யானை தந்தம் ஏன் மிகவும் விலை உயர்ந்தது.. கோடிகளை கொட்டி கொடுத்து வாங்குவது ஏன் தெரியுமா?
சென்னை: யானை இறந்தாலும் ஆயிரம் பொன் என்று சொல்வார்கள்.. ஏன் அப்படி சொல்கிறார்கள்.. அதற்கு பின்னால் உள்ள விஷயம் திகைப்பானது மட்டுமல்ல, மிகவும் கசப்பானதும் கூட.. யானை தந்தம் தான் அதற்கு காரணம்.. யானை தந்தங்கள் கோடிகளை கொட்டி வாங்குகிறார்கள். ஏன் யானை தந்தங்களை கோடிகளை கொட்டி வாங்குகிறார்கள் என்பதை பார்ப்போம்.
விலங்கு இனங்களில் மிகப்பெரிய உயிரினம் என்றால் அது யானை. யானை பார்க்க மட்டும் பிரம்மாண்டமானவை இல்லை.. அவை செய்யும் செய்யும் ஒவ்வொரு செயலும் பிரம்மாண்டமானவை..யானைகள் உருவத்தில் மிகப் பெரியதாக இருந்தாலும் மனிதர்களிடம் இயல்பாக பழகும் குணம் கொண்டவை. அதேநேரம் மனிதனை போல் தன் மீது சுயபற்று உள்ள விலங்கு. தன் உடலின்மீது அதீத அக்கறை கொண்ட யானை, தனக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும்.

உடலில் சின்ன காயம் ஏற்பட்டாலும் அதை அடிக்கடி தனது துதிக்கையால் தொட்டுப்பார்க்கும். யானையை பாகன்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்றால், அதைவிட பலசாலி போல் பாகனங்கள் காட்டிக்கொள்ள வேண்டும். மிகவும் முரட்டுத்தமானவனாக காட்டிக்கொண்டால் தான் பாகன்களிடம் அடங்கி போகும்.
யானையை பொறுத்தவரை மனிதர்கள் போன்ற பல்வேறு குணங்களை கொண்டிருந்தாலும், மனிதனை போல் கூட்டமாக வாழும் பழக்கம் உள்ளவை என்றாலும், ஆனால் மனிதனை போல் பழிவாங்கும் எண்ணம் உடையவை கிடையாது. ஆனால் மனிதன் மோசமான பழிவாங்கும் எண்ணம் உடையவனாக மட்டுமல்லாமல், பணம் சேர்க்கும் ஆசையில் எல்லா உயிரினங்களையும் அழிக்கிறான்.
மனிதர்களால் அதிகம் கொல்லப்படும் விலங்குகளில் யானை தான் முக்கியமான இடத்தில் இருக்கிறது. உலகம் முழுவதும் ஆண்டுக்கு 25,000 முதல் 50,000 யானைகள் கொல்லப்படுவதாக ஒரு புள்ளி விவரங்கள் சொல்கின்றன. உலகம் முழுவதும் வன உயிரினங்கள் தொடர்பான சட்ட விரோதமான வர்த்தகம் சுமார் 19 பில்லியன் டாலர் அளவுக்கு நடைபெறுவதாக கூறப்படுகிறது.
ஆப்பிரிக்காவில் தான் ஏராளமான யானைகள் இருக்கின்றன.அங்கு தான் யானைகள் கொல்லப்படுவதும் அதிக அளவு நடைபெறுகிறது. யானைகளின் தந்தங்கள், தோல்களும் அங்கு வேட்டையாடப்படுகின்றன. இந்தியாவிலும் அவ்வப்போது யானைகள் வேட்டையாடப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன.
யானை தந்தத்தை கோடிகள் கொடுத்து வாங்கி வைத்துக் கொள்ள பல்வேறு நாடுகளில் விரும்புகிறார்கள். யானை தந்தங்கள் கலாச்சாரத்தின் அடையாளமாக இருக்கிறது. யானை தந்தங்கள் மிக குறைவாக வருவதால் அதனை எவ்வளவு கோடி கொடுத்தும் வாங்க உலக கடத்தல் தாதாக்கள் ரெடியாகவே உள்ளனர். யானை தந்தங்கள் என்பது பணக்காரர்கள் தங்கள் வீடுகளில்வாங்கி வைத்துக்கொள்ள விரும்பும் ஆடம்பர கலாச்சார பொருளாக இருக்கிறது.
அதேநேரம் உலகச் சந்தையில் யானைத் தந்தத்துக்கும், தந்தத்தால் செய்யப்பட்ட பொருள்களுக்கும் மிகுந்த மதிப்பு இருக்கிறது. பில்லியர்ட்ஸ் பந்துகள், பியானோ விசைகள் (Piano Keys) செய்வதற்கு தந்தங்கள் தேவைப்படுகின்றன. யானைகளின் தோலுக்கும், முடிக்கும் கூட நல்ல கிராக்கி இருக்கிறது. இதற்காகவும், பாரம்பர்ய மருத்துவப் பொருள்களுக்காகவும் யானைகள் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இன்றும் வேட்டையாடப்படுகின்றன.
யானை வேட்டைக்காரர்களால் டான்ஜானியா தன் யானைகளில் 80 சதவிகிதத்தை இழந்தது. கென்யா 85 சதவிகித யானைகளையும், உகாண்டா 95 சதவிகிதம் யானைகளையும் இழந்துள்ளன. ஆரம்பத்தில் கடத்தல்காரர்கள் வளர்ந்த ஆண் யானைகளையே கொன்றனர்; ஏனென்றால் அவற்றிற்கே மிகப்பெரிய தந்தங்கள் இருந்தன. ஆனால் குட்டி யானைகளையும்கூட அவற்றின் சின்னஞ்சிறிய தந்தங்களுக்காக கொல்ல தொடங்கி உள்ளார்கள். யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்று சொல்வதற்கு இதுதான் காரணம் ஆகும்.












Click it and Unblock the Notifications