Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆன்லைன் மயமான ஊராட்சிகள்.. இனி கிராம வரி செலுத்துவதில் அதிரடி மாற்றம்.. இதை முதலில் படிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளில் பொது மக்கள் செலுத்தும் அனைத்து விதமான வரிகளும் நாளை முதல் ஆன்லைன் மூலமாக பெறப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு சார்ந்த துறைகள் பலவும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. மக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை சேவைகள் பல டிஜிட்டல் மயமாகிக்கொண்டு இருக்கிறது.

Do you know, you can pay taxes only through online here after, no more offline services?

அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளில் சேவைகள் டிஜிட்டல் மயமாகி உள்ளன. அதன்படி பொது மக்கள் செலுத்தும் அனைத்து விதமான வரிகளும் நாளை முதல் ஆன்லைன் மூலமாக பெறப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

பொதுமக்கள் போன் மூலம் யுபிஐ வைத்து பணம் செலுத்த முடியும். இப்போது கிட்டத்தட்ட எல்லோரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது.

அதை வைத்து பணம் செலுத்த முடியும். இல்லையென்றால் டெபிட் கார்ட் மூலமாகவும் பணத்தை இனி கிராம பஞ்சாயத்துகளில் செலுத்த முடியும்.

இந்த புதிய முறை மூலம் நாளை முதல் ஆன்லைன் மூலமாக கட்டணம் பெறப்படும் என்று தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதன் மூலம் அரசுக்கு செலுத்தப்படும் பணம் பஞ்சாயத்து அளவில் திருடப்படாமல் நேரடியாக அரசின் கஜானாவிற்கு செல்லும். இதனால் பஞ்சாயத்துகளில் முறைகேடுகள் தவிர்க்கப்படும்.

டிஜிட்டல் சேவைகள்

சமீபத்தில் ரேஷன் கடைகளிலும் இதே போல ஆன்லைன் கட்டணம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது பணமாக செலுத்தாமல் யுபிஐ மூலம் செலுத்த வேண்டும்.

ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த மூன்று மாதங்களில் இந்த விநியோக முறையில் சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சுமார் 2.2 கோடி குடும்ப அட்டைகள் இருக்கிறது. இதன் மூலம் சுமார் 7 கோடி பேர் பயனடைகிறார்கள். எல்லோருக்கும் இந்த புதிய வசதி கொண்டு வரப்படும். அரசின் குறிப்பிட்ட துறைகளில் உள்ள கஜானாவிற்கு நேரடியாக பணம் செல்ல இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது.

இன்னொரு மின்சார கட்டணம் ரூபாய் 1000 அல்லது 2000 மேல் வந்தால் ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணத்தை கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதில் 1000 ரூபாயா அல்லது 2000 ரூபாயா என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை., தற்போது 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் இருந்தால் அதை மின்சார நிலையங்களில் செலுத்த முடியாது. ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.

இனிமேல் மின்சார கட்டணம் ரூபாய் 2000க்கு மேல் வந்தால் அதை ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருகின்றதாம்.

மின்சார நிலையங்களில் கூடுதல் பணம் கையாள்வதை தவிர்க்கவும், மக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்கவும் இந்த முறையை கொண்டு வர மின்சார வாரியம் திட்டமிட்டு உள்ளதாம்.

ஆனால் இன்னும் இந்த புதிய விதி நடைமுறைக்கு வரவில்லை. முறையான ஆலோசனைக்கு பின்பே இந்த விதி நடைமுறைக்கு வருவது பற்றி முடிவு எடுக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+