"தக் லைப்" கவிதா ராமு.. டிரான்ஸ்பரான புதுக்கோட்டை ஆட்சியர்! வேங்கைவயல் "மாஸ்" சம்பவம் நினைவிருக்கா?
சென்னை: வேங்கைவயலில் பட்டியலின மக்களின் குடிநீர் தொட்டியில் மலம் கொட்டிய விவகாரம் தொடர்பாக, அந்த கிராமத்துக்கே சென்று கோயிலுக்குள் தலித்துகளை அழைத்து சென்ற புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவும் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.
தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு நேற்று பல்வேறு மாவட்டங்களில் செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார். அதன்படி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியராக அன்னீ மேரி ஸ்வர்னா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேகப் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். கிருஷ்ணகிரி ஆட்சியராக சராயு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். திண்டுக்கல் ஆட்சியராக பூங்கொடி நியமனமிக்கப்பட்டு இருக்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக கலைச்செல்வி மோகன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். மதுரை மாவட்ட ஆட்சியராக சங்கீதாவும் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆஷா அஜித் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யாவை நியமனம் செய்திருக்கும் தமிழ்நாடு அரசு, நாமக்கல் மாவட்ட ஆட்சியராக உமாவை நியமித்து உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக விஷ்னு சந்திரன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக ராகுல்நாத் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியராக கிருஸ்துராஜ் நியமனம் செய்யப்பட்டு உல்லார். ஈரோடு ஆட்சியராக ராஜ கோபால் சுங்கரா நியமனமிக்கப்பட்டு உள்ளார். இதில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக தற்போது மெர்சி ரம்யா நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இதற்கு முன் ஆட்சியராக இருந்த கவிதா ராமு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு இருந்தபோதுதான் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் அருகே வேங்கைவயலில் ஏற்பட்ட இந்த நிகழ்வு மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியராக இருந்த கவிதா ராமு, புதுக்கோட்டை எஸ்பி ஆகியோர் நேரில் ஆய்வு செய்ய சென்றார். அப்போது உயர்சாதியினர் தலித் மக்களை கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பதாகவும், மாநிலத்தில் இரட்டை குவளை முறை தொடர்வதாகவும் தலித் மக்கள் அவரிடம் தெரிவித்தனர்.
உடனே தலித் மக்களை அழைத்துக்கொண்டு கவிதா ராமு கோயிலுக்குள் சென்றார். இதனை எதிர்த்து அங்கேயே ஒரு பெண் சாமியாடி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது தொடர்பாக சாமியாடிய பெண், இரட்டை குவளை முறையை கடைபிடித்த தேனீர்கடை உரிமையாளர் உட்பட 4 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கவிதா ராமுவின் இந்த செயல் அப்போது பல்வேறு பாராட்டுக்களை பெற்றது. அதே நேரம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் யார் என்று கண்டுபிடித்து மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அரசு மீது உள்ளது. இந்த நிலையில் கவிதா ராமு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications