அமலுக்கு வரும் புதிய வருமான வரி சட்டம்.. மீண்டும் வரி Regimeஐ மாற்ற வேண்டுமா? சம்பளதாரர்கள் கவனம்!
சென்னை: புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இனிமேல்.. வருமான வரி பிரிவை மீண்டும் தேர்வு செய்ய வேண்டுமா என்ற கேள்வி பலருக்கும் வந்துள்ளது. அதாவது பொதுவாக வருமான வரி கட்ட தொடங்கும் எல்லோருக்கும் தானாக புதிய வருமான வரி பிரிவே 2020க்கு பின் தேர்வு செய்யப்படும். தேவை உள்ளவர்கள் பழைய வருமான வரி பிரிவிற்கு மாறலாம். தற்போது புதிய வருமான வரி பிரிவில் பல சலுகைகள் தரப்படுவதால் பலர் மீண்டும் புதிய வருமான வரி பிரிவிற்கே மாற விரும்புகின்றனர்.
இப்போது புதிய வருமான வரி சட்டம் காரணமாக பழைய முறையில் உள்ளவர்கள் தானாக புதிய முறைக்கு மாறுவார்களா.. இவர்கள் மீண்டும் பழைய முறைக்கு மாற வேண்டுமா என்ற கேள்வி பலருக்கு எழலாம். ஆனால் புதிய சட்டப்படி.. நீங்கள் கடந்த நிதி ஆண்டில் எந்த பிரிவில் இருந்தீர்களா அதே பிரிவில்தான் தொடருவீர்கள். நீங்களாக மாற்றாத வகையில் உங்களின் வருமான வரி பிரிவு மாற்றப்படாது.

உங்கள் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யும் போது, பழைய வரி முறை மற்றும் புதிய வரி முறைகளில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம். நீங்கள் வரி பிரிவை மாற்ற விரும்பினால், பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:
சம்பளம் வாங்கும் நபர்கள் எப்படி மாறுவது?
உங்கள் எச்.ஆரிடம் இதை பற்றி அறிவிக்க வேண்டும்.
நிதியாண்டின் (ஏப்ரல்) தொடக்கத்தில் பணியாளர்கள் தங்களுக்கு விருப்பமான வரி விதிப்பைத் தேர்ந்தெடுக்குமாறு எச். ஆர் உங்களிடம் கேட்பார்கள். அப்போது நீங்கள் தெரிவிக்கலாம்.
நீங்கள் ஏற்கனவே ஒரு முறையை தேர்ந்தெடுத்திருந்தாலும், மாற்ற விரும்பினால், உங்கள் எச். ஆரிடம் கூறலாம். ஆண்டின் நடுப்பகுதியில் மாற்றங்களை அனுமதித்தால் மாறிக்கொள்ளலாம்..
இல்லையென்றால் ஜூலை 31ம் தேதிக்கு முன் நீங்கள் ஐடிஆர் பைல் செய்யும் போது வருமான வரி பிரிவை மாற்றிக்கொள்ள முடியும்.
நீங்கள் சம்பளம் வாங்கும் நபர் என்றால் எத்தனை முறை வேண்டுமானாலும் பழைய - புதிய வரி முறை இடையே மாற முடியும்.
நீங்கள் சொந்தமாக பிஸ்னஸ் செய்பவர் என்றால் அதற்காக Form 10-IE ஐ நிரப்ப வேண்டும்.
பிஸ்னஸ் செய்பவர்கள்.. ஒருமுறை பழைய முறையில் இருந்து புதிய முறைக்கு மாறிவிட்டீர்கள் என்றால் மீண்டும் ஒரே ஒரு முறை மட்டுமே பழைய முறைக்கு செல்ல அனுமதிக்கப்படுவீர்கள்.
வருமான வரி சட்டம்
'வருமான வரி மசோதா 2025' என அழைக்கப்படும் புதிய வருமான வரி மசோதா, ஏப்ரல் 1, 2026 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. நேற்று இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
தற்போதுள்ள வருமான வரிச் சட்டம், 1961, மொத்தம் 298 பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்த புதிய I-T மசோதாவில் இது 536 உட்பிரிவுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது, தற்போதுள்ள வருமான வரிச் சட்டம், 1961க்குப் பதிலாக கொண்டுவரப்படும். மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, இது 'வருமான வரிச் சட்டம், 2025' என்று அழைக்கப்படும்.
'மதிப்பீட்டு ஆண்டு', 'நிதி ஆண்டு' மற்றும் 'முந்தைய ஆண்டு' ஆகிய வார்த்தைகளை 'வரி ஆண்டு' என்று மாற்றும். வரி ஆண்டு என்று ஏப்ரல் 1, 2026 முதல் 12 மாத நிதிக் காலத்தை கொண்டது ஆகும். இதன் வரைவு மசோதா தற்போது வெளியாகி உள்ளது. இந்த மசோதா 600 பக்கங்கள், 23 அத்தியாயங்கள், 16 அட்டவணைகள் மற்றும் 536 உட்பிரிவுகள் (மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு பிரிவுகளாக மாறும்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
எந்த முறை முக்கியம்
புதிய வருமான வரி பிரிவின் கீழ் உள்ளவர்களுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஏற்கனவே நிலையான கழிவு 75 ஆயிரம் வரும். இதன் மூலம் 12.75 லட்சம் வரை வரி கிடையாது. இந்த மாற்றங்கள் புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கே அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது வருமான வரி விதிப்பில் இரண்டு முறைகள் உள்ளன. இந்த இரண்டு முறைகளில் ஒன்றை மக்கள் தேர்வு செய்ய முடியும்.
புதிய வருமான வரி முறை; புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது.
அதன்படி புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது.
அதுவே நீங்கள் 13 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால்.. அதாவது உங்களின் சம்பளம் 12 லட்சத்திற்கு மேல் போகும் போது
உங்களின் முதல்
0-4 லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை
4-8 லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்
8-12 லட்சம் ரூபாய் 10 சதவீதம் வரி விதிக்கப்படும்
12-16 லட்சம் ரூபாய் 15 சதவீதம் வரி விதிக்கப்படும்
16-20 லட்சம் ரூபாய் 20 சதவீதம் வரி விதிக்கப்படும்
20-24 லட்சம் ரூபாய் 25 சதவீதம் வரி விதிக்கப்படும்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்
பழைய வரி விதிப்பு முறை. அது நீங்கள் பழைய வருமான வரி முறையை தேர்வு செய்து இருந்தால்.. நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.
10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications