அன்ரிசர்வ் பெட்டிகள் ஏன் முதலிலும், கடைசியிலும் இருக்கு? ரயிலில் ஜெனரல் கோச்-சில் இவ்ளோ வசதிகளா? செம
சென்னை: பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் போக்குவரத்தாக ரயில்களின் சேவைகள் திகழ்ந்து வருகின்றன.. எனினும், ரயில்வேயின் சில அம்சங்கள், ரயில்வே விதிமுறைகளை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அந்தவகையில், ஜெனரல் கோச்கள் ரயிலின் முன்புறமும், பின்புறமும் அமைக்கப்பட என்ன காரணம் தெரியுமா? ரயில்கள் தடம் புரண்டு போவதற்கு பிரதான காரணங்கள் என்னென்ன தெரியுமா? சுருக்கமாக பார்ப்போம்.
ரயிலில் ஜெனரல் கோச் என்று சொல்லப்படும் பொதுப்பெட்டி பிரதானமாக உள்ளன.. இதைததவிர, ஸ்லீப்பர், 3rd AC, 2nd AC, 1st AC போன்ற பெட்டிகளும் உள்ளன. இதில் பொதுப்பெட்டிகள் மட்டும் ரயிலின் முன்பக்கத்திலும், கடைசி பக்கத்திலும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஜெனரல் கோச்: ரயிலுக்கு முன்னால் அல்லது பின்னால் இந்த ஜெனரல் கோச் இணைக்கப்பட்டிருப்பற்கு என்ன காரணம் தெரியுமா? இந்த பொதுப்பெட்டிகளில்தான், பெரும்பாலான மக்கள் பிரயாணம் மேற்கொள்கிறார்கள்.. பயணிகள் அதிகமாக ஏறி, இறங்குவதும் இந்த ஜெனரல் கோச்களில்தான்..
அதிகம் பயன்பாடுகளை கொண்ட இந்த பொதுப்பெட்டியில் கூட்டமும் அதிகமாகவே இருக்கும். இதனால், ரயிலின் நடுப்பகுதியில் இந்த பொதுப்பெட்டியை அமைக்க முடியாது.. அப்படி அமைத்தால், ரயில் சமநிலையில் இருக்காது.. மேலும், இருக்கை அமைப்போடு மற்ற ஏற்பாடுகளையும் இந்த ஜெனரல் கோச் பாதித்துவிடும். இதுவே, ரயிலின் முன்புறமும், பின்புறமும் பொதுப்பெட்டிகளை அமைத்துவிட்டால், பயணிகள் கூட்டம் இரு பக்கமும் சமமாக பேலன்ஸ் ஆகிவிடும்..
பொதுப்பெட்டிகள்: அதுமட்டுமல்ல, விபத்து ஏற்பட்டாலோ அல்லது ரயில் திடீரென தடம் புரண்டுவிட்டாலோ, இதுபோன்ற அவசர காலங்களில்,, ஜெனரல் கோச்சில் உள்ள ஏராளமான பயணிகள் விரைவாக தப்பித்து வெளியேற முடியும்... ரயில்கள் புறப்படும் கடைசி நேரத்திலும், தங்களது ரயிலை எளிதாக அடையாளம் கண்டு விரைந்து ஓடிவந்து ஏறிவிடவும் முடியும். அதனால்தான், பொதுப்பெட்டிகள் ரயிலின் முதலிலும், கடைசியிலும் அமைக்கப்படுகின்றன.
அதேபோல, ரயில்கள் தடம் புரண்டு விபத்து ஏற்படுவதற்கு என்ன காரணம் தெரியுமா? தண்டவாளங்கள், உள்கட்டமைப்பின் மோசமான பராமரிப்பு, போன்றவைகளால் ரயில்கள் தடம் புரள்கின்றன.
தேய்மானங்கள்: நம்முடைய இந்தியாவை பொறுத்தவரை, பல ரயில் தடங்கள் மிகவும் பழமையானவை.. இவைகளில் சில காலாவதியானவையும்கூட.. இதுபோன்ற தண்டவாளங்கள் தேய்மானத்திற்கு வழிவகுத்துவிடுவதுடன், தடம் புரளும் அபாயத்தையும் அதிகரிக்க செய்கின்றன.
மேலும், முறையற்ற சீரமைப்பு, எச்சரிப்பூட்டும் கருவிகளின் பற்றாக்குறை, பாலங்கள், சுரங்க பாதைகளின் பராமரிப்பு, ரயில்களில் அதிகளவில் பயணிகளால் உண்டாகும் சுமை, சரக்கு ரயில்களில் அதிக சுமை ஏற்றுவது போன்றவைகளால், நிலைமை இன்னும் மோசமாகிவிடுகிறது. அதிகளவில் எடையை ரயிலில் ஏற்றுவதால், தண்டவாளங்கள், மற்றும் சக்கரங்களில் அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டு, இதுவும் விபத்துகளுக்கு காரணமாகிவிடுகின்றன.
இயற்கை சீற்றங்கள்: அதுமட்டுமல்ல, ஓட்டுநர் சோர்வு, போதிய பயிற்சியின்மை, அலட்சியம், தகவல் தொடர்பு செயலிழப்பு, தீவிர வானிலை, நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை காரணிகளால், தடங்கள் பலவீனமாகி, ரயில்களை தடம் புரள செய்துவிடுகின்றன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications