விமானம் புறப்படும் போதும் தரையிறங்கும் போதும் ஏன் பயணிகள் நேராக அமர வேண்டும் தெரியுமா?
சென்னை: விமானம் புறப்படும் போதும் தரையிறங்கும் போதும் ஏன் பயணிகள் நேராக அமர வேண்டும் என்பது தெரியுமா? இதற்கு இரு வகையான காரணங்கள் உள்ளன. அவற்றை என்னவென அறிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து தமிழ் குவோராவில் விமான பொறியாளராக 36 வருட அனுபவம் உள்ள முகுந்தன் என்பவர் கூறியிருப்பதாவது: விமானம் ஏறும் போதும் மற்றும் இறங்கும் போதும் பயணிகள் ஏன் நேராக அமர்ந்து இருக்கவேண்டும் என்பதற்கு இரண்டு காரணங்கள்.

1. பின் வரிசையில் அமர்ந்து இருக்கும் பயணிகள் அவசர காலத்தில் உடனடியாக வெளியேற ஏதும் தடைகள் இல்லாமல் செய்வதற்கு.
90 வினாடிக்குள் அனைவரும் வெளியேற வசதிகள் இருக்க வேண்டும் என்பது விதி. அதற்கு தேவையான கதவுகள் மற்றும் அவசரகால வழிகள் அமைப்பு இருக்க வேண்டும்.
2. விமானம் ஏறும் போதும் இறங்கும் போதும் சில சமயங்களில் அதிகபட்சமாக பிரேக் உபயோகப்படுத்த வேண்டியிருக்கும் அல்லது விபத்தும் ஏற்படலாம். சீட் பெல்ட் வயிற்று பகுதியில் தான் இருக்கும். ஆனால் தலை வேகமாக முன் சென்று முன் சீட்டில் முட்டிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. எல்லா இருக்கைகளும் ஒரே தூரத்தில் இருந்தால் விபத்தை குறைக்கலாம்.
சில சமயங்களில் விமானத்தில் பிரச்சினை இருந்தால் அல்லது அவசரமாக இறங்க வேண்டியிருந்தால் பயணிகளுக்கு முன்கூட்டியே தெரிவிப்பார்கள். அப்போது பிரேஸ் என்பார்கள். நன்றாக குனிந்து தலையின்மேல் கைகளை வைத்து அழுத்திக் கொள்ள வேண்டும். அப்போது முன்னால் உள்ள இருக்கை நேராக இருந்தால் தான் அப்படி செய்ய முடியும். எனவேதான் பயணிகள் நேராக அமர வேண்டும் என்கிறார்கள். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications