Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனிப்பட்ட தாக்குதல் ஏன்? சொல்லவா? பிரதீப் ஜான் மீது பாய்ந்த சுமந்த் சி ராமன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானுடன் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் விரிவான விளக்கம் அளித்திருக்கிறார்.

பெஞ்சல் வருமா? வராதா? அப்படி வந்தால் அதன் தாக்கம் எப்படி இருக்கும்? காற்றின் வேகம் மணிக்கு எத்தனை கிமீட்டர் இருக்கும் என மக்கள் பல விசயங்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் போது, இந்த அடைமழை நடுவே எக்ஸ் தளத்தில் இருவர் அடிதடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

tamil nadu weatherman sumanth c raman

அந்தச் சண்டையின் வேகம் பெஞ்சல் புயலைவிட ஆக்ரோஷமாக இருக்கிறது. பலருக்கும் நாம் யாரைச் சொல்கிறோம் என்பது தெரிந்திருக்கும். அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமனுக்கும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானுக்குமிடையே எக்ஸ் தளத்தில் வார் தொடங்கி நடந்து வருகிறது.

இது முதல்முறை அல்ல. ஒரு ஆண்டுக்கு முன்பே இருவருக்கும் இடையே ஒரு மோதல் நிலவியது. கடந்த ஒரு மாதம் முன்னதாக ஒரு சண்டை நடந்தது. சுமந்த் சி ராமன், "அரசியல் கட்சிகள் டாக்டர் அணி, வழக்கறிஞர் அணி என வைத்துள்ளதைப் போல இப்போது வெதர் விங்க் எனத் தனியாக ஆரம்பித்துள்ளனர்" என்று மறைமுகமாக விமர்சித்திருந்தார். அதற்கு பிரதீப் ஜான், "நீங்கள் எந்த அணியில் இருக்கிறீர்கள்? பூமர் அணியா? அல்லது ஆல் இன் ஆல் எக்ஸ்பர்ட் அணியா? சும்மா நொய் நொய் என்று பேசாதீர்கள்' என்று பதிலடி கொடுத்திருந்தார்.

இப்போது ஒரு பாப்புலர் வெதர்மேன் ஒருவர் என்று சுமந்த் போட்ட ட்வீட் மீண்டும் பிரதீப் ஜான் பதிலளிக்கப் போய் சண்டையில் போய் முடிந்துள்ளது. பிரிதீப் ஜான் எக்ஸ் தளத்தில் 5 லட்சத்திற்கும் மேலான பேர் அவரைப் பின் தொடர்கிறார்கள். சுமந்த் சி ராமனை 3.5 லட்சம் பேருக்கு மேல் பின் தொடர்கின்றனர். இருவருமே எக்ஸ் தளத்தில் பிரபலமானவர்கள்.

இந்த விவகாரம் குறித்து பேட்டி அளித்துள்ள சுமந்த் சி ராமன், "இந்தப் பிரச்சினையில் என்ன நடந்தது என்று தெளிவாக விளக்கிவிடுகிறேன். நான் சென்னையில் வினாடி வினா போட்டியை வருடம் தோறும் நடத்துகிறேன். அதில் பங்கேற்பவர்களுக்குப் பரிசுகளை தருவோம். அந்தப் போட்டிக்காகப் பல பிரபலங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கும்படி அணுகி இருக்கிறேன். பலர் பதிலளிப்பார்கள். சிலர் பதில் சொல்லவே மாட்டார்கள். இவரிடமும் நான் அப்படிக் கேட்டுள்ளேன். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. இது நடந்து சில வருடங்கள் இருக்கலாம். அது எனக்கு நினைவு இல்லை.

நான் பொதுவாக வானிலை பற்றி தகவல் தருபவர்கள் பற்றி ஒரு ட்வீட் போட்டேன். அதில் இவர் பெயரே இல்லை. அதற்கு மறுப்பு தெரிவிக்க வந்த பிரதீப் ஜான் நான் அவரிடம் வாட்ஸ் அப் மூலம் செய்தி அனுப்பியதைச் சுட்டிக்காட்டித் தான் பதிலளிக்காததால்தான் இப்படிச் சொல்லிவிட்டேன் எனச் சொன்னார். நான் அந்த நிகழ்ச்சியை 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். பலரும் அதில் பங்கேற்பார்கள். பங்கேற்காமலும் போவார்கள். அது அவர்களின் சொந்த விருப்பம். இவர் ரிப்ளை செய்யாததால்தான் நான் இப்போது விமர்சிக்கிறேன் என்பது எப்படி சரி?

tamil nadu weatherman sumanth c raman

இதே மாதிரி போன வருடமும் பர்சனலாக என்னைத் தாக்கினார். நான் புகழ்பெற்ற வானிலை அறிவிப்பாளர் என சொன்னதும் இவர் வந்து பதிலளிக்கிறார். அவர்தான் பிரபலமானவர் என்று அவரே நினைத்துப் பதிலளித்தார். வானிலை அறிக்கை என்பதைத்தாண்டி அவர் சில அரசின் நடவடிக்கை பற்றிய விசயங்களைப் பேசும் போது, அதற்குச் சிலர் பதில் கொடுக்கத்தானே செய்வார்கள்? அவர் கட்சி சார்ந்து இருக்கிறாரா என எனக்குத் தெரியாது. அவரை ஆதரிக்கிறவர்களில் பலர் திமுகவைச் சேர்ந்தவராக உள்ளனர். அப்படி எனில் சந்தேகம் வருமா? வராதா?

முன்பு இந்தச் சந்தேகம் இல்லை. சமீபத்தில் எனக்குத் தோன்ற ஆரம்பித்தது. முன்பே அவரை அப்படி நினைத்திருந்தால் அவர் எக்ஸ் பக்கத்தை நான் பின் தொடர்ந்திருக்க மாட்டேன். அவர் போட்ட பல ட்வீட்களை நான் ரீட்வீட் செய்திருக்கமாட்டேன். அவர் நடுநிலையாக இல்லை என இப்போதுதான் நினைக்கிறேன். அவர் செயல்பாடு அப்படி உணர்த்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+