஏன் முடியாது அதுதான் பருவ காலங்கள் இருக்கே என்று சட்டென உங்களுக்கு தோன்றலாம். அதுவும் தப்பில்லை.

இப்போ ஒவ்வொரு ஆண்டின் பருவ காலத்திற்கும் இருக்கும் வேறுபாட்டை சொல்ல முடியுமா? முடியாது ஏனெனில் எல்லா ஆண்டுகளும் ஒன்றுதான். எல்லா நாட்களும் ஒன்றுதான். இதுதான் இயற்கையை புரிந்துகொள்ள நமக்கு தேவையான அடிப்படை அறிவு. ஆக இப்படியா ஒவ்வொரு ஆண்டும் கோடை நம்மை கடுமையாக வாட்டி எடுத்து வருகிறது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? இதை தடுக்கவே முடியாதா? போன்ற கேள்விகள் சமீப நாட்களாக அதிகரித்து வந்திருக்கிறது. ஒருவேளை மதியான நேரத்தில் ஒரு 30 செகன்ட் டிராப்பில் நின்றால் உங்களுக்கும் இந்த கேள்வி எழுந்துவிடும்.
சரி ஏன் கோடை காலத்தில் வெயில் கொளுத்துகிறது. இதற்கு எளிமையாக சிலர் விளக்கம் சொல்வார்கள். அதாவது நம்முடைய பூமி சூரியனை சுற்றி வருகிறது. அது நீள் வட்ட பாதையில் (முட்டையை படுக்க வைச்சா எப்படி இருக்குமோ அப்படி) சுற்றி வருகிறது. இது சூரியனுக்கு தொலைவில் இருக்கும்போது குளிராகவும், நெருக்கத்தில் இருக்கும்போது நாம் அதிக வெயிலையும் உணர்கிறோம் என்று இந்த விளக்கம் இருக்கும். நமக்கும் இது சரியென்றே தோன்றும்.
ஆனால் உண்மை என்னவெனில் நம் பூமி சூரியனை விட்டு தொலைவில் இருக்கும்போதுதான் நமக்கு கோடைக்காலமாக இருக்கிறது. அருகில் இருக்கும்போது குளிர்காலமாக இருக்கிறது? அதெப்படி திமிங்கலம்? என எனக்கும் தொடக்கத்தில் சந்தேகம் இருந்தது. பின்னர்தான் புரிந்தது பூமி 23.5 டிகிரி சாய்வாக சூரியனை சுற்றி வருகிறது என்று. ஆக இதுதான் கோடைக்காலத்தில் வெயில் அதிகரிக்கவும் குளிர் காலத்தில் குளிர் அதிகரிக்கவும் காரணம்.

அதாவது குளிர் காலத்தில் பூமி சூரியனுக்கு நெருக்கமாக இருந்தாலும் கூட அது, 23.5 டிகிரி கோணத்தில் சாய்ந்து இருக்கிறது. இதனால் பூமியின் மீது படும் வெளிச்சம் பல இடங்களுக்கு பரவுகிறது. இவ்வாறு பரவுவதால் வெப்பத்தின் அளவு குறைகிறது. இந்த வான்வெளியில் இயல்பாகவே இருட்டும் குளிரும்தான் இருக்கிறது. எனவே வெப்பம் குறைவதால் குளிர் தனது பிடியை இறுக்கி வைத்திருக்கிறது. அதேபோல பகல் பொழுதின் நேரமும் குறைகிறது. இதுதான் குளிர் காலத்தில் குளிர் அதிகரிப்பதற்கான நோக்கம்.
இதேபோல கோடை காலத்தில் பூமி செங்குத்தாக விறைப்பாக நின்றுக்கொண்டிருக்கிறது. எனவே சூரியனின் கதிர்கள் பூமியில் பட்டு ஒரே இடத்தில் குவிக்கப்படுகிறது. இதனால் வெப்பம் அதிகரிக்கிறது. வெப்பம் அதிகரிப்பதன் காரணமாக பகல் பொழுதும் அதிகரிக்கிறது. ஆக இப்படித்தான் பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகிறது. நாமதான் இதனை புரிந்துக்கொள்ள ஏப்ரல்,மே - டிசம்பர், ஜனவரினு பேரு வச்சியிருக்கோம். எனவே கோடை வெயில் இப்படித்தான் உருவாகிறது. இதிலிருந்து தப்பித்துக்கொள்ள நீர் ஆகாரங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். வெயில் நேரங்களில் வெளியில் செல்வதை தவிருங்கள். முடிந்த அளவு பருத்தியால் நெய்யப்பட்ட காட்டன் ஆடைகளை அணியுங்கள். வெள்ளை போன்ற லைட் கலர் கொண்ட ஆடையை அணிந்தால் வெப்பத்திலிருந்து ஓரளவு தப்பிக்கலாம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications