வங்கி கணக்கில் வரவேண்டிய.. வருமான வரி ஐடிஆர் ரீபண்ட்! உங்களுக்கு இன்னும் வரவில்லையா.. இதுதான் காரணம்
சென்னை: பல லட்சம் பேர் வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தும் இன்னும் வருமான வரி தொகை வரவில்லை என்று புலம்பிக்கொண்டு உள்ளனர். சிலருக்கு பணம் வந்துவிட்டாலும்.. இன்னும் பலருக்கு பணம் வரவில்லை. அதற்கு பின்வரும் விஷயங்கள் காரணமாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் பலருக்கும் கடந்த வாரங்களில் அனுப்பப்பட்டது. குறித்த நேரத்தில் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பலருக்கும் ரிட்டர்ன்ஸ் கிடைத்துவிட்டது. பலருக்கும் அவர்களின் வங்கி கணக்கில் பணம் போடப்பட்டு வருகிறது. இன்னும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய இரண்டு வாரங்கள் உள்ளன. தாமதம் ஆக ஆக ரிட்டர்ன் வர போகும் பணமும் தாமதம் ஆகும்.

சிலருக்கு வருமான வரி ரிட்டன்ஸ் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான இன்டிமேஷன் அளிக்கப்பட்டுவிட்டது. விரைவில் அவர்களுக்கு ரீ பண்ட் தொகை அளிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சிலருக்கும் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தும் இன்னும் ரீ பண்ட் கிடைக்கவில்லை. இதற்கான காரணங்கள் விளக்கப்பட்டு உள்ளன.
என்ன காரணம்?: அதன்படி இன்னும் 14 லட்சம் பேருக்கும் மேல் இன்னும் வருமான வரி ரிட்டர்ன்ஸ் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுவரை கிட்டத்தட்ட ஒன்றரை கோடி பேருக்கு ரிட்டர்ன்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.
முதலாவதாக, வருமான வரி ரிட்டன் (ITR) படிவத்தில் உள்ள தவறான அல்லது முழுமையடையாத தகவலே கொடுக்கப்பட்டு இருந்தால் அதுவே வரி திரும்பப் பெறாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கும். வங்கி விவரங்கள், குடியிருப்பு முகவரி அல்லது மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், உங்கள் வரி திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். எனவே, உங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது வழங்கப்பட்ட தகவல்களின் துல்லியத்தை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.
பெரிய தவறு: இதில் கிட்டத்தட்ட பல லட்சம் பேர் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்துவிட்டு அதை இ வெரிஃபிகேஷன் செய்யாமல் விட்டுள்ளனர். ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பின் அதை வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் செய்யவில்லை. இதனால் இவர்களுக்கு இன்னும் பணம் அனுப்பப்படவில்லை. இதையடுத்து இவர்கள் உடனடியாக தங்கள் இ வெரிஃபிகேஷனை செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யப்படும். இல்லையென்றால் இதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முறையாக தாக்கல்ஸ் செய்து இ வெரிஃபிகேஷன் செய்தவர்களுக்கு ஏற்கனவே ரி பண்ட் சென்றுவிட்டது.
வருமானத்தில் வரி செலுத்துவோரின் கோரிக்கைகளை நிரூபிக்கும் விதமாக சில கூடுதல் ஆவணங்கள் வரி அதிகாரிக்கு தேவைப்படுவதும் உண்டு. உதாரணமாக நீங்கள் லோன் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்.. ஆனால் உங்கள் கணக்கில் வீட்டு லோனிற்கான ஆதாரங்கள் இல்லையென்றால் அதற்கான ஆதாரங்கள் உங்களிடம் கேட்கப்படும். இதுபோன்ற சமயங்களில், வரி செலுத்துபவருக்கு இவற்றை வழங்குமாறு வரி அலுவலர் கோரிக்கைகளை அனுப்புவார். இவை வரி அதிகாரியால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவுடன், ரிட்டர்ன் தரப்படும்.
இந்தியாவில் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தவர்களின் கிட்டத்தட்ட பல லட்சம் பேருக்கு பணம் அனுப்பப்படவில்லை இவர்கள் உடனடியாக இ வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். வேறு காரணங்களுக்காக கணக்கில் பணம் பெறாதவர்கள் உடனடியாக அந்த தவறுகளை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் ஐடி ரிட்டர்ன்ஸ் அவர்களுக்கு நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
எப்படி கண்டுபிடிக்க வேண்டும்?: வருமான வரிக்கான் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தும் உங்களுக்கு இன்னும் வருமான வரி தொகை வரவில்லை என்றால் பின்வரும் சோதனையை செய்யுங்கள்.
அதன்படி https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற வருமான வரித்துறை பக்கத்திற்கு செல்லவும். அதில் இன்கம் டேக்ஸ் ரிட்டன் (ITR) ஸ்டேட்டஸ் பக்கத்தில் சென்று உங்கள் லாகின் விவரங்களை கொடுத்து லாகின் செய்யவும்.
இதில் 'இன்கம் டேக்ஸ் ரிட்டன் (ITR) ஸ்டேட்டஸ்' பகுதியை கிளிக் செய்தால் அதில் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்தது கிரீன் கலரில் இருக்க வேண்டும். அதன்பின் இ வெரிஃபிகேஷன் செய்தது கிரீன் கலரில் இருக்க வேண்டும். கடைசியாக processing மட்டும் கிரீன் ஆகாமல் இருக்கும்.
அப்படி இருந்தால் அதன் அர்த்தம் விரைவில் உங்கள் ரிட்டர்ன் சோதனை செய்யப்பட்டு பணம் கொடுக்கப்படும். ஒருவேளை அதுவும் கிரீன் கலரில் இருந்தும் உங்களுக்கு பணம் வரவில்லை என்றால் உங்கள் மெயிலை சோதனை செய்யவும். அதில், இன்கம் டேக்ஸ் நோட்டிஸ், விளக்கம் கேட்டு மெயில் எதுவும் வந்துள்ளதா என்று பார்க்கவும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications