ரேஷன் + ஆதார்.. இபியில் பெயர் மாற்ற முகாம்.. என்னென்ன ஆவணங்கள் தரணும்? தங்கத்தின் தங்கமான அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மின்சார இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக மின்சாரத்துறை வாரியம் தற்போது சிறப்பு முகாமை நடத்தி வருகிறது. இந்த முகாம் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மின்சார இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதன்படி கடந்த 24ம் தேதி முதல் தமிழ்நாடு முழுக்க இபி நிலையங்களில் இதற்காக முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இபி இணைப்புகளில் பெயர் மாற்றம் வேறு மாற்றங்களை செய்ய விரும்பும் மக்கள் இந்த நாளில் இலவசமாக செய்யலாம். இந்த பணிகளை அதிகாரிகள் முறையாக செய்ய வேண்டும். இது தொடர்பாக மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.
அதேபோல் மாநிலம் முழுக்க மின்தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சீரான மின்விநியோகம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கூறினார். எங்கெல்லாம் மின் கம்பங்கள் சரியாக இல்லையோ அங்கெல்லாம் உடனே மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
ஆவணங்கள்: இதற்காக என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி ஆதார் அட்டை இதற்கு கண்டிப்பாக அவசியம். ரேஷன் அட்டை கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நகராட்சி, மாநகராட்சி பகுதி என்றால் சொத்து வரி செலுத்திய ஆவணம் அவசியம்.
அதுவே இறந்தவர்கள் பெயரை நீக்கி வாரிசு பெயரை கொண்டு வர சொத்து பகிர்வு பத்திரம் அல்லது செட்டில்மெண்ட் பத்திரம் வேண்டும். பொது மினசாரத்திற்கு வீடுகளில் உள்ள எல்லோரின் கையெழுத்து கொண்ட ஆவணம், சொத்து வரி பத்திரங்கள் அவசியம் ஆகும்.
அதிரடி மாற்றங்கள்: தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதவி ஏற்றதில் இருந்து முக்கியமான நல்ல செய்திகளை சொல்லி இருக்கிறார். சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின் மாதம் மாதம் மின் கட்டணம் வசூலிக்கப்படும். 2 மாத நடைமுறை கைவிடப்படும்.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது தொடர்பாக அபராதம் எதுவும் அறிவிக்கப்படவில்லை . அதனால் பொறுத்த முடியாமல் போகும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது. இரவு நேரங்களில் 20 சதவிகிதம் கூடுதல் மின்சார கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசு திட்டத்திற்கு தமிழ்நாட்டில் அனுமதி கிடையாது என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
விரைவில் மாற்றம்: இது போக மின்சார கட்டணம் ரூபாய் 1000 அல்லது 2000 மேல் வந்தால் ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணத்தை கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதில் 1000 ரூபாயா அல்லது 2000 ரூபாயா என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை., தற்போது 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் இருந்தால் அதை மின்சார நிலையங்களில் செலுத்த முடியாது. ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.
இனிமேல் மின்சார கட்டணம் ரூபாய் 2000க்கு மேல் வந்தால் அதை ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருகின்றதாம்.மின்சார நிலையங்களில் கூடுதல் பணம் கையாள்வதை தவிர்க்கவும், மக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்கவும் இந்த முறையை கொண்டு வர மின்சார வாரியம் திட்டமிட்டு உள்ளதாம்.












Click it and Unblock the Notifications