சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நடுங்கிடுச்சே உளவுத்துறை.. டாக்டர் ஐயாதான் கலைஞர்கிட்ட அதை சொன்னார்.. அந்த "மஞ்சள் துண்டு": பாண்டியன்

கலைஞரின் மஞ்சள் துண்டு குறித்து பத்திரிகையாளர் பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு மஞ்சள் துண்டு அணிவித்தது யார் என்பது குறித்து, மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அந்த வீடியோவை இணையத்தில் திமுகவினர் ஷேர் செய்து, கருத்துக்களை சரமாரியாக பதிவிட்டு வருகிறார்கள்.

மறைந்த முதல்வர், கருணாநிதியின் பழைய போட்டோக்களையெல்லாம் பார்த்தால், சுருள்முடியுடன் கோட் சூட், சஃபாரி என்று ஜம்மென்று காணப்படுகிறார்.

ஆனால் நாளடைவில் மெல்ல மெல்ல தன் டிரஸ் விஷயத்தில் கவனம் செலுத்தி, அதாவது வேட்டி, சட்டைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டதாக தெரிகிறது.

12 ஆண்டுக்கு முன்பே செய்த கருணாநிதி.. நேற்று அண்ணாமலை சொன்னதை பேசிய அமித்ஷா! வரலாறு சொல்வது இதான் 12 ஆண்டுக்கு முன்பே செய்த கருணாநிதி.. நேற்று அண்ணாமலை சொன்னதை பேசிய அமித்ஷா! வரலாறு சொல்வது இதான்

 ஒயிட் & ஒயிட்

ஒயிட் & ஒயிட்

பட்டு துணியில் காலர் இல்லாத ஜிப்பா அணிந்திருக்கிறார்.. அப்பறம் முழுசுமாக ப்யூர் காட்டனுக்கு மாறிவிட்டார். அதிலும் சட்டையை எடுத்து கொண்டால் எப்போதுமே ஒயிட் & ஒயிட்தான்.. எனினும், வெள்ளை கலர் சட்டை கருணநிதிக்கு நிரந்தரமாகிவிட்டது.. கறுப்பு-சிவப்பு கரை வைத்த துண்டுகளும், அவ்வப்போது வண்ண வண்ண சால்வைகளும் அவரது தோளில் வந்து ஒட்டிக் கொண்டு அலங்கரித்துவிட்டு போனதையும் நம்மால் மறுக்க முடியாது.. அதேபோல, நீண்ட காலம் வண்ணமய சால்வைகளை தான் கருணாநிதி அணிந்து வந்துள்ளார். எனினும், மஞ்சள் துண்டை, கருணாநிதி அணிந்ததுமே, அப்போதே அது மக்களின் கவனத்தையும் ஈர்த்தது..

சலனங்கள்

சலனங்கள்

கருணாநிதி என்றாலே மஞ்சள் துண்டு என்று மனக்கண்முன்னால் வந்து நின்றுவிட்டது. எதற்காக இந்த மஞ்சள் துண்டை போட்டுக் கொண்டார் என இறுதி வரை, வெளிப்படையாக கருணாநிதி விளக்கம் அளிக்கவில்லை. அதை பற்றின விமர்சனங்கள் தாறுமாறாக எழுந்தபோதெல்லாம் அதற்கு எந்தவிதமான சலனங்களையும், எதிர்ப்புகளையும் அவர் காட்டவுமில்லை.. அதனை நாத்தீகம் என்றோ, ஆத்திகம் என்றோ எதுவுமே அவர் விளக்கவுமில்லை.. ஆனால் இந்த மஞ்சள் துண்டுதான் மண்ணுக்குள் போகும்வரை அவரது உடலை ஒட்டியே கிடந்தது.

 துண்டு + கலைஞர்

துண்டு + கலைஞர்

இந்நிலையில், கலைஞர் எதற்காக மஞ்சள் துண்டு அணிந்தார் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் சொன்னதாவது: "டாக்டர் ஐயாதான் அந்த துண்டை கலைஞருக்கு போட்டார்.. வன்னியர்களின் அடையாளம் மஞ்சள் சட்டை.. 91-96ல் ஜெயலலிதா ஆட்சி நடக்கிறது.. அப்போது, திமுகவுக்கு ஒரே ஒரு எம்எல்ஏ பரிதி இளம்வழுதி மட்டும்தான் இருக்கிறார்.. 1994-ல் கலைஞரை விழுப்புரத்துக்கு அழைத்து செல்கிறார் ராமதாஸ்..

 கலைஞர் ஐயா

கலைஞர் ஐயா

குண்டடிப்பட்டு இறந்துபோன 21 தியாகிகள் நினைவு தின நிகழ்ச்சி நடக்கிறது.. அப்போது லட்சக்கணக்கான வன்னியர்கள் கூடியிருக்கிறார்கள்.. மேடையிலேயே ஐயா பேசுகிறார், "நான் சொல்லிட்டேன், அடுத்த முதல்வர் கலைஞர்தான் என்றார்.. மக்களே, நமக்கான தலைவர் கலைஞர்தான்.. முதல்வராக கலைஞரை நாம் உட்கார வைக்கணும்.. நான் சொல்றேன், அந்த முதல்வர் சீட் நம்ம கலைஞருக்குதான், அதனால், உங்கள் சார்பாக இந்த மஞ்சள் துண்டை அணிவிக்கிறேன்" என்றார்..

 கலர் கலர் துண்டு

கலர் கலர் துண்டு

டாக்டர் இப்படி பேசியதுமே உளவுத்துறை பூராவும் நடுங்கிடுச்ச.. அதுவரைக்கும் கலைஞர், கலர் கலரா துண்டு போட்டுட்டு இருந்தார்.. இந்த மஞ்சள் துண்டை கடைசி வரை அவர் கழட்டவே இல்லை.. இந்த மஞ்சள் துண்டு போட்டதுமே ராஜாத்தி அம்மாள் கலைஞரிடம், ஒரு கோடி வன்னியர்களின் நினைவாக போட்டுள்ளார்கள்.. கும்பமும் இதில் சேர்ந்துள்ளது.. இதை கழட்டிவிட வேண்டாம் என்று சொல்லி உள்ளார்.. இவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே கலைஞர் அந்த துண்டை கடைசிவரை கழட்டிவில்லை" என்பது உட்பட பல கருத்துக்களை தன் பேட்டியில் சொல்லி உள்ளார்.

 மஞ்சள் துண்டு

மஞ்சள் துண்டு

ஆனால், இதற்கு ஒருசாராரர் வரவேற்றும், மற்றொரு சாரார் எதிர்ப்பும் காட்டி வருகின்றனர்.. பெரும்பாலானோர், இது முற்றிலும் பொய்யான தகவல் என்கிறார்கள்.. முதன்முதலில் குளித்தலை தொகுதியில் நின்றபோது முத்தரையர் சமுதாயத்தினர் அடையாளமாக போட்டு துண்டு இது என்றும் டாக்டர் மஞ்சள் சால்வையை அணிவதற்கு முன்னேயே கலைஞர் மஞ்சள் சால்வையை அணிந்திருந்தார் என்று பலரும் திரண்டு வந்து கமெண்ட்களை பதிவிட்டு கொண்டுள்ளனர்.

நூலாடை

நூலாடை

மேலும் பலர், "கண் ஆபரேஷனுக்கு பிறகு டாக்டரின் ஆலோசனை பேரில், நூல் ஆடை கொண்ட பஞ்சு போன்ற நூலாடை கொண்ட உபயோகப்படுத்த வேண்டும், கண்களை இதமாக ஒத்தடம் கொடுக்க வேண்டும் என்ற டாக்டரின் ஆலோசனை பேரில் மஞ்சள் நிற துண்டை உபயோகப்படுத்தினார் என்றும், பாண்டியன் சொல்வது சரியான தகவலே என்றும், மாறி மாறி கருத்துக்களும் தெரிவித்து வருவதுடன், இந்த வீடியோவை பாமக, திமுக என இரு தரப்பினருமே இணையத்திலும் தற்போது ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

English summary
Do you know why Karunanidhi wore a yellow shawl, says Senior Journalist Pandian
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X