ஐடிஆர் ரிட்டர்ன்ஸ்.. புதிய வருமான வரி பிரிவை தேர்வு செய்துள்ளீர்களா? பல ஆயிரங்கள் உங்களை தேடி வரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரியில் மிக முக்கியமான விஷயம், நாம் எந்த வரி முறையை தேர்வு செய்கிறீர்கள் என்பதுதான். பழைய வருமான வரி பிரிவில் இருக்கும் பலரும் புதிய வருமான வரி பிரிவிற்கு மாற தொடங்கி உள்ளனர். முக்கியமாக புதிய வருமான வரி பிரிவிற்கு 12.75 லட்சம் ரூபாய் வரி விலக்கு கிடைக்கும் என்பதால் பலரும் அதை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

ஆனால் இதில் HRA விலக்கு.. அதாவது வீட்டு வாடகைக்கு கொடுக்கப்படும் படியில் விலக்கு பெற முடியாது. புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. அதாவது NPS.. தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடுகள் செய்தால் அதற்கு மட்டும் விலக்கு பெற முடியும். அதை தவிர வேறு எதற்கும் ஒரு ரூபாய் கூட விலக்கு பெற முடியாது. 12.75 லட்சம் ரூபாய் வரை இதில் உங்களுக்கு வரியே இருக்காது. இத முறைப்படி இதில் HRA விலக்கு.. அதாவது வீட்டு வாடகைக்கு கொடுக்கப்படும் படியில் விலக்கு பெறவும் முடியாது. ஏனென்றால் அந்த சலுகையும் இதில் கிடையாது. ஏனென்றால் மொத்தமாக 12.75 லட்சம் ரூபாய் வரை இதில் உங்களுக்கு வரியே இருக்காது. ஆனால் இந்த முறை மூலம் நீங்கள் 5 வகையான வரி விலங்குகளை பெற முடியும். இதன் மூலம் பல ஆயிரங்களை சேமிக்க முடியும்.

Do you know you can get 5 kinds of exemptions from Tax in the New Tax Regime

நிலையான விலக்கு ₹75,000

புதிய வரி முறையில் நீங்கள் ₹ 75,000 நிலையான விலக்கு பெற முடியும். இந்த விலக்கு உங்கள் மொத்த வருமானத்திலிருந்து கழிக்கப்படும். இதன் மூலம் நேரடியாக வரி குறையும். ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இருவரும் இதன் மூலம் பலனைப் பெறுகிறார்கள்.

பணிக்கொடை மற்றும் ஓய்வு விடுப்பு பணம்

நீங்கள் உங்கள் வேலையில் இருந்து ஓய்வு பெறுகிறீர்கள் என்றால், உங்கள் கிராஜுவிட்டி அல்லது எடுக்கப்படாத விடுமுறை தினத்திற்கான பணத்தைப் பெறுகிறீர்கள் என்றால், இந்தத் தொகை முழுவதும் வரி விலக்கிற்கு உட்பட்டது. நீங்கள் புதிய அல்லது பழைய வரி முறையைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் இந்த விலக்கு அளிக்கப்படும்.

NPS க்கு பங்களிப்பு

உங்கள் நிறுவனம் உங்கள் சம்பளத்தில் 14% வரை NPSக்கு பங்களித்தால், அந்தத் தொகை முற்றிலும் வரி விலக்கிற்கு பொருந்தும். இந்த விலக்கு பிரிவு 80CCD (2) இன் கீழ் கிடைக்கிறது.

அக்னிபத் யோஜனா உள்ளவர்களுக்கு சிறப்பு நிவாரணம்

அக்னிபத் திட்டத்தில் கார்பஸ் நிதிக்கு செய்யப்படும் எந்தவொரு பங்களிப்புக்கும் பிரிவு 80CCH இன் கீழ் வரிவிலக்கு உண்டு. இது இளைஞர்கள் மற்றும் ராணுவ ஆட்சேர்ப்புக்கு பெரும் நிவாரணமாக உள்ளது. புதிய பிரிவில் இதில் நிவாரணம் பெறலாம்.

குடும்ப ஓய்வூதியத்தில் ₹25,000 விலக்கு

நீங்கள் எந்த வகையான குடும்ப ஓய்வூதியத்தைப் பெற்றாலும், புதிய வரி முறையில் ₹ 25,000 வரை விலக்கு பெறலாம்.

புதிய வருமான வரி

புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது. அதுவே நீங்கள் 15 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் உங்களின் 15 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது

உங்களின் சம்பளத்தின் முதல்

0-4 லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை
4-8 லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்
8-12 லட்சம் ரூபாய்க்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்
12-16 லட்சம் ரூபாய்க்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படும்
16-20 லட்சம் ரூபாய்க்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும்
20-24 லட்சம் ரூபாய்க்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+