"லாஸ்ட் மினிட்ல" மிஸ்ஸாயிடுச்சே.. அதிர்ச்சியில் எடப்பாடி.. மோடி அப்படி என்ன சொன்னார்? காரணம் 'அவர்'
சென்னை: சென்னை வந்த பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் என்று சொல்லப்பட்டது.. இந்த சந்திப்புக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.. ஆனால், இவை எதுவுமே கடைசிவரை நடக்காமல் போய்விட்டது.. என்ன காரணம்?
பிரதமர் மோடி சென்னை வந்தபோது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க போவதாக செய்திகள் வெளியானது.. அதேபோல ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை சந்திக்க போவதாகவும் சொன்னார்கள்..
இரு தரப்புக்குமே பிரதமர் மோடி அப்பாயிண்மென்ட் தந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகவும், பரபரப்பு எகிறியது.. இரு தரப்பிலும் நேரம் ஒதுக்கப்பட்டதை அடுத்து பிரதமர் மோடியை பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக வரவேற்க போவதாகவும், அப்போது இரு தரப்புமே பேச உள்ளதாகவும் கூறப்பட்டது..

எடப்பாடி: அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்தித்து பேச மொத்தம் 15 நிமிஷம்தான் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஓபிஎஸ்ஸுக்கு வெறும் 10 நிமிஷம்தான் பிரதமரை சந்திக்க டைம் தந்திருப்பதாகவும் சொல்லப்பட்டது.. ஆனால், இவை எல்லாமே இன்று நொங்கிவிட்டது.. அதாவது, சென்னை வந்த பிரதமரை, ஆளுநர், முதல்வர் பொன்னாடை போர்த்தி வரவேற்ற நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் வரவேற்பு அளித்தனர். ஆனால், இருவரிடமும் பிரதமர் மோடி பேசவில்லை..
பன்னீர்செல்வம்: இந்த சமயத்தில், நம்முடைய ஒன் இந்தியா தமிழுக்கு மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில் "ஒருங்கிணைந்த அதிமுகவைதான் பாஜக எதிர்பார்க்கிறது.. சட்டப்போராட்டமும் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது.. இதெல்லாம் முடிவுக்கு வர இன்னும் 3 மாதமாவது டைம் எடுக்கும்... 2023- நவம்பர் அல்லது டிசம்பரில் ஓபிஎஸ், எடப்பாடி தரப்பு எப்படி இருக்கிறார்கள் என்பதை பார்த்துவிட்டு, அதற்கு பிறகு இவர்களை ஒன்றுபடுத்தும் முயற்சியில் இறங்கலாம்.. இன்றைய தினம் இவர்களை பிரதமர் மோடி சந்தித்தாலும்கூட, பொதுப்படையாக எந்த விஷயத்தையும் பேச வாய்ப்பில்லை..

அப்பாயிண்மென்ட்: தனியாக யாரை சந்தித்து பேசினாலும் அது தேவையில்லாத நெருடலை தந்துவிடும்.. இதில், எடப்பாடியை தனியாக சந்தித்து பேசினாலும் அது பிரச்சனை ஆகிவிடும்.. ஓபிஎஸ்ஸை தனியாக சந்தித்து பேசினாலும் பிரச்சனை.. கவர்னரை தனியாக சந்தித்து பேசினாலும் பிரச்சனைதான்.. அண்ணாமலையையும் தனியாக சந்தித்தாலும் பிரச்சனை.. அதனால், மொத்த பேரையும் ஒன்றாக சந்தித்துவிட்டு, கிளம்பவே பிரதமர் மோடி நினைப்பாரே தவிர, தனித்தனியாக பேச வாய்ப்பே கிடையாது" என்று தன்னுடைய கருத்தை கூறியிருந்தார்.. அதன்படியே, ஓபிஎஸ், எடப்பாடி என இருவரையுமே பிரதமர் மோடி சந்திக்கவில்லை.
15 நிமிடம்: இந்நிலையில், இது தொடர்பாக சில ஸ்பெஷல் நமக்கு கிடைத்துள்ளன.. அதாவது, அதிமுகவின் சீனியர் லீடர்களில் ஒருவரும் எடப்பாடிக்கு மிக நெருக்கமானவருமான தலைவர் ஒருவரிடம் நாம் இதுகுறித்து பேசினோம்.. அவர் நம்மிடம் சொல்லும்போது, "மோடியை சமீபத்தில் தம்பிதுரை சந்தித்துவிட்டு எடப்பாடியிடம் பேசிய அவர், சென்னை ஏர்போர்ட்டில் உங்களை மட்டும் சந்திக்க பிரதமர் சம்மதித்துவிட்டார். 15 நிமிடங்கள் பேசமுடியும். வழியனுப்ப நீங்கள் செல்லும்போது அவரை நீங்கள் சந்திக்கலாம் என தெரிவித்திருக்கிறார்.
ஆனால், மோடியை தம்பிதுரை சந்தித்தபோது, "இருவரையும் (ஓபிஎஸ், இபிஎஸ்) நாங்கள் பிரித்து பார்க்க முடியாது. சென்னையில் ஏர்போர்ட்டுக்கு வருபவர்களில் லிஸ்டில் அவர்கள் இருப்பார்கள். நேரமிருந்தால் சந்திக்கிறேன்" என்று மட்டுமே சொல்லியிருக்கிறார் மோடி. ஆனால், இதைத்தான் மோடி நேரம் ஒதுக்கிவிட்டார் என எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்தார். அதையே எடப்பாடியும் வெளிப்படுத்தினார். தம்பிதுரையின் வார்த்தையில் நம்பிக்கை வைத்த எடப்பாடி பழனிசாமி, சந்திப்பு நடக்கும் போது பேச வேண்டிய விசயங்கள் அனைத்தையும் ஒரு கடிதமாக தயாரித்தும் வைத்திருந்தார். அந்தளவுக்கு இந்த சந்திப்பை முக்கியமாக கருதினார் எடப்பாடி.
வழியனுப்பும் போது தன்னை அழைத்து தனிப்பட்ட முறையில் பேசுவார் என்றும் மிக நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், எடப்பாடியையும் பன்னீரையும் மோடி சந்திக்கவில்லை. யாருக்குமே நேரமும் தரவில்லை. நேரம் தந்திருந்தால்தானே அது ரத்து செய்வதற்கு? ஆக, நேரம் தந்திருப்பதாக தம்பிதுரையை நம்பி எடப்பாடிதான் சொன்னாரே தவிர, மோடியின் அதிகாரப்பூர்வ பயணத்தில் எடப்பாடியை சந்திப்பதாக பட்டியலில் இடம்பெறவில்லை. ஆக, தம்பிதுரை சொன்னதை நம்பி ஏமாந்துபோனார் எடப்பாடி. இந்த ஏமாற்றத்தை ஜீரணிக்க முடியாமல் தவிக்கும் எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்று மோடியை சந்தித்தே ஆக வேண்டும் என பகீரத முயற்சியில் இறங்கியுள்ளார்" என்றார் அந்த மூத்த தலைவர்.












Click it and Unblock the Notifications