நாங்குநேரி ரூபி போட்ட போடு.. பத்திக்கிட்டு எரியுது கூடாரம்.. லிஸ்ட்டோடு டெல்லிக்கு ஓடிய தலைவர்.. ஏன்?
சென்னை: கோஷ்டிப்பூசலுக்கு பஞ்சமில்லாமல் காணப்படும் காங்கிரஸ் கட்சியில், மேலும் சில சலசலப்புகள் கூடியிருக்கின்றன.. மாநில தலைவர் கேஎஸ் அழகிரி டெல்லிக்கு பறந்துள்ளார்.. இதற்கு என்ன காணம் தெரியுமா? இதுகுறித்துதான், பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவராக கேஎஸ் அழகிரி, உரிய காலத்தையும் கடந்து பதவி வகித்து கொண்டிருக்கிறார்.. இதனால், அவரை மாற்றுமாறு மூத்த தலைவர்கள் டெல்லி தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, எம்பிக்கள் திருநாவுக்கரசர், ஜோதிமணி, செல்லகுமார், மாணிக் தாகூர், கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்.பி. பெ.விஸ்வநாதன் ஆகியோர் மாநிலத்தலைவர் பதவியை கேட்டு வருகிறார்கள்.
நெருக்கம்: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரியை பொறுத்தவரை கட்சியில் சீனியர்.. 85-ம் வருட காலகட்டத்திலேயே ப.சிதம்பரத்துக்கு நெருக்கமானவர்.. தமிழ் மாநில காங்கிரஸ் உருவாவதில், மூப்பனாருக்கு பெரும் உதவியாக இருந்தவர்களில் கே.எஸ். அழகிரியும் ஒருவர். ஆனால், இப்போது இவர்மீது, பெரும்பாலான சீனியர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம், கடந்த வருடம் அழகிரியின் ஆதரவாளர்களுக்கும், கட்சியின் பொருளாளர் ரூபி மனோகரனின் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த உருட்டுக்கட்டை மோதலும், அதையொட்டிய ரத்தக்களறியான சத்தியமூர்த்திபவனும்தான்.
குற்றச்சாட்டுகள்: நெல்லை மாவட்ட காங்கிரஸ்காரர்களுக்கு இழைக்கப்பட்ட பதவி அநீதிகளுக்கு நியாயம் கேட்க வந்த சொந்த கட்சிக்காரர்களையே அடித்து உதைக்க அழகிரி உத்தரவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அழகிரிக்கு எதிராக, முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, ஈவிகேஸ் இளங்கோவன், கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்பட முன்னாள் நிர்வாகிகள் பலரும் கொதித்தெழுந்தனர்.
இந்த கொதிப்பு இன்னமும் அந்த தலைவர்களிடம் அடங்கவில்லை.. இப்படிப்பட்ட சூழலில், தமிழக காங்கிரஸின் உட்கட்சி பூசல் இன்னும் தீரவில்லை. இது தொடர்பான சிறப்பு தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
கதர் கட்சி: அதாவது, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றிருக்கிறார் அழகிரி... ஆனால், இதற்கு பின்னணியில் வேறு காரணம் இருக்கிறது என்று நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர், கதர் கட்சி வட்டாரத்தினர்.
சமீபத்தில், கன்னியாகுமரி மாவட்டம் திசையன்விளையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்துகொண்டார் அழகிரி. இதில் எம்.பி.க்கள் மானிக்கம் தாக்கூர், ஜெயக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அழகிரிக்கும் அவருக்கும் பகை என்பதால் கூட்டத்தைப் புறக்கணித்தார்.
ரூபி கட்டளை: மேலும், தனது ஆதரவாளர்கள் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என ரூபி கட்டளையிட்டிருந்ததால் அவர்களும் இந்த கூட்டத்துக்கு செல்லவில்லை.
அதேபோல, கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்துக்கு செல்ல திட்டமிட்டிருந்தார் அழகிரி. ஆனால், காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்தால் அவர் மீது வெடிகுண்டு வீசுவோம் என ரூபியின் ஆதரவாளர் மிரட்டிய விவகாரமும், ரூபியின் ஆதரவு பெற்ற மகளிர் காங்கிரஸார் நடத்திய கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டமும் அழகிரியை கோபப்படுத்தியது. இதனால் நெல்லைக்குள் நுழையாமலே திசையன்விளை சென்றார் அழகிரி.
2 எம்பிக்கள்: இந்த நிலையில், இந்த வில்லங்கங்களை எல்லாம், 2 எம்பிக்களும், ராகுல்காந்திக்கு ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள். ராகுல் காந்தியும் இதுகுறித்து விசாரிக்குமாறு கார்கேவிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். இதனையடுத்தே, டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் அழகிரி.
இந்த விஷயத்தை மாணிக்கம்தாக்கூர், அழகிரியிடம் சொல்ல, தென்மாவட்டங்களில், தனக்கு எதிராக ரூபி மனோகரனும், திருநாவுக்கரசு ஆதரவு மாவட்ட தலைவர்களும் என்னென்ன சதி வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள் என்கிற ஒரு பெரிய ரிப்போர்ட்டுடன் சென்றிருக்கிறாராம் அழகிரி என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ரிப்போர்ட்: அதுமட்டுமல்ல, கார்கேவை சந்தித்து அந்த ரிப்போர்ட்டை ஒப்படைக்கும் அழகிரி, கோஷ்டி தலைவர்கள் அனைவரும் எனக்கு எதிராக செயலாற்றி வருகிறார்கள் என்றும், தேர்தல் நெருங்கும் நிலையில், இவர்களின் தொல்லைகள் அதிகரித்து வருவதால் என்னால் தேர்தல் பணிகளில் முழு கவனம் செலுத்தமுடியவில்லை என்றும் கார்கேவிடம் சொல்லும் திட்டத்துடனேயே டெல்லிக்கு பறந்துள்ளார் என்கிற தகவல்களும் சத்தியமூர்த்திபவன் தரப்பிலிருந்து கிடைக்கின்றன..
இருந்தாலும் அழகிரி சொல்லும் ரிப்போர்ட்டை மட்டுமே அடிப்படையாக வைத்து, டெல்லி மேலிடம் முடிவெடுக்குமா? என தெரியவில்லை.. பொறுத்திரந்து பார்ப்போம்..!
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications